16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..
ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும்..இந்த தொகை நிலுவை சம்பளத்திற்கான தொகையை விட குறைவில்லாமல் இருக்க வேண்டும்..மறு உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கும் வரை ஒப்பந்தகாரர்களுக்கு பில் தொகை கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட பிறகும் கூட இன்றைய தேதி வரை நிர்வாகம் நிலுவை சம்பளத்தை கணக்கீடு செய்யவோ சொல்லப்பட்ட தேதியில் பணத்தை செலுத்தவோ முன்வரவில்லை..மீண்டும் இந்த முறையும் நிர்வாகம் 5 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்தார்கள்.. ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே வேலை செய்தமைக்கு சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.. சம்பள நிலுவை தொகை என்பது பல கோடி ரூபாய்களாக இருக்கிற காரணத்தால் ஒரு சிறப்பு எற்பாடு செய்து RLC நிலுவை தொகையை தொழிலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு பிறகு அந்த தொகையை நிர்வாகம் RLC யிடம் செலுத்த வேண்டும்.. முந்தைய இடைக்கால உத்தரவுகளும் தற்போதைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு நிர்வாகம் நிலுவை தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மண்டல தொழிலாளர் ஆணையரிடம் செலுத்த வேண்டும்.. அதற்கு பிறகு அனைத்து தரப்பும் நிலுவை சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்கான செயல் முறையை கண்டறிய வேண்டும்.. இடைக்கால உத்தரவுகள் நிர்வாகம் அனைத்து ஒப்பந்தகாரர்களின் மொத்த பில் தொகையினை சரி பார்த்து அதில் 25% தொகையை மண்டல தொழிலாளர் ஆணையர் துவங்கப்பட வேண்டிய தனி வங்கி கணக்கான 'Contract Workers Wage Due WP 34513 ' என்ற வங்கி கணக்கில் 31.10.2020 குள் செலுத்த வேண்டும்.. மீதமுள்ள 25% நிலுவை தொகையை 20.11.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. 50% நிலுவை தொகையை 20.12.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. இந்த மாதம் இறுதிக்குள் செலுத்தப்படுகிற 25% நிலுவை தொகை என்பது தீபவளிக்கு முன்பு ஒரு பகுதி சம்பளத்தையாவது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.. நிர்வாகம் நிலுவை தொகையை நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்குள் கறாராக செலுத்த வேண்டும்.. அடுத்த விசாரணை 05.11.2020 அன்று நடைபெறும்.. TNTCWU மாநில சங்கம்
No comments:
Post a Comment