Wednesday, 21 August 2013

மத்தியச் சங்கச் செய்திகள்





விழாக்கால முன்பணம்
ரூ.5000ல் இருந்து ரூ. 15000 ஆக
உயர்த்தவேண்டும் என்று
நிர்வாகத்திடம் கோரிக்கையை வைத்துள்ளார்,
நமது பொதுச் செயலர்.


COAL INDIA ஊழியர்கள் போராட்டம்






10% பங்கு விற்பனையை எதிர்த்தும்
நிர்வாகம் முன்வைத்திருக்கும்
சீரமைப்புத் திட்டத்தை எதிர்த்தும்
COAL INDIAல் உள்ள INTUC, AITUC, BMS, HMS, CITU
ஆகிய தொழிற்சங்கங்கள்
செப்டம்பர் 23 முதல் 25 வரை
வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கின்றன.
COAL INDIA ஊழியர்களின்

போராட்டம் வெல்ல வாழ்த்துகிறோம்!

Tuesday, 20 August 2013

Kavitha Kumar ( கவி தா..... குமார்)



தந்தை பெரியார்
உதிர்த்த வார்த்தை
அவ்வப்போது
உயிர் பெறுகிறது.


ஒன்றுமில்லையென்று
நினைக்கத்தோன்றும்
உருவம்
மத்திய ஆட்சியை
உருட்டிப் பார்க்கிறது.

பூக்கும்
இந்த தாவரத்தை வைத்து
அரசியல் நடத்தப் பார்க்கிறது
தாமரை.

அடுப்பறை சங்கதியென
அறவே ஒதுக்க முடியாது
இந்திரா காந்தி காலத்திலிருந்து
இன்றுவரை
அரசியலோடு சம்பந்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டும்
பயங்கரவாதத்திற்கு
எச்சரிக்கை விடும்
பிரதமர்
அக்பர் ரோட்டுக்கு அடுத்து
இதற்குத்தான்
அதிகம் பயப்படுகிறார்.

உரிப்பவரின்
கண்களை மட்டுமல்ல
வாங்குபவரின்
கண்களையும் கலங்க வைக்கும்
வெங்காயம்
விண்ணிலிருந்து
விளைபவை என்று
யாராவது சொன்னால்
எதிர்கால சந்ததி நம்பக்கூடும்.
- ப.கவிதா குமார்
Like ·  ·  · 6 hours ago · 

கார்ட்டூன்






3 நாள் தொடர் தர்ணா - வெற்றிகரமாக்குவோம்Read | Download

ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா




போராட்ட அறைகூவல் :

1.            NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
2.            நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.            RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
4.            கேடர்களின் பெயர் மாற்றம்;
5.            1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்றுஅடுத்தINCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
6.            நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
7.            பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
8.            STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
9.            TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
10.          காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
11.          வாரத்தில் நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
12.          BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
13.          1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
14.          கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
15.          ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;
இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக கீழ்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது


·                
·                     ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா

·                     4.9.2013 ஒரு நாள் வேலைநிறுத்தம் 

என்றும் தோழமையுடன்,

C.சுவாமி குருநாதன் - மாவட்ட செயலர் 

விழாகால முன் பணம்



விழாகால முன் பணம்

விழாகால முன் பணமாக ரூபாய் 5000/-ஐ ரூபாய் 15,000/- ஆக  உயர்த்த வலியுறுத்தி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது . 2005 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இத் தொகை தற்போதுள்ள விலைவாசிக்கு போதுமானது அல்ல என்பதை நமது மத்திய சங்கம் சுட்டி காட்டி கடிதம் எழுதியுள்ளதை படிக்க :-CLICK HERE