Monday, 23 March 2020

நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
நிரந்தர ஊழியர்களின் 2020, பிப்ரவரி மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும், 2020, மார்ச் மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்ற்BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.

நினைவாஞ்சலி


வர்க்க போராளி தோழர். எம். முருகையா முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி
BSNL ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த தோழர் முருகையா அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி





Tuesday, 4 February 2020

BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்




BSNL வரலாற்றில் 31.01.2020, ஒரு கருப்பு தினம்
BSNL வரலாற்றில் 31.01.2020 என்பது ஒரு கருப்பு தினம். விருப்ப ஓய்வு திட்டம்-2019ன் கீழ் 78,459 ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். BSNLன் புத்தாக்கம் என்ற பெயரில் இது நடைபெற்றுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் BSNL, மீண்டெழும் என்று தம்ப்பட்டம் அடிக்கப்பட்டது. எனினும், புத்தாக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிவடைந்து விட்ட போதும், BSNL நிறுவனத்தால் 4G சேவையை இன்னமும் வழங்க இயலவில்லை. இன்னமும், ஊழியர்களுக்கு, குறிப்பாக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு கூட ஊதியம் தர BSNLல் பணம் இல்லை. BSNL, அரசாங்கத்தின் மிக முக்கியமான சொத்து என்று அமைச்சர் கூறுகின்ற போதும், மற்ற பொதுத்துறைகளில் நடப்பது போலவே, BSNLஐ தனியார் மயமாக்கிடவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீண்டும் BSNL நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, BSNLஐ தனியார் மயமாக்கும் அரசின் முயற்சிகளை பின்னுக்கு தள்ளுவதே நமது பிரதான கடமை.

LICயின் பங்குகலை விற்பனை




LICயின் பங்குகலை விற்பனை செய்வதில் நரேந்திர மோடி அரசாங்கம் தனது முடிவை தெரிவித்துள்ளது.
01.02.2020 அன்று பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன், இந்த நிதி ஆண்டில் LICயின் பங்குகளை அரசு விற்பனை செய்யும் என்று அறிவித்தார். இது ஒரு மிக கொடூரமான முடிவு. LIC என்பது இந்திய அரசாங்கத்தின் மதிப்பு மிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இருந்த போதும், இந்திய நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பேராசையின் காரணமாக, மத்திய நரேந்திர மோடி அரசாங்கம் LICயையும் தனியார் மயப்படுத்த முடிவு செய்துள்ளது. பங்கு விற்பனை என்பது தனியார்மயத்தின் துவக்கமே. ஏர் இந்தியா மற்றும் BPCL ஆகியவற்றின் தனியார்மயமாக்கலை ஒட்டியே அரசு, இந்த முடிவுகுக்கும் வந்துள்ளது. BSNLன் பங்கு விற்பனை மற்றும் தனியார் மயமாக்கல் வெகு தொலைவில் இல்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. LICயின் பங்கு விற்பனை செய்யும் அரசின் முடிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்க்கின்றது. LICயின் பலம் பொருந்திய அமைப்பான AIIEA, வேலை நிறுத்தம் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கங்களை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள BSNLஊழியர் சங்கத்தின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும், AIIEAவின் அனைத்து இயக்கங்களுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

Monday, 23 December 2019



2020, ஜனவரி 8 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட மத்திய செயலக முடிவுகள்
20.12.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலக கூட்டத்தில் 2020, ஜனவரி, 8 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான மத்திய சங்கத்தின் சுற்றறிக்கையின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Thursday, 19 December 2019

