
Wednesday, 20 November 2013
Tuesday, 19 November 2013
TTA waiting list
Office of the
General Manager,
Vannarpettai, Tirunelveli-3.
Phone Nos.
(0462)2500450/2500410
Fax No. 2501111
|
TIRUNELVELI
TELECOM DISTRICT
|
To
All SDEs,
Tirunelveli
Telecom Dist.
No.E.4/TTA/WL/2013-14/01 dt. at Tirunelveli-627003 the 18 .11.2013.
Sub: Provisional Waiting List of request
transfer cases of TTAs – reg.
The
provisional Waiting List as on 14.11.2013 related to the transfer requests in
respect of TTAs who have completed two years of tenure period {eligibility criteria for applying
transfer} in the present station is
attached herewith {List 1}.
·
All the unit
heads are requested to bring to the notice of TTAs working under their control
about the Waiting List.
·
If any discrepancy
is noticed in the Waiting List, the TTA concerned may submit a representation
through his/her controlling officer to
this office before 25.11.2013 for correction of the list, after verification.
·
Representation for
adaptation in the Waiting List, received after the due date, will not be
entertained.
Further
it is intimated that request transfer applications of the TTAs {List-2 enclosed} received by this office, who have not completed the minimum two years
of service in the present station, has
been recorded and no correspondence will be made in this regard.
However
such officials are instructed to apply fresh, on completion of their tenure
period, for considering their transfer requests.
-/Signed/-
Asst. General Manager (HR&Admn),
O/o General Manager, BSNL,
Tirunelveli-627003.
Copy to: All DEs, TVL
Telecom Dist.
Encl:
|
|
Corporate Office, Bharat Sanchar
Bhawan, Harish Chandra Mathur Lane, Janpath, New Delhi-110001. www.bsnl.in
siraj/wl/tta/16112013.
BHARAT SANCHAR NIGAM LIMITED | ||||||||
TIRUENLVELI TELECOM DIST | ||||||||
LIST - 1 | ||||||||
PROVISIONAL WAITING LIST OF TTAs AS ON 14.11.13 | ||||||||
Sl No | WL No | Name Shri/Smt/Kum | HRMS No | Station From | Station To | Date of application | Date of receipt of application | |
1 | 1 | MURUGAN P -I | 198700139 | VRN | ASD | 29-Jan-09 | 9-Feb-09 | |
2 | 2 | UCHIMALI M | 199200315 | MDL | ASD | 17-Sep-09 | 6-Oct-09 | |
3 | 1 | NAGOOR M A | 198700337 | PVC | CDI | 5-May-12 | 9-May-12 | |
4 | 1 | AMIRTHAVALLI T | 200802206 | SNL | SGR | 20-Jul-12 | 21-Jul-12 | |
5 | 1 | ARUNA SENTHURKANI K | 200803002 | VLO | TVL/PLC | 11-Nov-10 | 6-Dec-10 | |
6 | 2 | ANAND A | 200800754 | CTK | TVL/PLC | 17-Jan-11 | 22-Jan-11 | |
7 | 3 | RAMESH M R | 200902641 | SRM | TVL/PLC | 6-Feb-11 | 10-Feb-11 | |
8 | 4 | KARTHIKEYAN P | 200902632 | ANP | TVL/PLC | 29-Mar-11 | 12-Apr-11 | |
9 | 5 | VIJAY A | 201000016 | TSV | TVL/PLC | 12-Jun-12 | 27-Jun-12 | |
10 | 6 | ARUL GANESH M | 200600043 | MNU | TVL/PLC | 8-Nov-11 | 15-Nov-11 | |
11 | 7 | BALAMURUGAN P | 200800937 | KVV | TVL/PLC | 9-Oct-12 | 18-Oct-12 | |
12 | 8 | ANANDAVALLI T | 200800304 | PVC | TVL/PLC | 29-Mar-11 | 6-Apr-11 | |
13 | 9 | SUNDAR SELVAN R | 200801398 | NNG | TVL/PLC | 17-Jul-12 | 21-Jul-12 | |
End of List |
BHARAT SANCHAR NIGAM LIMITED | ||||||
TIRUNELVELI TELECOM DIST | ||||||
LIST - 2 | ||||||
