சதிகள் தகரட்டும் !
வெனிசுலாவில் ஹிகோ சாவேஸ் மறைவிற்கு பின்னர் அந்த நாடு சின்னாபின்ன மாகிவிடும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கனவு கண்டு வந்தது. ஆனால் சாவேஸால் அடையாளம் காட்டப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, தொடர்ந்து சோசலிசக் கொள்கைகளை முன் னெடுத்து வருகிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், பெரும் தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளு டன் இணைந்து பொருளாதார ரீதியாக வெனி சுலாவில் குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. இந்த சதிகளும் தற்போது ஒவ்வொன்றாக தகர்ந்து வருகின்றன.
வரும் டிசம்பர் மாதம் வெனிசுலாவில் உள் ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் எப்படியாவது மதுரோ தலைமையிலான அர சிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி மக்களிடம் அதிருப்தியை உருவாக்கிட வேண்டும் என பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப் பாக தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளுடன் ஏகாதிபத்தி யம் கூட்டணி அமைத்து வெனிசுலாவில் செயற்கையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.அதாவது அத்தியாவசியப் பொருட்கள் உள் ளிட்ட அனைத்துப் பொருட்களையும் பதுக்கல், உற்பத்தி குறைப்பு மூலம் பற்றாக்குறையை உருவாக்கி, விலையையும் பன்மடங்கு உயர்த்தி யிருக்கின்றன.
மறுபுறம் கள்ளச்சந்தை வழி யாகப் பொருட்களை விற்பது உள்ளிட்ட நட வடிக்கைகள் தீவிரமடைந்தன. இதனால் மக் கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். 17 சதவிகித மாக இருந்த பணவீக்கமும் திடீரென 54 சத விகிதமாக உயர்ந்தது. கடந்த ஏப்ரலில்தான் விலைவாசி புள்ளியை மையமாக வைத்து அந்நாட்டில் ஏற்கனவே இருந்து வந்த குறைந்த பட்சக் கூலியை 25 சதவிகிதம் உயர்த்தினர். இந்தச் சதியின் மூலவேரை கண்டுபிடித்த மதுரோ தலைமையிலான அரசு, ஒரு பொருளின் உற்பத்தி முதல் நுகர்வோர் விநியோகம் வரை யிலான சங்கிலித்தொடர் நடவடிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் ஏராளமான நிறுவனங்களின் கூட்டுச்சதி அம்பலமானது. பதுக்கல், உற்பத்திக் குறைப்பு, மோசடி விலை நிர்ணயம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆயிரம் சதவிகிதம், இரண்டாயிரம் சதவிகிதம் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த நிறுவனங்களின் மேலாளர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பொருளாதார ரீதியாக அரசிற்கெதிராக சதியில் ஈடுபட்ட பல்வேறு நிறு வனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையின் உதவி யுடன் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கை தொடர்கிறது.இந்நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குப் பயந்து கடைகளை மூடியிருக்கின்றன. ஆனால் அரசு விழிப்புடன் இருந்து அனைத்து நிறுவனங் களையும் கண்காணித்து வருகிறது. இந்த நட வடிக்கைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வர வேற்பு இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று நியாய விலை யில் பொருட்களை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் அரசிற்கெதிரான பொருளாதாரப் போரை எதிர்கொள்ள மதுரோவிற்கு சிறப்பு அதி காரம் வழங்கும் மசோதாவிற்கான வாக்கெடுப் பில் முதல் கட்ட வெற்றி கிட்டியிருக்கிறது. வெற்றி தொடரட்டும்.
No comments:
Post a Comment