Sunday, 11 December 2016
Tuesday, 6 December 2016
டாக்டர் அம்பேத்கர்
அஞ்சுவது யாதோன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை----
இந்திய விடுதலைக்குப் பின்னர்
நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச்
சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்ட
பொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர்
6-ல்
காலமானார்.
Monday, 5 December 2016
ஆளுமைக்கு... அஞ்சலி
ஆளுமைக்கு... அஞ்சலி
முதல்வர்
ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலிகள். மக்கள்
அவரைப் பெரிதும் நேசித்தனர். பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் எனும் எந்த இரத்த பந்தமும் அருகில்
இல்லாமல் அவரை நேசித்த மக்கள் மட்டுமே சூழ அவர் மரணம் நிகழ்ந்துள்ளது. வாரிசு என
யாரையும் விட்டுச் செல்லவில்லை; நியமித்தும்
செல்லவில்லை. அவரது ஆளுகை என்பது மற்ற எல்லா ஆளுகையையும் போல இன்னொரு ஆளுகை. ஒரு populist
அரசாக அது இருந்தது.
எல்லா மனிதர்களையும் போல அவரும் மாறிக் கொண்டிருந்தார். காலம் அவரிடமும்
மாற்றங்களை விளைவித்துக் கொண்டிருந்தது. மதமாற்றத் தடைச் சட்டம், பா.ஜ.க ஆதரவு, ஈழப் போராட்ட எதிர்ப்பு முதலான அவரது முதற்
கட்ட மோசமான நடவடிக்கைகளை அவரது பிந்தைய
ஆட்சிகளில் அவர் தொடரவில்லை. சங்கராசாரி, சுப்பிரமணிய சாமி முதலான நபர்களுக்கும் அவர் எதிராக இருந்தார். மக்கள் அவர் மீதுகொண்டிருந்த நேசம் கவனமான ஆய்வுக்குரிய ஒன்று. யாருடைய
மரணத்திற்கும் அஞ்சலி செலுத்தச் செல்லும்போது அவரது ரத்த பந்தங்களின் கரங்களைப்
பற்றி ஆறுதல் சொல்லி அகல்வோம். இங்கு யாருடைய கரங்களைப் பற்றி நாம் ஆறுதல் சொல்வது.
நேற்று முழுவதும் எங்கெங்கிருந்தோ ஓடி வந்து 'அம்மா.. அம்மா..' என அலறி நின்ற அந்த அடித்தள மக்களிடம்தான் நாம்
நம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். அஞ்சலிகள்..
வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...
வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...
BSNL நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும்
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து
செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல
விடமாட்டோம்
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு
கொள்ளும்
டிசம்பர் 15 ஒரு நாள் அகில இந்திய
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்...
ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்...
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்...
Sunday, 4 December 2016
மாநில சங்க சுற்றறிக்கை
மாநில சங்க சுற்றறிக்கை
Read | Download
சுற்றறிக்கை எண்:143
நிர்வாகத்துடன் மத்திய சங்கம் சந்திப்பு மற்றும் ஜியோவின் சலுகை நீட்டிப்பும்
Thursday, 1 December 2016
மாநில சங்க சுற்றறிக்கைஎண்:142
மாநில சங்க சுற்றறிக்கைஎண்:142
Read | Download
எண்:142
8வது அனைத்திந்திய மாநாட்டு கொடியேற்றமும் கருத்தரங்கங்களும்
மாநில சங்க சுற்றறிக்கை
மாநில சங்க சுற்றறிக்கை
Read | Download
BSNLஐ காக்கும் டிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!!
துணை டவர் நிறுவனம் தொடர்பாக குழப்பமூட்டும் செய்திகளை அரசும் நிர்வாகமும் பரப்பி வருகிறது. அதனை விளக்கியும் வேலை நிறுத்தத்தின் முக்கியம் தொடர்பாகவும் மத்திய சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழாக்கம்.
Subscribe to:
Posts (Atom)



