தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறிக்கு
எதிராகப் போராடிய தலைவருமான நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த கிராமமான
குனுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி மற்றும் உடலநலக்குறைவால்
அவதிப்பட்டு வந்த மண்டேலா (95) கடந்த 5-ம் தேதி
ஜோகன்னஸ்பர்க்கில் காலமானார். 10 நாள்களாக
துக்கம் கடைபிடிக்கப்பட்டு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சி தனிப்பட்டது என்பதால் அதில் மண்டேலாவின்
மனைவி கிரகா மஷேல், முன்னாள்
மனைவி வின்னி மடிகிசேலா மண்டேலா உள்ளிட்ட 450 பேர்
பங்கேற்றனர்.
அரசு சார்பிலான இறுதிச்சடங்கு ஏற்பாடு இந்திய நேரப்படி காலை
11.30 மணிக்கு
தொடங்கியது. அவரது வயதை பிரதிபலிக்கும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற 2 மணி நேர
பொதுச்சடங்கில் அழைப்பின்பேரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இளவரசர்
சார்லஸ், ஈரான்
துணை அதிபர், பல்வேறு
ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் உள்ளிட்ட 4500 விருந்தினர்கள்
வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப்
ஜூமா, 95 ஆண்டுக்கு
முன் தொடங்கிய இவரது தனித்துவமிக்க பயணம் இன்றுடன் முடிகிறது என வர்ணித்தார்.
No comments:
Post a Comment