17-12-2019 அன்று தென்மாவட்டங்கள்- நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகியவை இணைந்து Work Contract ஒப்பந்தத்தை திறப்பதை அனுமதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் நமது போராட்டம் நடைபெற்றது.
முதலில்  நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில் உள்ள AGM Planing அறைக்கு சென்று அனைவரும் அமர்ந்தோம் . AGM Planing உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 மணியாகியும் இதுவரை யாரும் Work Contract ஒப்பந்தத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை ஆதலால் ஒப்பந்தம் திறக்கவில்லை என்றார்.இதில் வேடிக்கை என்னவென்றால் நேற்று வரை Work Contract காக 10 க்கும் அதிகமானவர்கள் மனு செய்ததாக நமக்கு பல இடங்களில் இருந்து தகவல்கள் வந்தது. அதை நாமும் உறுதியும் செய்துள்ளோம்.
மறுபடியும் 15 நாட்கள் விருப்பம் கோரப்படும் என்றார். நீங்கள் விருப்பம்  கோரக்கூடாது என்று வாதிட்டோம். அதற்கு AGM Planing – முடிவு செய்யும் உரிமை என்னிடம் இல்லை PGM டம் தான் உள்ளது என்றார்.
PGM அவர்கள் சென்னை சென்றதால்  PGM அலுவலகத்திலுள்ள DGM Admin அறைக்கும் அனைவரும் சென்று போராட்டம் நடத்தினோம். அங்கு DGM Admin, DGM CM ஆகியோர் நாம் வருவதை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களிடம்  Work Contract மறுபடியும் 15 நாட்கள் விருப்பம்  கேட்கக்கூடாது என்றும் ரத்துசெய்ய வேண்டும் என்றும் நமது கோரிக்கையை வைத்து எதிர்ப்பை தெரிவித்தோம். அவர்கள் இதுகுறித்து நடைபெற்ற நிகழ்வுகளை மாநில நிர்வாகத்திடமும் தெரியப்படுத்தியுள்ளோம். கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டலுக்கு பின் முடிவு செய்யலாம் என்று  ஆலோசித்துள்ளோம் என்றார்கள்.
ஒப்பந்தம் ரத்து செய்வது குறித்து PGM அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்பதால் நாம் எந்த நேரத்திலும் இது போன்ற போராட்டத்திற்கு தாயாராக இருக்கவேண்டும் என்று தென்மாவட்ட சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளது.
BSNL EU  மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக் கனி தலைமையில் நடந்த போராட்டத்தில் BSNL CCWF அகில இந்திய உதவி செயலாளர் தோழர் பழனிச்சாமி நெல்லை மாவட்டச்செயலர் தோழர் சூசை மரிய அந்தோணி, தூத்துகுடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர் செல்வம் நாகர்கோவில் மாவட்ட செய்லர் தோழர் ராஜு, மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க விருது நகர் மாவட்ட செயலர்  தோழர் முத்துச் சாமி, நாக்ர்கோவில் மாவட்ட செயலர் தோழர் செல்வம், ஆகியோரும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் முருகன் ( நெல்லை ) தோழர் அனில்குமார் ( நாக்ர்கோவில் ) நாகர்கோவில் மாவட்ட தலைவர்கள்  ஜார்ஜ், ஆறுமுகம், சுயம்புலிங்கம்.சின்னத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்த ஊழியர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டர்.

BSNL புத்தாக்கத்தில் சிக்கல்-மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்.




BSNLன் புத்தாக்க திட்டம் விமரிசையாக அறிவிக்கப்பட்டது. விருப்ப ஓய்வு திட்டம்-2019 மூலமாக, ஜனவரி 2020ல் சுமார் 80,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். BSNLக்கு அரசாங்கம் 4G அலைக்கற்றையையும் வழங்கி விட்டது.

எனினும், ZTE, Nokia உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தர வேண்டிய 3,800 கோடி ரூபாய்களை BSNL தராத காரணத்தால், அந்நிறுவனங்கள், BSNLன் BTSகளை மேம்படுத்த முன் வருவதில்லை. மின் கட்டணம் செலுத்தவும், ஒப்பந்ததாரர்களின் பில்களை தீர்வு காணவும், ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை வழங்குவதற்கும், உரிய தேதியில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை உரிய மட்டங்களுக்கு வழங்கவும் BSNL இடம் பணம் இல்லை.

அடுத்த மூன்று, நான்கு மாதங்கள், BSNLக்கு முக்கியமான காலகட்டம். இந்த பொருளாதார நெருக்கடியை சந்திக்க இந்நிறுவனத்திற்கு, குறுகிய கால பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இல்லையென்றால், அரசு கொண்டு வந்துள்ள புத்தாக்க திட்டம், தொலைதூர கனவாக மாறிவிடும். இந்த சிக்கலில் இருந்து BSNL வெளியே வர உதவி செய்யும் வகையில், மத்திய அமைச்சரின் தலையீடு தேவை என வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம் தொலை தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.