Monday, 22 July 2019

Hon'ble Madras High Court stays BSNL Corporate Office letter, banning trade union activities till the Membership Verification.

It is a great news that the Hon'ble Madras High Court has granted interim stay to the BSNL Corporate Office letter dated 02-07-2019, banning demonstrations, dharna, etc., till the completion of 8th Membership Verification. Com.Babu Radhakrishnan, Circle Secretary, BSNLEU, Tamil Nadu circle, had filed the petition in the Hon'ble Madras High Court, seeking stay for the Corporate Office letter dated 02-07-2019. That letter has threatened that any union, organising demonstration, dharna, etc., will be debarred from participation in the 8th Membership Verification. This letter issued by the SR Branch of the BSNL Corporate Office is totally arbitrary, high-handed and violative of the fundamental rights enshrined in the Constitution. Hence, BSNLEU decided to challenge this order in the court of law. The SR Branch should learn lesson from this and should not try to trample on the fundamental rights of the trade unions. The concerned authorities in the Corporate Management should ensure that the SR Branch does not indulge in such adventurous activities, which will spoil industrial peace in BSNL. CHQ heartily congratulates the Tamil Nadu circle union for this victory.

[Date : 22 - Jul - 2019]

Friday, 19 July 2019

அமைச்சர்கள் குழு கூட்டம்





அமைச்சர்கள் குழு கூட்டம்



BSNL தொடர்பாக உருவாக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் முடிவடைந்தது.
மத்தியில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின் BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம் தொடர்பாக பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. வதந்திகள், செய்திகள் என பல, பல நோக்கங்களோடு உலா வந்து ஊழியர்கள் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலக செயலாளர் ஆகியோரின் தலைமையில் பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. திடீரென உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களின் புத்தாக்கம் தொடர்பாக பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வந்தன. அந்தக் குழுவில் தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் மற்றும் நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அந்த அமைச்சர்களின் குழுக் கூட்டம் 16.07.2019 அன்று கூடியது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற அந்தக் கூட்டம், எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் முடிவடைந்துள்ளது. அடுத்தது என்ன? 

SR பிரிவு எஸ்மா பிரிவா???!!!


        SR பிரிவு எஸ்மா பிரிவா???!!!  


சங்க அங்கீகார தேர்தலில், முதல் சங்கம், 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது என்றாலும் கூட, இரண்டாவதாக வரும் சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில், அங்கீகார விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் மைசூரு அகில இந்திய மாநாடு ஏகமனதாக தீர்மானித்தது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், சங்க அங்கீகார விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று BSNL ஊழியர் சங்கம் 10.01.2019 அன்றே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தது. ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய SR பிரிவு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அங்கீகார விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நமது மத்திய சங்கம் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதியதுடன், GM(SR), DIRECTOR(HR) மற்றும் CMD BSNL ஆகியோர்களை சந்தித்து விவாதித்தும் உள்ளது. எனினும் இறுதி வரை கார்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு அதனை உறை நிலையிலேயே வைத்துவிட்டது. அதன் விளைவாக, BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கை அமலாக்கப்படாமல், கடந்த முறை உள்ள விதிகளின்படியே இந்த அங்கீகார தேர்தல் நடைபெற உள்ளது. இது தான் SR பிரிவின் செயல்திறன். ஆனால் BSNLல் அமைதியான முறையில் தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது என்றால் அவற்றை தடை செய்ய இதே SR பிரிவு மூர்க்கத்தனமான வேகத்துடன் செயல்பட துவங்கிவிடுகிறது. 
AUAB அறைகூவலின் அடிப்படையில் 05.04.2019 அன்று நடைபெற்ற ‘சஞ்சார் பவன் நோக்கிய பேரணி’யை சீர்குலைக்க SR பிரிவு எத்தனை எதிர்மறையான கடிதங்களை வெளியிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 16.07.2019 அன்று தர்ணா நடத்த BSNL ஊழியர் சங்கமும் BSNLCCWFம் அறைகூவல் விடுத்தவுடன், மீண்டும் வேகத்துடன் செயல்பட துவங்கியுள்ளது. ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களை நடத்தும் சங்கங்கள், 8வது சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிட தடை செய்யப்படும் என 02.07.2019 அன்று SR பிரிவு, ஒரு மிரட்டல் கடிதத்தை வெளியிட்டுள்ளது. மீண்டும் 12.07.2019 அன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள்/ தர்ணாக்கள் நடத்துகின்ற, ஏற்பாடு செய்கின்றவர்கள் மீதான ஆதாரங்களை திரட்டி அனுப்ப வேண்டுமென, அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் மற்றொரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. இந்த மிரட்டல்களையெல்லாம் மீறி நாடு முழுவதும் அந்த தர்ணா போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 
தொழிற்சங்கங்களுக்குள்ள அமைப்புச் சட்ட உரிமைகளை பறிக்க முடியாது என்பதை SR பிரிவு புரிந்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்கு தடை விதிப்பதைக் கைவிட்டு விட்டு, நிறுவனத்திற்கு ஏதாவது உறுப்படியான வேலைகளை செய்ய வேண்டுமென்பதே நமது தாழ்மையான வேண்டுகோள். செய்யுமா?

