Monday, 5 January 2015

Vodafoneக்கு கோடிவரிச்சலுகை -BSNL சீர்குலைக்க மோடி அரசு



Vodafoneக்கு கோடிவரிச்சலுகை -BSNL சீர்குலைக்க மோடி அரசு

BSNLநிறுவனத்தை புதுப்பிக்கக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் BSNLஅலுவலகங்கள் முன்புதார்ணாநடைபெற உள்ளதாக அனைத்து BSNL ஊழியர் சங்கங்களின்சம்மேளனம் தெரிவித்துள்ளது.தில்லியில் BSNL சங்கங்களின் சம்மேளனத்தின் அமைப்பாளர்வி..என்நம்பூதிரி கூறியதாவது:BSNL நிறுவனத்தைப் புதுப்பிக்க அவசர நடவடிக்கைகளை அரசுஎடுக்க வேண்டும்வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவை களை மேம்படுத்த வேண்டும்.
இதுகுறித்து அரசும்,BSNL நிர்வாகமும் எதிர்மறையான அணுகுமுறையையேமேற்கொள்
கின்றனமொபைல் வழித்தடங்கள்கேபிள்கள்மின்கம்பிகள்பிராட்பாண்ட் மோடம்மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட பல கருவிகள் புதிய தொடர்புகள் வழங்கவும் மேம்பட்டசேவையை வழங்கவும் தேவைப்படுகின்றனஇவற்றை அரசு உடனடியாக வழங்கவேண்டும்.தகவல்தொடர்புத்துறை அமைச்சர் BSNL அலைக்கற்றைகளை சமர்ப்பித்ததற்காக கட்டணமாக 6000 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக உறுதிஅளித்துள்ளார்இதேபோல நிலுவைத் தொகையாக USO நிதியிலிருந்து 1,250 கோடிரூபாய் தர வேண்டியுள்ளது.வோடபோன்நோக்கியா ஆகிய கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுஆனால்அரசின் சொந்தக் கம்பெனியான BSNLக்கு எந்த உதவியும்அளிக்கப்படவில்லை.BSNLலின் மூன்று பதவிகளான CMDஇயக்குநர்(நிதிமற்றும் இயக்குநர் (மனிதவளம்)ஆகியவை பல மாதங்களாக நிரப்பப்படவில்லை.இதனால்அன்றாடச்செயல்பாடுகள் தாமதமாகின்றன. 1,30,000தொழிலாளர்கள் பழுதடைந்த தடங்களை சரி செய்வதுபராமரிப்பு ஆகிய பணிகளை பார்த்து வந்தனர்.கடந்த2000ல் இவர்கள் பதவி ஓய்வு பெற்றனர்ஆனால் அதற்கு பின்னர் இவர்களின் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை.இதனால் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதுஇந்த பிரச்சனைகள் குறித்து தொடர்புத்துறை அமைச்சர்BSNLசெயலாளர் DOTCMD ஆகியஅனைத்துத்துறை அதிகாரிகளி டமும் அனைத்து பிரச்சனைகள் குறித்து விரிவானமனு அளித்துள்ளோம்இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஇந்தப் பிரச்சனைகள் குறித்துபேசுவதற்கு ஊழியர்களை அழைத்து ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.இத்தகைய சூழ்நிலைமைகளில்BSNL சங்கங்களின் சம்மேளனம் வரும் ஜனவரி 6ம்தேதியிலிருந்து 8ம்தேதி வரை இந்திய நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தார்ணாநடத்துவதென முடிவு செய்துள்ளது.இந்த கோரிக்கைகளைநிறைவேற்றாவிட்டால் மார்ச் 17ம்தேதியிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம்போராட்டம்நடத்தப்படும் என்று அறிவித்துக் கொள்கிறோம் என்று அகில இந்திய  BSNL   சங்கங்களின்சம்மேளனத்தின் அமைப்பாளர் வி..என்நம்பூதிரி கூறினார். (INN)

No comments:

Post a Comment