Friday 3 April 2020

’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”





’ஒப்பந்த ஊழியர் நிவாரண நிதி”
அன்பார்ந்த தோழர்களே,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய பிடித்தம் இல்லாமல் அனைத்து நிறுவனங்களும் முழு ஊதிய வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், நமது BSNLல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 முதல் 14 மாதங்கள் வரை ஊதியம் தராமல் உள்ள நிலை தொடர்கிறது. 

கொரோனா பாதிப்பின் காரணமாக மேலும் பாதிப்படைந்துள்ள, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் முடிவெடுத்து அதற்கான நிதியினை திரட்ட அறைகூவல் விடுத்துள்ளது. ஒரு குறுகிய கால இடைவெளியில் நமது தமிழகத்தில் இதுவரை 1,57,333 ரூபாய்கள் நிதியாக குவிந்துள்ளது. இதற்காக நிதி உதவி அளித்திட்ட அனைவருக்கும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட சங்கங்களுக்கும், குறிப்பாக நெல்லை மாவட்ட சங்கத்திற்கும், வழி காட்டியுள்ள பல்லடம் கிளை சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள். 

ஆனால் இன்னமும் ஒரு சில மாவட்டங்கள் தங்கள் கணக்கை துவங்க கூட இல்லை. அனைத்து மாவட்டங்களிலும், தங்களின் முழு சக்தியை திரட்டி வசூலிக்க வேண்டி உள்ளது. விரைவாக செய்ய வேண்டிய பணி இது. ஊரடங்கு என்கிற தடை நம்முன் உள்ளது. தடைகளை தகர்த்தெறிந்து எப்போதும் முன்னேறி வரும் நாம், இந்த தடையையும் தாண்டி நமது தோழர்களின் நலன்களுக்காக உடனடியாக நிதி திரட்டிடுவோம். 

நமது ஊழியர்கள், நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தோழர்கள், அதிகாரிகள் மற்றும் அனைவரிடமும் நாம் இதற்கான நிதியினை பெற்று அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விரைவில் உதவிடுவோம்..

No comments:

Post a Comment