The following transfer requests are recorded since the TTA s are yet to complete TWO years of service in the Present Station | ||||||
WL No | Name Shri/Smt/Kum | HRMS No | Station From | Station To | Date of application | Date of receipt of application |
1 | SHEIK FAREED S K | 198300811 | MRI | TVL/PLC | 28-May-12 | 7-Jun-12 |
2 | JOHN JERIL S | 200700687 | SGR | TVL/PLC | 8-Jul-13 | 16-Jul-13 |
3 | MURUGAN S | 199400494 | NNG | VLO | 26-Jul-13 | 27-Jul-13 |
4 | PIRAGASAM I | 199400276 | SNL/OFS | NNG | 15-Jan-13 | 21-Jan-13 |
5 | KANAGARAJ V | 199300439 | ULM | MRI | 27-Dec-12 | 10-Jan-13 |
6 | BANUMATHI P | 198400546 | MDL | TVL/PLC | 18-Mar-13 | 27-Mar-13 |
7 | RAJAGOPAL.P | 199300466 | TSV | TVL/PLC | 11-Mar-13 | 22-Mar-13 |
8 | SANKAR R | 199200491 | SNC | TKS | 8-Mar-13 | 14-Mar-13 |
9 | GANESAN.S | 198300682 | VDN | SNC | 11-Jun-13 | 13-Jun-13 |
10 | SUGANTHI BANU S | 199903061 | SNL | CDI | 29-Oct-13 | 1-Nov-13 |
11 | SUBRAMANIAN P | 199300195 | SVG | PUG | 16-May-13 | 24-May-13 |
12 | CHRISTOPHER RAJADURAI | 199400415 | TSV | SNL | 30-Oct-13 | 11-Nov-13 |
13 | MANIKANDAN P | 200400391 | KDN | PVC | 16-Sep-13 | 18-Sep-13 |
14 | RAJENDRAN P | 198201003 | PUG | KNR | 2-Sep-13 | 3-Sep-13 |
TTA Recruitment Rules.
Corporate Office has released draft TTA Recruitment Rules.
BSNLEU has long been demanding suitable amendments to the Recruitment Rules of TTA. This was discussed many times in the National Council. This was also one of the demands for the one day strike that was proposed to be held on 25th October. Corporate Office has now released the draft RR of TTA cadre and has sought the views of the Recognised Unions. According to this draft, all non-executives in the 9020-17430 pay scale and above, including industrial workers, with 10+2 qualification and 5 year service can appear the exam (LDCE). Views on these RR, may immediately sent to CHQ through E-Mail. <<view draft>>
Monday, 18 November 2013
இந்திய வரலாற்றை திரித்தல் எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது
இந்திய வரலாற்றை திரித்தல்
எத்தனை செண்டுகள் பூசினாலும் உங்கள் கைகள் மணக்காது
2014 பொதுத் தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய
சூழ்நிலையில், மிகவும் விபரீதமான முறையில் நம்முடைய வரலாற்றை
மாற்றியமைப்பதற்கான முயற்சி களும் நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘மனி
தர்களே வரலாற்றைப் படைக்கிறார்கள். ஆயினும் அது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
சூழ்நிலைகளில் அல்ல’’ என்று மாமேதை மார்க்ஸ் ஒருதடவை சொல்லி
இருந்தார். அந்தச் சூழ்நிலைகள் அவர்களுக்கு ஆதரவானதாக இல்லாமல் இருக்கலாம், உண்மையில்
நாம் சுதந்திரம் பெற்ற சமயத் தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு ஆதரவான நிலையில்
சூழ்நிலைமைகள் இல்லாமல் தான் இருந்தது.
எனவேதான் நாம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை
நிறைவேற்றியபோது, ஆர்.எஸ்.எஸ் கூடாரம் இந்தியாவை ஒரு வெறிபிடித்த
சகிப்புத்தன் மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றிட
சாதகமான சூழ்நிலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைப்பதற்கு பகீரத முயற்சிகளை
மேற்கொண்டன. நம் நாட்டில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றுக் கிடையிலும்
ஒற்றுமையுடன் வளர்ந்து வந்த நம் நாகரிக வரலாற்றைச் சிதைத்தும், திரித்
தும் கூறுவதன் மூலம் மட்டுமே அவ்வாறு சூழ்நிலை இருந்தது என்று மக்களை நம்ப வைக்க
முடியும்.
