Showing posts with label Kavitha Kumar ( கவி தா..... குமார்). Show all posts
Showing posts with label Kavitha Kumar ( கவி தா..... குமார்). Show all posts

Tuesday, 20 August 2013

Kavitha Kumar ( கவி தா..... குமார்)



தந்தை பெரியார்
உதிர்த்த வார்த்தை
அவ்வப்போது
உயிர் பெறுகிறது.


ஒன்றுமில்லையென்று
நினைக்கத்தோன்றும்
உருவம்
மத்திய ஆட்சியை
உருட்டிப் பார்க்கிறது.

பூக்கும்
இந்த தாவரத்தை வைத்து
அரசியல் நடத்தப் பார்க்கிறது
தாமரை.

அடுப்பறை சங்கதியென
அறவே ஒதுக்க முடியாது
இந்திரா காந்தி காலத்திலிருந்து
இன்றுவரை
அரசியலோடு சம்பந்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டும்
பயங்கரவாதத்திற்கு
எச்சரிக்கை விடும்
பிரதமர்
அக்பர் ரோட்டுக்கு அடுத்து
இதற்குத்தான்
அதிகம் பயப்படுகிறார்.

உரிப்பவரின்
கண்களை மட்டுமல்ல
வாங்குபவரின்
கண்களையும் கலங்க வைக்கும்
வெங்காயம்
விண்ணிலிருந்து
விளைபவை என்று
யாராவது சொன்னால்
எதிர்கால சந்ததி நம்பக்கூடும்.
- ப.கவிதா குமார்
Like ·  ·  · 6 hours ago ·