Wednesday 6 May 2015

பிஎஸ்என்எல் சேவை குறைபாடுகள்




பிஎஸ்என்எல் சேவை குறைபாடுகள்:

 மக்களவையில் பாஜக சாடலை வரவேற்ற எதிர்க்கட்சிகள்
நாடு முழுதும் பி.எஸ்.என்.எல். சேவைகளின் தரம் மிகவும் மோசமாகியுள்ளதாக மக்களவையில் உறுப்பினர்கள் பலரும் கடும் குற்றம்சாட்டினர்.
பி.எஸ்.என்.எல்-ன் சேவைகள் நாடு முழுதும் மோசமாக உள்ளது பற்றி இன்று மக்களவையில் பாஜக உறுப்பினர் சஞ்சய் தோத்ரே கேள்வி எழுப்பும் போது, ”தங்களது சேவைகளை மேம்படுத்தும் எண்ணமே பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இல்லை, ஒரு வேளை இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சார்பாக மறைமுகமாக பணியாற்றுகின்றனரோ, தனியார் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை பரவலாக்க வழிவகை செய்கின்றனரோஎன்று கேட்க, எதிர்கட்சித் தரப்பிலிருந்து பலத்த கரகோஷம் எழுந்தது.
இதற்கு பதில் அளித்த தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தே பி.எஸ்.என்.எல் தனது சேவையில் சரிவடைந்துள்ளது. ஒரு சமயத்தில் ரூ.10,000 கோடி லாபம் ஈட்டி வந்த பி.எஸ்.என்.எல். தற்போது ரூ.8,000 கோடி வரை நஷ்டத்தில் இயங்கி வருகிறதுஎன்றார்.
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மோசமான சேவைகளை வழங்குவதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். உதவுகிறதோ என்ற பாஜக உறுப்பினரின் கேலியை ரவிசங்கர் பிரசாத் மறுதலித்தார்.
மற்றொரு பாஜக உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத், “நாடாளுமன்ற வளாகத்துக்குள் வழங்கும் வை-ஃபை மற்றும் பிராட்பேண்ட் சேவைகள் கூட திருப்திகரமாக இல்லைஎன்றார்.
இதற்கு பதில் அளித்த ரவிசங்கர் பிரசாத், “பி.எஸ்.என்.எல். சேவைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்என்றார்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு கட்சிகாரர்களும்தான்  பி.எஸ்.என்.எல். சேவையை முடமாக்கிவிட்டு
தனியார் கம்பெனிகளுக்கு  ஆதரவாக திட்டங்கள் தீட்டியவர்கள். அரசும்,தனியார் கம்பெனிகளும்  
பி.எஸ்.என்.எல். க்கு தரவேண்டிய USO, ADC கட்டணம், ஆண்டு மற்றும்
ஒன்றிற்கு 10 ஆயிரம் கோடிரூபாய் இழப்பு ஏற்படும் கிராமப்புற சேவைக்கான நக்ஷ்ட ஈடு போன்ற வைகளை 
பி.எஸ்.என்.எல். க்கு வழங்காமல் பி.எஸ்.என்.எல் ஐ முடமாக்கியவர்கள் அவர்களே.
பி.எஸ்.என்.எல் ஊழியர்கள்/ அதிகாரிகள் இணைந்து  நாட்டுமக்களிடம் பிரச்சனையை எடுத்து சொல்லி
கையெழுத்து இயக்கம் நடத்தினோம், இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்தோம். விளைவு மக்களவையில்
 பி.எஸ்.என்.எல் ஐ  பற்றி விவாதம்.
நல்லமுடிவு வரும் என்று நம்புகிறோம். இல்லையேல் வீறுகோண்டெழும் நமது போராட்டங்கள்.
குற்றவாளிகள் மேலே சொல்லப்பட்ட இரண்டு கட்சிகாரர்களும்தான் என்பதை பாருக்கு பறைசாற்றுவோம்!!



No comments:

Post a Comment