‘இந்தியாவில் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள், இந்துக்கள்
மட்டுமே, எவ்வித இடையூறு மின்றி மிகவும் பெருமைகொள்ளும் விதத் தில்
வாழ்ந்தார்கள்’ என்று இந்தியாவின் வர லாற்றைச் சித்தரிப்பதன் மூலம் மட்டுமே
தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தற்
போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தாங்கள்
விரும்பும் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான அவர்களு டைய
தத்துவார்த்த அடித்தளங்களின் மையக்கூறு இதுவேயாகும். இந்தியாவின் வரலாற்றை அவர்கள்
விரும்பும் வண்ணம் திரித்து மாற்ற முயலும் போது ஆர்.எஸ்.எஸ். பல்வேறு பிரச்சனை களை
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள
வரலாற்றிற்கான சாட்சியங்கள் பலவற்றை இதற்காக அது மாற்றிட வேண்டிய கட்டாயத்
திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவற்றில் மிக வும் முக்கியமான பகுதி என்பது இந்திய
மக்க ளின் வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத் தில் ஆர்.எஸ்.எஸ். முழுமையாகவே
பங்கேற் காது ஒதுங்கி இருந்ததாகும்.
இவ்வாறு ஒதுங்கி இருந்ததற்கான காரணங்களை மக்கள் மத்தியில்
விளக்க முடியா நிலையில் அது இருக்கிறது. ஒருகாலத்தில் அவர்களு டைய தத்துவ ஆசானாக
விளங்கிய நானாஜி தேஷ்முக் தன்னுடைய புத்தகமொன்றில் ஆர் . எஸ்.எஸ். இந்திய
விடுதலைப் போராட்டத் தில் பங்கேற்காமல் விலகி இருந்தது என்று
குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்து மத உணர்ச்சிகளை மக்கள் மத்தியில்
விசிறிவிட இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரண மாக, முஸ்லீம்
லீக் கட்சியும் முஸ்லீம்கள் மத்தியில் மத உணர்வைக் கிளப்பிவிடுவதற் கும் அதன்
மூலம் பிரிட்டிஷார் தங்களுடைய ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யை
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப் பினைச் செய்தது. ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்துடன் சம்பந்தப் பட்ட நபர் ஒருவர் விடுதலைப் போராட்டத் தில் கலந்து
கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமானால் ஒரேயொரு வரைத்தான் சொல்ல முடியும். அது
வி.டி. சாவர்கர் மட்டுமேயாகும். இந்துத்துவா கொள்கைப் பிடிப்புள்ள வரலாற்றாசிரியர்
ஆர்.சி. மஜும்தார் அந்தமான் செல்லுலர் சிறைகளில் இருந்தவர்களின் வாழ்க்கைக்
குறிப்புகள் குறித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
அவ்வாறு அவர் எழுதியுள்ளதில் வி.டி.சாவர் கர்தான்
சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிரிட்டிஷாரிடம் எவ்வாறெல்லாம்
கூழைக் கும்பிடு போட்டுள் ளார் என்பதை விவரித்துள்ளார். இந்த சாவர் கர்தான் இந்து
மகா சபைக் கூட்டம் ஒன்றில் தலைமையுரை ஆற்றுகையில் இந்தியாவில் இரு தேசங்கள்
இருக்கின்றன, அவை
இந்து மற்றும் இஸ்லாமிய தேசங்கள் என்று முதன் முறையாக ஒரு கருத்தை முன்வைத்தார்.
முகமது அலி ஜின்னா தன்னுடைய இரு தேசக்கொள்கையை முன்வைத்து நடை முறைப்படுத்த
முயல்வதற்கு ஈராண்டுகளுக் கும் முன்பே வி.டி.சாவர்கர் இவ்வாறு கூறி னார். இவ்வாறான
இவர்களுடைய இரு தேசக் கொள்கையை பிரிட்டிஷார் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டைப்
பிரித் திடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி னர். அதேபோன்று ‘இந்துத்துவா’ என்ற
சொல்லையும் உருவாக்கியது வி.டி.சாவர்கர் தான். அவ்வாறு இந்தச் சொல்லை அவர் உரு
வாக்கும்போது இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு என்றும் இரண்டுக்கும்
அநேகமாக எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் கூறி னார்.
