Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Saturday, 17 December 2016

அஞ்சலி



அஞ்சலி
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கிளை செயலராகவும் ,லோக்கல்  கவுனசில் உறுப்பினராகவும் குறுகிய காலத்தில் நமது BSNLEU சங்க வளர்ச்சிக்கு பெரும் உதவிகரமாக இருந்த தோழர் T.முத்துராமலிங்கம் அவர்கள் JTO பயிற்சிக்கு சென்னையில் இருந்தபோது சாலை விபத்தில் காலமானார் .அவர் தம் மறைவால் துயர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU  திருநெல்வேலிமாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .


Image may contain: 2 people



அஞ்சலி

Saturday, 2 January 2016

அஞ்சலி






அஞ்சலி

ஏ.பி.பரதன் | கோப்புப் படம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன்(92) இன்று இரவு (சனிக்கிழமை) டெல்லியில் காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராகவும், ஏஐடியூசி தலைவராகவும் இருந்தவர் ஏ.பி.பரதன்.அவரது மறைவிற்கு திருநெல்வேலி பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .

Saturday, 7 December 2013

அஞ்சலி


அஞ்சலி








காலமானார் தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!

ஜோகன்ஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமானநெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலகுறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர்ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.பிறப்பும் இளமையும்: தென்னாப்பரிக்காவில் உள்ளகுலு கிராமத்தில்1918-ம் ஆண்டுஜூலை மாதம்பிறந்த நெல்சன் மண்டேலாசிறுவயது முதல்குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார்.இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா.லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்டகல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில்சேர்ந்தார்.தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறுபோராட்டங்களைமுன்னின்று நடத்தினார்.

அரசியல் போராட்டம்: தென்னாப் பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்தவந்த போதிலும்,சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர்.இதனை கண்ட மண்டேலா1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார்.போரட்டத்தின்வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல்அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில்போரட்டத்தை துவக்கினார்.இதன் காரணமாக 1964ஜூன்12-கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது

தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்டார்.அதே ஆண்டில்இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கானநோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில்தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது.இவரின்போராட்ட முறையை கண்டஅமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்குவருவதற்கு அனுமதி வழங்கவில்லை.
மண்டேலாவின் மறைவிற்கு .நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன்இரங்கல்  தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின்மறைவிற்கு தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.மண்டேலா அவர்களின்  மறைவிற்கு நமது திருநெல்வேலி BSNLEU மாவட்டசங்கம் இரங்கலை உரித்தாக்குகிறது.

Thursday, 18 July 2013

அஞ்சலி

அஞ்சலி


சுதந்திர போராட்ட வீரரும் , பாராளுமன்ற உறுப்பினரும்  மற்றும் சிபிஐ (எம்) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் .சமர்முகர்ஜி, இன்று கொல்கத்தாவில்  காலமானார். அவருக்கு வயது 101 .சமர்முகர்ஜி நீண்ட காலம்  சிஐடியு சங்கத்தின்  பொது செயலாளர் ஆக  பணியாற்றினார்.அவருடைய மரணம்  இந்திய தொழிலாள வர்க்க இயக்கத் திற்கு  மதிப்பிட முடியாத இழப்பாகும் . BSNLEU சங்கம் அன்னார்க்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி  செலுத்துகிறது.