Friday, 13 September 2019

மதிவாணனின் அவதூற்றை புறந்தள்ளுவோம்




மதிவாணனின் அவதூற்றை புறந்தள்ளுவோம்






அன்பார்ந்த தோழர்களே,
நாம் சென்னை சொசைட்டியில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் NFTE சங்க தலைமையை, அதன் உறுப்பினர்களே கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். NFTE கூட்டங்களில் நடுநாயகமாக சொசைட்டி தலைவரை உட்கார வைத்து பிரச்சாரம் செய்து வருகின்ற வேளையில், சேலம் மாவட்ட NFTE செயலாளர் சென்னை கூட்டுறவு சங்க தலமையோடு BSNLEU சங்கம் உடன்பாடு போட்டுள்ளது என்று கூசாமல் பொய் சொல்கிறார். இவருடைய புழுகினை அவரது தோழர்கள் கூட ஏற்க மாட்டார்கள்.
இவர் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார் என்றால், இவர் சார்ந்த NFTE சங்கத்தின் மூமூமூத்த துணைத்தலைவர், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மதிவாணன், முழுப்பூசனிக்காயை சோற்றுப்பருக்கைக்குள் மறைக்க பார்க்கிறார். அருவருக்கத்தக்க அவதூறுகளை பரப்பும் மதிவாணன் & கம்பெனி
பொய்யை பரப்புவதில் கோயபல்ஸ் போன்றவர் சென்னை NFTEஐ சார்ந்த மதிவாணன். சென்னை கூட்டுறவு சங்கத்தின் நிலங்களை உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்ததில் ஊழல் நடந்துள்ளது என சவுக்கு.காம் என்ற இணைய தள பத்திரிக்கை செய்தி வெளியிட்ட போது இவர் வாயை மூடிக்கொண்டிருந்தார். அந்த செய்தியினை தற்போது தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் எடுத்து சொன்னால் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அதைப்போல சொல்லக் கூடிய பொய்யைக் கூட பொருந்த சொல்ல மதிவாணனால் முடியவில்லை. தன்னுடைய அடியாட்கள் மூலம் செல்லப்பாஸ்- அபிமன்யு கார்டன்ஸ்என்று ஒரு பயங்கரமான பெரிய கட்டிடத்தின் படத்தைப் போட்டு அதன் உரிமையாளர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் என மறைமுகமாக சொல்வதை போல WHATSAPPல் அவதூறைப் பரப்புகிறார். அபிமன்யு செல்லப்பாஸ்என்ற அடுக்கு மாடி குடியிருப்பு பூனாவில் உள்ளதை இவர் கண்டு பிடித்துள்ளாராம். அது பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாம். இப்போது உண்மை விளங்கி விட்டதாம். கொலம்பஸ் இந்தியாவை கண்டு பிடிக்க புறப்பட்டு அமெரிக்காவை கண்டு பிடித்ததைப் போல மதிவாணன் கண்டு பிடித்திருக்கிறாராம். இவரது நோக்கம், நேர்மையின் உருவமான BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மீதும், உதவி பொதுச்செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்கள் மீதும் மாசு கற்பிப்பதுதான். பாவம், இதனை அவர்களின் சங்க தோழர்கள் கூட நம்ப மாட்டார்கள். இந்த இரண்டு தோழர்களின் நேர்மையையும், தூய்மையையும் பற்றி அனைவரும் அறிவார்கள். இதில் ஒரு துளி கூட உண்மையில்லை என்பதை உறுதியோடு சொல்வோம். அருவருக்கத்தக்க மதிவாணனின் இந்த அருவருப்பு அவதூறையும் அனைவரும் நிராகரித்து வருகின்றனர். ஆனால் மதிவாணனின் இந்த கேடுகெட்ட அவதூறிற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை தமிழ் மாநில சங்கம் கண்டிப்பாக எடுக்கும். ஊழல் சேற்றில் புரண்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மல்லிகையின் நறுமணம் தெரியாது. இந்த கேவலமான அவதூறுகளுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தக்க பதிலடி கிடைக்கும்.


No comments:

Post a Comment