மேலும் இந்து தேசத்தை உருவாக்கிட அவர் ஒரு கோஷத்தை
முன்வைத்தார். அதா வது, ‘‘ராணுவத்தை இந்துமயமாக்குங்கள், இந்து
தேசத்தை ராணுவமயப்படுத்துங்கள்’’ என்றார். இந்தக் கோஷம்தான் இந்துத்வா
பயங்கரவாதத்தின் சமீபத்திய நிகழ்வுகளுக் கும் உந்துசக்தியாக
இருந்திருக்கிறது.இந்தக் குறிக்கோளை இந்துத்வாவாதி கள் எய்த வேண்டுமானால், மதவெறியைக்
கூர்மைப்படுத்துவதுடன், நாட்டின் வரலாற் றையும் மிகப்பெரிய
அளவிற்கு மாற்றி எழுத வேண்டியது அவசியமாகும். ‘‘நாங்கள்
மத்தி யில் ஆட்சிக்கு வரும்போது, பாடப்புத்தகங் களை மாற்றி எழுத
இருக்கிறோம்’’ என்று பாஜகவின் முன்னாள் தலைவர் ஒருவர் பேசியதை ஊடகங்கள்
வெளியிட்டிருக்கின் றன. (இந்துஸ்தான் டைம்ஸ், 2013 ஜூன் 24). ‘‘இவ்வாறு
செய்வதற்கு முன்பும் முயற்சித் தோம், மீண்டும் முயற்சிப் போம்’’ என்று
அவர் கூறியிருக்கிறார். அன் றைய தினமே அத்வானியும், ‘‘ஜம்மு-காஷ்மீர்
மாநிலத் திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது
விதியை ரத்து செய் வதற்காக நாடு இன்னமும் காத்துக் கொண்டி ருக்கிறது’’ என்று
பேசியிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் கூடாரம், சர்தார் வல்லபாய் பட்டேலைத் தவறாகப்
பயன்படுத்த மேற் கொண்டுள்ள சமீபத்திய முயற்சிகள் ‘‘இந்து தேசம்’’ என்னும்
தங்கள் குறிக்கோளை உயர்த்திப் பிடிப்பதற்காக இந்தியாவின் வர லாற்றைத் திருத்தி
எழுதுவதற்கான ஒட்டு மொத்த முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். மகாத்மா காந்தி படுகொலை
செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து
சர்தார் பட்டேல் வெளியிட்ட அறிக்கை குறித்து இப்பகுதியில் நாம் ஏற்கனவே
குறிப்பிட்டிருக்கிறோம். சர்தார் பட்டேல் ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறி சித்தாந்தத்
திற்கு முற்றிலும் எதிரானவர் என்பதையே இது காட்டுகிறது.
ஆயினும் பாஜக சார்பில் பிரதமர் வேட் பாளராக
அறிவிக்கப்பட்டிருப்பவர், வரலாற்றை எவ்விதக் கூச்சநாச்சமுமின்றி
சிதைத்தும் திரித்தும் ‘‘தங்களுக்கு சாதகமான சூழ்நிலை யை’’ உருவாக்குவதற்காக, அவசரகதியில்
புதிதாக ஒரு ‘வரலாற்றை
உருவாக்க’ முயல்வது
போலவே தோன்றுகிறது. சர்தார் பட்டேலின் புரவலர் என்று தன்னைச் சித்தரிக்க முயற்
சிப்பதுடன், பாட்னாவில்
நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மோடி, தட்சசீலம் (தற் போது அது பாகிஸ்தானின்
ஒரு பகுதியாக இருக்கிறது) பீகாரில் இருந்ததாக உரிமை கொண்டாடி யிருக்கிறார். அவர்
மேலும், பீகாரில்
கங்கை நதிக்கரை யோரம்தான் அலெக்சாண்டர் இறந்தார் என்றும் கூறி யிருக்கிறார். என்னே
ஆச்சர்யம்! பின்னர். ஒரு நேர்காணலின்போது, ஜவஹர்லால் நேரு, சர்தார்
பட்டேலுடன் தங்களுக்குள் தீர்க் கப்பட முடியாத அளவிற்கு அரசியல் கருத்து
வேறுபாடுகளின் காரணமாக, சர்தார் பட்டே லின் இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்ளா மல் ஒதுங்கி இருந்தார் என்று அளந்திருக் கிறார். பின்னர் இந்த
உண்மையின்மையை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வந்த தாக்கு தலைத் தொடர்ந்து அவர்
திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
அதேபோன்று, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி உண்மையில்
இறந்ததற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று கூறியது குறித்தும், அவர்
