Wednesday, 12 February 2014

யாரு மனசில யாரு




யாரு மனசில யாரு

       யாரு மனசில யாரு 
         இந்தியாவின் அமெரிக்க தூதர் நான்சி பாவல்,நாளை பாஜக பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி அவர்களை சந்திக்க உள்ளார் . 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் அதில் அவரது பங்கு உள்ளது என்று , 2005 ல் இருந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது மட்டும் நரேந்திர மோடியை சந்திக்க இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர் துடிப்பது, ஏன்? காரணம் என்ன ?சர்வதேச தர நிறுவனம் ' மூடி'ஸ் ' வரும் வரும் நாடளுமன்ற தேர்தலுக்கு பின் பிராந்திய கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கலாம் என்றும் அதனால் இந்தியாவில் புதிய தாராள பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவது பாதிக்கும், என்று ம் கூறியுள்ளார்,மேலும் நிச்சயமாக இந்தியாவில் செயல்படும் பல தேசிய நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கும். எனவே அமெரிக்காவின் பணக்கார நவீன தாராளவாத கொள்கைகளை செயல்படுத்த நரேந்திர மோடியை முன்னிறுத்தவே இந்த நான்சி பாவல் மற்றும் நரேந்திர மோடி இடையே ஒரு கூட்டதை நடத்த அமெரிக்காவின் திடீர் நடவடிக்கை எடுக்க காரணம்.இந்தியாவின் அடுத்த ஆட்சியை யார் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மக்களா? அமெரிக்காவா ? பதில் உங்கள் விரலில் !
  நன்றி  by 

Tuesday, 11 February 2014

மத்திய சங்க செய்திகள்


மத்திய சங்க செய்திகள்  11/02/2014


[11.02.2014]Central Govt. employees going on a two day strike – Extend solidarity action.
The Central Govt. employees are going on a 2 day strike, as per the call of the Confederation of Central Govt. Employees and Workers. The strike will start from the midnight of 12.02.2014. The charter of demands, on which the Central Govt. employees are going on strike includes, (1) DA merger, (2) Interim Relief, (3) Grant of Civil Servant status and inclusion of GDS in 7th CPC, (4) Regularisation and revision of wages of casual labourers, (5) Rescind PFRDA Act and scrap new Pension Scheme, (6) Date of effect of 7th CPC 01.01.2014 and Five year wage revision in future, (7) Fixation of minimum pay based on Need-based minimum wage formula worked out by 15th ILC and modified by Supreme Court later, (8) Settlement of anomalies, (9)Implementation of Arbitration awards, (10) Five promotions, (11) Cashless & hassle free medical facilities, (12)Removal of restrictions on compassionate appointments, (13) Removal of bonus ceiling, (14) Stop downsizing, outsourcing, contractorisation, casualisation and privatisation, (15) Filling up of vacant posts, (16)Stop price rise and strengthen public distribution system, (17) Right to strike, vacate victimisations and revive JCM forums. 

Monday, 10 February 2014

மத்திய சங்க செய்திகள்

 மத்திய சங்க செய்திகள்



Corporate Office letter on information in respect of grant of one extra increment to BCR Grade-III employees one year prior to their retirement.<<click here>> 


Corporate Office letter on issue of guidelines relating to residential accommodation by the Directorate of Estate-application there-of in BSNL.<<click here>> 


T he CEC meeting of BSNLEU takes important decisions. 
The crucial CEC meeting of BSNLEU was held from 7th to 9th February, 2014, at Rajkot. The meeting deliberated on the important problems of the employees, the issues connected with the revival of BSNL, and on the very important issues being faced by the working class of this nation. After indepth deliberations on the agenda items, the meeting took the following important decisions and also passed resolutions on key issues.<<decisions>> 

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்



வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

   கோவையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள். (படம்: ஜெ.மனோகரன்)
            வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்  2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குவங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவைகளின் செயல்பாடுகள் முடங்கியது மட்டுமல்லாமல், அவ்வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.வங்கி ஊழியர் போராட்டம் வெல்ல பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 
                  <நன்றி :- தி ஹிந்து 

Monday, 3 February 2014

India telecom: broadband market share in 2013 November


India telecom: broadband market share in 2013 November

            In the Indian telecom space, BSNL continues to lead the broadband service provider market share in 2013 November, TRAI data showed.TRAI said BSNL has 68.9 percent market share in the Indian broadband market.The second largest operator is Bharti Airtel with 9.1 percent share.MTNL has 7.6 percent market share in the Indian fixed line broadband market, TRAI said.
India telecom - broadband market share in November 2013
TRAI data showed that there are 14.47 million wireline broadband subscribers in the country in November, 2013.Top 10 service providers constitute 94.78 percent of total wired broadband subscriber base.BSNL has subscriber base of 9.97 million, Bharti Airtel 1.32 million, MTNL 1.11 million, Hathway Cable 0.36 million and Beam Telecom 0.34 million.
                                      < நன்றி :- telecomlead>

Sunday, 2 February 2014

தொழிற்சங்க இயக்கத்தின் கலங்கரை விளக்கம்..!





தொழிற்சங்க இயக்கத்தின் கலங்கரை விளக்கம்..!
அ. விஜயகுமார்

இந்தியாவில் தபால் தந்தி ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் வாழ்க்கை என்றால் மிகையல்ல. இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். மேற்குவங்கத்திற்கே உரித்தான எளிமையாக, தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தபோதும் வாழ்க்கை முழுவதும் ஏழ்மை துரத்திக் கொண்டிருந்தபோதும் தான் கொண்ட லட்சியத்தில் இருந்து பிறழாதவர். ஏராளமான தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கியவர். அப்படிப்பட்ட உன்னத மான தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தொழிற்சங்கப்பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரும் படிக்கவேண்டியது அவசியமாகும்.

சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அடக்குமுறைக்கு எதிராகவும் பழிவாங்க லுக்கு இடையிலும் சக்தி மிக்க போராட்டங்களுக்கு வியூகம் அமைத்து அதனை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்று தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் முன் உதாரணமாக அமைந்தவர் கே.ஜி.போஸ். அவர் எப்போதும் தொழிற்சங்க ஒற்றுமையைப் பேசினார். கூட்டு இயக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இதனால் தான் சங்க வித்தியாசம் இன்றி அவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இருந்தது. வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில் தபால் தந்தி துறையில்தான் ‘ஈடி’ என்ற தற்காலிக தொழிலாளர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களுக்காக தொடர்ச்சியாகப் போராடிய தலைவர் கே.ஜி.போஸ். ஈடி ஊழியர்களை நிரந்தர இலாகா ஊழியர்களுடன் ஒப்பிட முடியாது என்று நிர்வாகத்தின் கருத்துடன் சில தொழிற்சங்கத் தலைமை ஒத்துப்போன போது, அத்தகைய சமரசவாத தலைமைக ளுக்கு எதிராக சரியான பதிலடியை கொடுத்து, ஈடி ஊழியர்களின் கோரிக்கைக ளுக்காக அகில இந்திய அளவில் தில்லியில் கோரிக்கை மாநாடு ஒன்றையும் நடத்தி போராட்ட திட்டங்களை வகுத்து தந்தவர் போஸ்.

மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைக ளுக்காக ரயில்வே, தபால் தந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களையும் மேற்கு வங்கத்தில் இணைத்து 3வது ஊதியக்குழு அமைக்கக் காரணமாக இருந்தார்.ஒன்றுபட்ட சங்கத்தில் தலைமையில் இருந்தவர்கள் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டபோது ஒத்த கருத்துள்ள அனைவரையும் அணி திரட்டி சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டவர்களின் நிலை தவறு என்பதை அவர் நிரூபித்தார். புரட்சிக ரமான தொழிற்சங்க இயக்கம் என்பது வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் மக்களை பாதிக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் போஸ். மதச்சார்பின்மையை உயர்த்தி கடை பிடித்தகாரணத்தால் தான் நாடு சுதந்திரம் அடைந்தபோது, வங்கப்பிரிவினையின் போது மேற்கு வங்காளத்தில் இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காக உயிரையும் பொருட் படுத்தாது தொழிலாளர்களை திரட்டி தெருவில் இறங்கி துணிச்சலாக செயல்பட்ட வர் போஸ். இந்து முஸ்லீம் இளைஞர்கள் முன்னணியை ஏற்படுத்தி ஒற்றுமையை பாதுகாத்ததோடு மத வெறியர்களிடமிருந்து சிறுபான்மையினரை பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு பிரிவினையை நோக்கிச் சென்றபோது கொல்கத்தாவில் பெருந்திரளாகத் திரண்டிருந்த தொழிலாளர் களிடையே போஸ் உரையாற்றும்போது “இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்கள். இந்த பிரிவினை எங்கள் நெஞ்சங்களைக் கனக்கவைக்கிறது. பாசத்துடன் நேசத்துடன் பழகிவந்த சகோதரர்கள் பிரியும் இத்த ருணத்தில் ஒன்றாக அமர்ந்து பணியாற்றிய இடத்தில் மேஜைகளையும் நாற்காலிகளை யும் பிரிக்க எங்களுக்கு எப்படி மனம் வரும்? ’’ என்று அவர் குறிப்பிட்டபோது கண்ணீர் விடாத தொழிலாளர்களே இல்லை. போனஸ் என்பது பிச்சையல்ல. அது தொழிலாளர்களின் உரிமை என்று அவர் குரல் கொடுத்தபோது சில தொழிற்சங்கத் தலைவர்கள் எள்ளி நகையாடினார்கள். அனைவருக்கும் போனஸ் என்றால் எவருக் கும் போனஸ் இல்லை என்றனர். ஆனால் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக வரலாறு கே.ஜி.போஸ் கூற்று சரியென நிரூபித்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பல முறை சிறை சென்ற தோழர் கே.ஜி. போஸ் மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.

மார்க்சிய கொள்கைகளின் பால் இறுதிவரை போராடிய அவரை கொடு மையான புற்றுநோய் ஆட்கொண்டிரா விட்டால் மேலும் பல ஆண்டுகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியிருப்பார். உழைப்பாளி மக்களின் முன்னேற்றமே தனது லட்சியமாகக் கொண்டிருந்த போஸ் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என்றென்றும் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். அந்த வகையில் தொலைபேசித் துறையில் இருந்து ஒய்வு பெற்ற ஊழியர் தோழர் ஆர். விஜயலட்சுமி தொகுத்துள்ள ‘ கே.ஜி.போஸ்- தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு சகாப்தம்’ என்ற நூல் அனைவரும் படித்து கற்றுணர வேண்டிய நூலாகும்.
Courtesy Theekkathir Tamil Daily. கே. ஜி. போஸ்தபால் -தந்தி தொழிற் சங்க இயக்கத்தின் ஒரு சகாப்தம்தொகுப்பாசிரியர்: ஆர். விஜயலட்சுமிவெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டைசென்னை - 600 018பக்: 112 விலை ரூ. 60 /-