அஞ்சலி
காலமானார் தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!
ஜோகன்ஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமானநெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலகுறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர்ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.பிறப்பும் இளமையும்: தென்னாப்பரிக்காவில் உள்ளகுலு கிராமத்தில்1918-ம் ஆண்டுஜூலை மாதம்பிறந்த நெல்சன் மண்டேலாசிறுவயது முதல்குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார்.இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா.லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்டகல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில்சேர்ந்தார்.தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து
பல்வேறுபோராட்டங்களைமுன்னின்று நடத்தினார்.
அரசியல் போராட்டம்: தென்னாப் பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்தவந்த போதிலும்,சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர்.இதனை கண்ட மண்டேலா1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார்.போரட்டத்தின்வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல்அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில்போரட்டத்தை துவக்கினார்.இதன் காரணமாக 1964ஜூன்12-கைது செய்யப்பட்ட
ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.
தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்டார்.அதே ஆண்டில்இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கானநோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில்தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது.இவரின்போராட்ட முறையை கண்டஅமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்குவருவதற்கு அனுமதி வழங்கவில்லை.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன்இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின்மறைவிற்கு தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.மண்டேலா அவர்களின் மறைவிற்கு நமது திருநெல்வேலி BSNLEU மாவட்டசங்கம் இரங்கலை உரித்தாக்குகிறது.
No comments:
Post a Comment