குஜராத்தின் பெருமைமிகு புதல்வர் என்றும் கூறியிருந்தார். இவ்வாறு வரலாற் றைத்
திரித்துக் கூறியமைக்காக மீண்டும் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, இதே போன்று
எல்.கே.அத்வானியும் வரலாற்றைத் திரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டி
ருக்கிறார். எம்.கே.கே.நாயர் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றை மேற்கோள்காட்டி, ஹைத ராபாத்
மாகாணத்தில் போலீஸ் நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது பட்டேலை நேரு ஒரு
‘வகுப்புவாதி’ என்று
அழைத்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை வரலாறு என்ன? அத்தகையதோர்
அமைச்சரவைக் கூட்டம் 1948 ஏப்ரலில் நடந்ததாகக்
குறிப்பிடப்படுகிறது. ஆனால் திருவாளர் எம்கேகே நாயர் ஐஏஎஸ் அதிகாரி யாகப் பணியில்
சேர்ந்ததே 1949இல்தான். மேலும், அத்வானி, அப்போது இந்திய ராணுவத் தளபதியாக இருந்த
சர் ராய் புச்சர் என்பவர், 1948 செப்டம்பரில் ஹைதராபாத் தில் நடைபெற்ற
போலீஸ் நடவடிக்கை தொடர்பாக மற்றொரு வெள்ளைக்காரனான பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு
சில தகவல்களைக் கசிய வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு அதற்காக ராஜினாமா செய்யக்
கேட்டுக்கொள்ளப்பட்டார் என்றும் கூறியிருக்கிறார். இதுவும் உண்மையல்ல. மேற்படி
புச்சர் 1949 ஜனவரி 15 வரை, அதாவது ஜெனரல் கரியப்பா பொறுப்பேற்கும்
வரை, ராணுவத்
தளபதியாக தொடர்ந்து பணி யாற்றி இருக்கிறார்.
இதுபோல் எல்.கே. அத் வானியும் தன் பங்கிற்கு வரலாற்றைத்
திரித் தும் சிதைத்தும் கூறிக்
கொண்டிருக்கிறார். தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, தங்கள்
சித்தாந்தமான ஓர் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்காக, இவர்கள்
இவ்வாறு என்னதான் வரலாற் றைச் சிதைத்திடவும் திரித்திடவும் முயற்சி கள்
மேற்கொண்டாலும், நம் நாட்டின் ஒற்று மையையும் ஒருமைப்பாட்டையும் குலைப்ப
தில் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் வெற்றி பெற முடியாது. சிறந்ததோர் மதச்சார்பற்ற ஜனநாயக
இந்தியாவை உருவாக்குவதற்காக நடைபெற்று வரும் மக்கள் போராட்டங் களையும் இவர்களால்
தடுத்து நிறுத்திவிட முடியாது. நம் மக்களுக்காக சிறந்ததோர் இந் தியாவை
உருவாக்குவதற்கான முக்கியமான பிரச்சனையிலும், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடா ரம் மவுனம்
சாதிக்கிறது. ஏனெனில், நாட்டு மக்களில்
பெரும்பான்மையோருக்குத் துன் பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தி வரும் நவீன
தாராளமய பொருளாதார சீர்திருத்தங் களை இக்கூட்டமும் தாங்கிப் பிடிப்பதேயாகும்.
(தமிழில்: ச.வீரமணி)
Sunday, 17 November 2013
கொத்தடிமைகள் மறுவாழ்வு வேண்டி சென்னைக்கு பாத யாத்திரை
கொத்தடிமைகள்
மறுவாழ்வு வேண்டி சென்னைக்கு பாத யாத்திரை
குள.
சண்முகசுந்தரம்
பாதயாத்திரையில்
அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயலர் கீதா
கொத்தடிமைத்
தொழிலாளர்களை மீட்கக் கோரியும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான
மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தக் கோரியும் திருச்சியிலிருந்து சென்னைக்கு பாத
யாத்திரை வந்துகொண்டிருக்கிறது அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு.
