17-12-2019 அன்று தென்மாவட்டங்கள்- நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகியவை இணைந்து Work Contract ஒப்பந்தத்தை திறப்பதை அனுமதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் நமது போராட்டம் நடைபெற்றது.
முதலில் நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில் உள்ள AGM Planing அறைக்கு சென்று அனைவரும் அமர்ந்தோம் . AGM Planing உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 மணியாகியும் இதுவரை யாரும் Work Contract ஒப்பந்தத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை ஆதலால் ஒப்பந்தம் திறக்கவில்லை என்றார்.இதில் வேடிக்கை என்னவென்றால் நேற்று வரை Work Contract காக 10 க்கும் அதிகமானவர்கள் மனு செய்ததாக நமக்கு பல இடங்களில் இருந்து தகவல்கள் வந்தது. அதை நாமும் உறுதியும் செய்துள்ளோம்.
மறுபடியும் 15 நாட்கள் விருப்பம் கோரப்படும் என்றார். நீங்கள் விருப்பம் கோரக்கூடாது என்று வாதிட்டோம். அதற்கு AGM Planing – முடிவு செய்யும் உரிமை என்னிடம் இல்லை PGM டம் தான் உள்ளது என்றார்.
PGM அவர்கள் சென்னை சென்றதால் PGM அலுவலகத்திலுள்ள DGM Admin அறைக்கும் அனைவரும் சென்று போராட்டம் நடத்தினோம். அங்கு DGM Admin, DGM CM ஆகியோர் நாம் வருவதை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களிடம் Work Contract மறுபடியும் 15 நாட்கள் விருப்பம் கேட்கக்கூடாது என்றும் ரத்துசெய்ய வேண்டும் என்றும் நமது கோரிக்கையை வைத்து எதிர்ப்பை தெரிவித்தோம். அவர்கள் இதுகுறித்து நடைபெற்ற நிகழ்வுகளை மாநில நிர்வாகத்திடமும் தெரியப்படுத்தியுள்ளோம். கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டலுக்கு பின் முடிவு செய்யலாம் என்று ஆலோசித்துள்ளோம் என்றார்கள்.
ஒப்பந்தம் ரத்து செய்வது குறித்து PGM அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்பதால் நாம் எந்த நேரத்திலும் இது போன்ற போராட்டத்திற்கு தாயாராக இருக்கவேண்டும் என்று தென்மாவட்ட சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளது.
BSNL EU மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக் கனி தலைமையில் நடந்த போராட்டத்தில் BSNL CCWF அகில இந்திய உதவி செயலாளர் தோழர் பழனிச்சாமி நெல்லை மாவட்டச்செயலர் தோழர் சூசை மரிய அந்தோணி, தூத்துகுடி மாவட்ட செயலர் தோழர் பன்னீர் செல்வம் நாகர்கோவில் மாவட்ட செய்லர் தோழர் ராஜு, மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க விருது நகர் மாவட்ட செயலர் தோழர் முத்துச் சாமி, நாக்ர்கோவில் மாவட்ட செயலர் தோழர் செல்வம், ஆகியோரும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் முருகன் ( நெல்லை ) தோழர் அனில்குமார் ( நாக்ர்கோவில் ) நாகர்கோவில் மாவட்ட தலைவர்கள் ஜார்ஜ், ஆறுமுகம், சுயம்புலிங்கம்.சின்னத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்த ஊழியர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டர்.
No comments:
Post a Comment