Tuesday 11 November 2014

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்



பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம் .கே.பத்மநாபன் அழைப்பு

பிஎஸ்என்எல் உள்பட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து சீர்குலைக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்படும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து தரப்பு பொதுத்துறை ஊழியர்களும் ஒன்றுபட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் அகில இந்திய தலைவர் .கே.பத்மநாபன் அழைப்புவிடுத்தார்.பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் யூனியன் (பிஎஸ்என்எல்இயு) 7வதுஅகில இந்திய மாநாடு கொல்கத்தாவில் நவம்பர் 6 அன்று துவங்கி நடைபெற்றது. மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றிய .கே.பத்மநாபன், இந்தியாவின் விடுதலை இயக்கத்திலும், அதன்பின்னர் நாட்டின் வளர்ச்சியிலும் தொழிற்சங்க இயக்கம் மிக முக்கிய பங்காற்றியுள்ளது என சுட்டிக்காட்டினார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள பாஜக கூட்டணி அரசுக்கும், முன்பிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் இடையே பொருளாதாரக் கொள்கைகளில் எந்தவேறுபாடும் இல்லை என குறிப்பிட்ட அவர், மோடி அரசு நாசகரநவீன தாராளமயக் கொள்கைகளில் இன்னும் தீவிரமாக அமல்படுத்துகிறது என குறிப்பிட்டார்.பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, காங்கிரசை பற்றி அது கடுமையாக விமர்சித்தது; காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கொள்கை முடக்கம் ஏற்பட்டுவிட்டதாக பாஜக சாடியது. அதன்உண்மை அர்த்தம் என்னவென்றால், பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் பன்னாட்டு மற்றும் இந்திய பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி கொள்ளும் விதமாக மிக வேகமாகஅவற்றின் பங்குகளை காங்கிரஸ்தலைமையிலான அரசு விற்பனைக்கு கொண்டுவரவில்லை என்பதுதான்;
காங்கிரஸ் கூட்டணி அரசைவிட தற்போது நாங்கள் மிக வேகமாக இவற்றையெல்லாம் விற்கிறோம் என்று இப்போது மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது என .கே.பத்மநாபன் குறிப்பிட்டார்.குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்தை முற்றாக ஒழித்துக் கட்ட மோடி அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதை எதிர்த்து, ‘பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம்என்ற அறைகூவலுடன் 2015 பிப்ரவரியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவோம் என அறிவித்துள்ளன. இந்த முடிவை வெகுவாக பாராட்டிய சிஐடியு தலைவர் .கே.பத்மநாபன், பிஎஸ்என்எல் ஊழியர்களின் இந்த மகத்தான போராட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத் துறை ஊழியர்களையும் போராட்டப் பாதையில் அணிவகுக்க செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு முழுவதும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி..என்.நம்பூதிரி தலைமையேற்றார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.கிருஷ்ணன் உள்பட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று உரைநிகழ்த்தினர்.மாநாட்டின் நிறைவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. உரையாற்றினார்.


No comments:

Post a Comment