உலகில் உள்ள
கொத்தடிமைத் தொழிலாளர்களில் பாதி பேர் (சுமார் 1.50 கோடி) இந்தியாவில் இருப்பதாக சொல்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடத்தப்பட்ட ஆய்வின்படி 1996-ல் தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இப்போது மேலும் உயர்ந்திருப்பதாக சமூக
ஆர்வலர்கள் கூறுகின்றனர். மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு உரிய
மறுவாழ்வுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும்
கொத்தடிமைத் தொழிலுக்கே போய்விடுகிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவலையும்
சொல்கிறார்கள்.
இதற்குத்
தீர்வு வேண்டித்தான் பாதயாத்திரை தொடங்கி இருக்கிறது அமைப்புசாரா தொழிலாளர்
கூட்டமைப்பு. இந்த அமைப்பின் தேசிய செயலர் கீதா ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மறுவாழ்வுத்
திட்டங்கள் இல்லை
1980ம் ஆண்டு
தொடங்கி வடமாநில கல்குவாரிகளிலிருந்து ஆயிரக்கணக் கான கொத்தடிமைத் தொழிலாளர்களை
தமிழகத்துக்கு மீட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் எதுவும்
முறையாக செயல்படுத்தப்படாததால் அவர்களில் பலர் மீண்டும் கொத்தடிமைத் தொழிலுக்கே
போய்விட்டார்கள். கல்குவாரிகள், செங்கல் சூளைகள், சுமங்கலி திட்டம் என பல வகைகளில் கொத்தடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் மக்கள்.
விடுவிக்கப்பட்ட
கொத்தடிமைத் தொழிலாளர்கள் சங்கங்களுக்குத்தான் கல்குவாரிகளைக் கொடுக்க வேண்டும் என
சிறு கனிமங்கள் சட்டத்தில் இருக்கு. ஆனா, அப்படி யாருக்கும் கொடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களுக்குதான்
கொடுக்கிறார்கள். அவர்கள் ஒரே வருடத்தில் மலைகளை தரைமட்டமாக்கிட்டுப் போயிடுறாங்க.
சான்றுக்கே
போராட்டம்
மீட்கப்பட்ட
கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு வீடு, ஆடு, மாடுகள், 20
ஆயிரம் ரொக்கம், 2 ஏக்கர் நிலம் இத்தனையும் கொடுக்கணும்னு
கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் 1976-ல் தெளிவா சொல்லிருக்கு. ஆனா, ‘இவர் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்’னு விடுதலைச் சான்று வாங்குறதுக்கே
அதிகாரிகளிடம் போராடவேண்டி இருக்கு. பல இடங்களில், கொத்தடிமைகளை மீட்க அதிகாரிகளே அக்கறை
காட்டுறதில்லை.
இதையெல்லாம்
சுட்டிக்காட்டத்தான் நவம்பர் 7-ம் தேதி திருச்சியிலிருந்து 120 பேர் பாத யாத்திரை தொடங்கி இருக்கிறோம். வழியில் உள்ள மாவட்டங்களின்
ஆட்சியர்களை சந்தித்து எங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறோம். நவம்பர் 22-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் யாத்திரையை
நிறைவு செய்துவிட்டு முதல்வரையும் கவர்னரையும் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.
Friday, 15 November 2013
மணல் அரசியல் Vs மக்கள்!
தெரிந்துகோல்வோம்
மணல் அரசியல் Vs மக்கள்!
பாரதி தம்பி
தாது மணல் கொள்ளைக்கு எதிராக மக்களின்
போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் தமிழகக்
கடலோரத்தில் கேட்கின்றன. தாது மணல் நிறுவனங்களைப் பற்றி பேசினால் உயிர் இருக்காது
என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்கள், வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர். ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆய்வுக்
குழுவினரை தங்கள் ஊருக்கும் ஆய்வுக்கு வரச்சொல்லி மக்கள் மனு கொடுத்த காட்சி, புத்தம் புதியது.