மத்திய சங்கம் அறைகூவல்




ரயில்வே தனியார் மயத்திற்கு எதிரான இணைந்த பிரச்சார இயக்கம்- இணைந்துக் கொள்ள மத்திய சங்கம் அறைகூவல்
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நரேந்திர மோடி அவர்கள் முதல் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை வகுத்துள்ளார். இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கான முக்கியமான நடவடிக்கைகள், அந்த நூறு நாட்கள் திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சம். அந்த திட்டங்களில்:-
-> ரயில்களை ஓட்டுவதை, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது. 
-> தனியார் நிறுவனங்களுக்கு, சம தள போட்டியை தருவதற்காக, பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களில் அரசு வழங்கி வரும் மானியங்களை திரும்ப பெறுவதன் மூலம், கட்டணங்களை உயர்த்துவது.
-> ரயில்வேயின் ரத்தினங்களான ரயில்வே தயாரிப்பு நிறுவனங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவதன் மூலம் தனியார் மயமாக்குவது. 
-> தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரயில் பெட்டிகளை வாங்குவதன் மூலம், நமது தயாரிப்பு நிலையங்களை அழித்து, நமது உள்நாட்டு உற்பத்தியை அழிப்பது.

இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு எதிரான CITU சங்கத்தின் அறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளோம். ரயில்வேயை தனியார் மயமாக்குவதற்கு எதிராக ரயில்வே மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் அனைத்து பிரச்சார இயக்கங்களிலும் மாவட்ட, மாநில சங்கங்கள் பங்கேற்க வேண்டும் என நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மாதம் சம்பளம் வருமா?!'


இந்த மாதம் சம்பளம் வருமா?!' - பி.எஸ்.என்.எல் சரிவுக்கான 4 காரணங்கள்




BSNLEU அகில இந்திய உதவி பொது செயலரும், தமிழ் மாநில தலைவருமான தோழர் S . செல்லப்பா, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த ப்ரதியேக பேட்டியின் முழு விவரம் 


கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்களுக்கு, ஜூன் மாத ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதனால், 1.7 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ஜூன் மாத ஊதியத்துக்காக ரூ.850 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் இயங்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படும் நிலையில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொழில்நுட்ப சேவை வழங்க முடியாத சூழலில் பி.எஸ்.என்.எல் இருப்பதால், வாடிக்கையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெற முடியவில்லை என்கிறார்கள், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள். மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவை வழங்கி, 5ஜியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இதுவரை 4ஜி சேவையை வழங்கவே அனுமதிக்கவில்லை என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்கள் அவர்கள். 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பாவிடம் பேசினோம். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் தத்தளிப்பதற்கு 4 காரணங்களை அவர் நம்மிடம் பட்டியலிட்டார். 

1. 4 ஜி சேவைக்கான அனுமதி

``இன்றைய தேதிக்கு, தொழில்நுட்பச் சந்தையில் போட்டியில் இருப்பவை பி.எஸ்.என்.எல், ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா என்ற 4 நிறுவனங்கள். மற்ற 3 நிறுவனங்களுக்கும் 4ஜி சேவையை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக வழங்கிவருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இதுவரை 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படவே இல்லை. அப்படி இருக்கும்போது, எப்படி போட்டி நிறுவனங்களை சமாளித்து, வருவாயைப் பெருக்க முடியும். பி.எஸ்.என்.எல் முன் நிற்கும் மிகப்பெரிய சவால் இது'' என விவரித்தவர்,

2. கடன் வாங்க அனுமதி கொடுக்காதது

``உதாரணமாக, ஜியோ நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொழில்நுட்பச் சந்தையில் களமிறங்கியது. ஜியோ, 1.5 லட்சம் கோடி முதலீட்டுடன் தொழிலில் கால்பதித்தது. அதில், 1.25 லட்சம் கோடி ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடன். இன்றைய சூழலில், அந்த நிறுவனத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் கடன் நிலுவையில் இருக்கிறது. 

