Showing posts with label வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம். Show all posts
Showing posts with label வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம். Show all posts

Monday, 10 February 2014

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்



வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

   கோவையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள். (படம்: ஜெ.மனோகரன்)
            வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும்சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்  2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குவங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவைகளின் செயல்பாடுகள் முடங்கியது மட்டுமல்லாமல், அவ்வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.வங்கி ஊழியர் போராட்டம் வெல்ல பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 
                  <நன்றி :- தி ஹிந்து