''ஆனால், ககன்தீப் சிங் பேடியின் ஆய்வே, வெறும் கண்துடைப்பு. மக்களை நம்பவைத்துக்
கணக்குக் காட்ட நடத்தப்படும் நாடகம். உண்மை யான பாதிப்பு மிகப் பிரமாண்டமானது.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தாது வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான
கதிரியக்கம்கொண்ட தனிமங்கள் அனுமதியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மக்களின்
வாழ்வாதாரம் வன்முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பலர்
உயிர் இழந்துள்ளனர். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். மொத்த தாது மணல்
நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டு அவர்களின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல்
செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அனைத்துத் துறை அரசு
அதிகாரிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்!'' என்கிறார் வாஞ்சிநாதன். தாது மணல் அள்ளப்படும் பகுதிகளில் நடத்தப்பட்ட உண்மை
அறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர். 'மனித உரிமை பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பில்
இருந்து சென்ற ஆய்வுக் குழுவினர், வி.வி. மினரல்ஸின்
தாது மணல் ஆலைகளுக்குள் நுழைந்து அங்கு நடக்கும் முறைகேடுகளை புகைப்பட
ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரு தாது மணல் ஆலையின் உட்பு றங்களும்
செயல்பாடுகளும் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை. வாஞ்சிநாதனிடம் பேசிய போது...
''இந்த கார்னெட் மணல் தொழிலில், ஆரம்பத்தில் அரசு
நிறுவனம் மட்டும்தான் ஈடுபட்டது. 1970-களுக்குப் பிறகுதான் இதில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டராஜன் இந்தத்
தொழிலுக்குள் நுழைந்ததும் இதன் பிறகுதான். கடலோரக் கிராமங்களில் ஊர் கமிட்டி முறை
உள்ளது. இவர்கள்தான் பெரும்பாலான விஷயங்களைத் தீர்மானிப்பார்கள். வைகுண்டராஜன், ஊர் கமிட்டிகளில் உள்ளவர்களை பல்வேறு வழிகளில்
வளைத்துப்போட்டு தன் ஆதரவாளர்களாக மாற்றுகிறார். இவருக்கு ஆதரவாக கடலோரத்தில் ஒரு
குழு உருவாகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் இருப்பார்கள். அடியாள் போல என்று
வைத்துக்கொள்ளலாம். வேறு வேலை எதுவும் அவர்களுக்குக் கிடையாது. மாதச் சம்பளம்
மட்டும் வந்துவிடும். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறை அனைவரும் ஆதரவு. இந்தத் தொழிலுடன்
சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை, சுங்கத் துறை என அனைத்துத் துறைகளையும் தன் செல்வாக்கு எல்லைக்குள்
கொண்டுவருகிறார். அவரைக் கேட்காமல் ஓர் அணுவும் அசையாது. இதுதான் வி.வி. என்ற
பிரமாண்ட சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதன் பின்னணி.
இன்னொரு முக்கியமான விஷயம், அரசின் கொள்கை
மாற்றம். 1990-களுக்கு முன்பு, இந்தத் தொழிலை செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. இயற்கை வளங்களை
சீரழிக்கும் தொழிலைச் செய்ய வேண்டுமானால், பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 1991-ல் மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த புதிய தாராளமயக் கொள்கை, இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்த அனைத்தும் சட்டபூர்வமானவையாக மாற்றப்பட்டன.
சத்தீஸ்கரின் கனிம நிறுவனங்கள், கர்நாடகாவின்
ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டில் வி.வி.மினரல்ஸ் என நாடு தழுவிய
அளவில் கனிம வளம் பெரும் அளவில் சுரண்டப்பட, அரசின் இந்தக் கொள்கை மாற்றம்தான் காரணம். ஆனால், பெரும் லாப ருசி பார்த்துவிட்ட நிறுவனங்கள், கொள்கை, சட்ட விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு இயங்குவது இல்லை. உதாரணம், கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சுவரை ஒட்டி 'பஞ்சல்’ என்ற கிராமம் இருக்கிறது. அணு உலையையும் இந்தக் கிராமத்தையும் ஒரு
சுற்றுச்சுவர்தான் பிரிக்கிறது. அந்தச் சுவர் வரைக்கும் தாது மணலைத் தோண்டி
எடுத்திருக்கிறது வி.வி. மினரல்ஸ். பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
இத்தனைக்கும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு 300 ஏக்கர், வி.வி-யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை
எந்த நடவடிக்கையும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகளும் வி.வி-க்கு ஆதரவாக
இருக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் வைகுண்டராஜன் மீது பெயரளவுக்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டது. உடனே அதை எதிர்த்து, 19.04.2007 அன்று, அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
செய்தனர். எதற்கும் அசைந்துகொடுக்காத ஜெயலலிதா, 'வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை, ஜெயா டி.வி-யை முடக்கும் சதி’ என்று
ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இது, எல்லா ஊடகங்களிலும் அப்போது வெளிவந்துள்ளது. அத்தகைய ஜெயலலிதா அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானதாக
இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை. மக்களுக்கு இது மிக நன்றாகத்
தெரிந்திருக்கிறது. பல ஊர்களில், 'அரசு மட்டும் வி.வி. பக்கம் இல்லை என்றால், பத்தே நாட்களில் அனைத்து மணல் கம்பெனிகளையும் மூடிவிடுவோம்’ என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்களின் அச்சம்
அரசை நினைத்துதான். ஏனென்றால், கடந்த காலங்களில்
மணல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு
மோசமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அந்தக் காயத்தின் வடு இன்னும் அவர்களிடம் ஆற
வில்லை.