வோடபோன் நிறுவனத்துக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ஏர்டெல் நிறுவனத்துக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் கடன் இருக்கிறது. அந்த 3 மூன்று நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு, ஏறக்குறைய 6 லட்சம் கோடி ரூபாய். ஆனால், பி.எஸ்.என்.எல்-லுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கடன் இருக்கிறது. நாங்கள் அரசிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி அளியுங்கள் என்பதுதான். இதற்காக, கடன் வாங்க அனுமதிக்கும் வகையில் Letter of Comfort கடிதம் கொடுங்கள் என்று கேட்கிறோம். நஷ்டத்திலிருந்து மீள கடன் வாங்கி தொழில் நடத்த அனுமதியுங்கள் என்கிறோம். ஆனால், அரசிடமிருந்து உரிய பதிலில்லை'' என்கிறார். 
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் செல்லப்பா

3.காலியாக உள்ள நிலங்களை வருமானத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்காதது

இதுகுறித்து அவர் கூறுகையில்,``பி.எஸ்.என்.எல்-லுக்கு சொந்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அதில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் காலியாக இருக்கின்றன. இவற்றிலிருந்து வருவாய் பெறக்கூடிய வகையில், அந்த நிலங்களை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவது ஆகியவற்றுக்கும் அரசின் அனுமதிகோரி காத்திருக்கிறோம். இதன்மூலம், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிட்ட வாய்ப்புள்ளது. இதற்கு அனுமதி கோரி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அந்தக் கடிதத்துக்கு தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் வந்த பதிலில், `அந்த நிலங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கடந்த 2000-ம் ஆண்டிலேயே மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலமே இல்லை' என்று பதில் கிடைத்தது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. ஆனால், சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பதே நிதர்சனம்'' என்றார்.  

   
4. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை

``2016-ம் ஆண்டு செப்டம்பரில், ஜியோ, 3 மாதங்களுக்கு சேவை அனைத்தும் இலவசம் என்ற அறிவிப்போடு சந்தையில் நுழைந்தது. அரசு விதிமுறைகளின்படி இலவச சேவைகளை 3 மாதங்களுக்கு மேல் வழங்கக் கூடாது. ஆனால் ஜியோ, தனது இலவச சேவையை 3 மாதங்களுக்குப் பின்னர், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்தது. இது அப்பட்டமான விதிமீறல் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் அன்றைய செயலாளர் தீபக் மிஸ்ரா, டிராய் அமைப்புக்குக் கடிதம் மூலம் எச்சரித்தார். இலவச சேவை வழங்குவதால் அரசுக்கும் இழப்பு ஏற்படும். ஏனென்றால், அவர்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு அளிக்க வேண்டும். இலவச சேவையை நீட்டித்தால், அரசுக்கும் இழப்புதான். இந்தத் தகவல்களை சுட்டிக்காட்டி, தீபக் மிஸ்ரா எழுதிய கடிதம் திரும்ப வந்தது. அவருக்குப் பணி மாறுதல் அளிக்கப்பட்டு, அந்தப் பதவியில் வேறு ஒருவர் அமர்த்தப்பட்டார். பின்னர், ஜியோவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 

இந்த நஷ்டத்திலிருந்து மீள, பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடன் வாங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். 11,700 கோடி ரூபாய் அளவுக்கு  கடன் இருக்கிறது. நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் சூழலில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் அளிக்க முடியாமல் தவித்துவருகிறோம். குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரைதான் அவர்களின் மாத ஊதியம். மின்கட்டணம்கூட கட்டமுடியாத சூழ்நிலைதான் தற்போது இருக்கிறது. தமிழகத்தில் ரூ.30 கோடி அளவுக்கு மின்கட்டணம் பாக்கி இருக்கிறது. இதற்காக, 550 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் டவர் அல்லது அதனுடன் தொடர்புடைய மின் இணைப்புகள். இப்படி 550 டவர்கள் செயலிழந்துபோகும் பட்சத்தில், எப்படி மக்களுக்கு சேவை வழங்க இயலும்?. வாடிக்கையாளர்கள் எப்படி பி.எஸ்.என்.எல்-ஐ நம்புவார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நடவடிக்கைதான் இது. அரசு அனுமதிக்கும்பட்சத்தில், இதிலிருந்து மீள இயலும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்'' என்றார் நம்பிக்கையுடன். 

பி.எஸ்.என்.எல்-லின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?

Thursday, 11 July 2019

செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி



செயல்பாட்டுக்கு தடை போடும் உத்தரவை திரும்பப் பெறக் கோரி நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைமுறைகள் நிறைவடையும் வரை எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என 02.07.2019 தேதியிட்ட கடித எண்: BSNL/5-1/SR/2018 மூலமாக விண்ணப்பித்திருக்கும் அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களுக்கும் BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் 2019, மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் விண்ணப்பித்திருக்கும் சங்கம், ஏதாவது போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றால் அந்த சங்கத்தை உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த வாதம் பொருத்தமற்றது மட்டுமல்ல, நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவதும் ஆகும். இந்த அர்த்தமற்ற கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என நிர்வாகத்திற்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்ற அடிப்படையில், சட்டபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட BSNL ஊழியர் சங்கத்திற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இது தொடர்பாக முதன்மை தொழிலாளர் நல ஆணையரிடமும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் எனில், தனது தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க, BSNL ஊழியர் சங்கம் நீதிமன்றத்திற்கும் செல்லும்.