இப்படி சொல்வதால், 'அ.தி.மு.க- தான் வி.வி-க்கு ஆதரவாக இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் இதை எதிர்க்கிறார்கள்’ என்று புரிந்துகொள்ளத் தேவை இல்லை. தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்னை எங்கேயோ எத்தியோப்பியா பக்கம்
நடப்பதைப் போல மௌனம் காக்கின்றன. இந்து முன்னணியும் தென்னிந்திய திருச்சபையும்
ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள். சீமான், வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று
கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆக, அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்தச்
சுரண்டலுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்'' என்ற வாஞ்சிநாதன், ஆய்வில் தாங்கள் கண்ட பல அதிர்ச்சித்
தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.
''தாது மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் பெரிய இரும்புக் கோட்டையைப் போல இருக்கின்றன.
சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகளில்
வசிப்பவர்களுக்குக்கூட உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் அருகே ஐந்து
நிமிடங்கள் நின்றாலே, விசாரிக்க ஆள் வந்துவிடுகிறார்கள். பெரியதாழை
என்ற ஊரில் தாது மணல் சுரண்டப்பட்டதால், மொத்தக் கடற்கரையும் சிதைக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த
இடத்தில் கழிவு மணலைக் கொட்டி நிரப்பி எதுவுமே நடக்காததுபோல மாற்றியுள்ளனர். உவரி
கடற்கரையிலும் இதேபோல நடந்துள்ளது. பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி வரையிலான
கடற்பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட
கடற்பகுதி. பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியை 'மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம்’ என்று அழைக்கின்றனர். மீனவர்கள், இந்தப் பகுதியில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி
மீன் பிடித்தாலே கடும் தண்டனை உண்டு. ஆனால், இங்கு மோசமான விதிமீறல்களை நிகழ்த்தி தாது மணல் கழிவைத் திறந்துவிடுகின்றனர்.
கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறிக்கிடக்கிறது. 'சிங்க இறால்’ என்ற நல்ல விலைபோகக்கூடிய மீன் வகைகள் இந்தப்
பகுதியில் நிறைய கிடைத்துவந்தன. இப்போது அவை கிட்டத்தட்டஅழிந்துவிட்டன. ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியதாழைத் தூண்டில்
வளைவு, தாது மணல் நிறுவனக் கழிவினால்
மூடப்பட்டுவிட்டது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலருக்கு தலை, கால், தண்டுவடம் அடிபட்டு முடமாகியுள்ளனர்.
மணல் கழிவுகள் கடற்கரையில் மலைபோல் குவிவதால்
மீனவர்களின் படகுகளைக் கரையேற்ற முடியவில்லை. சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்... என விதவிதமான நோய்கள்
மீனவர்களைத் தாக்குகின்றன.
இப்படி மொத்தக் கடலோரமும் சொல்ல முடியாத
அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பி.ஆர்.பழனிச்சாமி கிரானைட் வளத்தைக்
கொள்ளை அடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். அதைவிட இங்கு 100 மடங்கு கொள்ளை நடந்துள்ளது. ஏன் இதுவரை
வைகுண்டராஜனைக் கைதுசெய்யவில்லை? இப்போது
மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை
உருவாக்கும் வேலை நடந்துவருகிறது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தென் தமிழக
மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும்கூட, இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற
உத்வேகத்துடன் போராடிவருகின்றனர். அவர்களுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்!'' என்கிறார் வாஞ்சிநாதன்!by ananda vikatan
Subscribe to:
Posts (Atom)