Friday, 5 December 2014

06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . . .




06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . . .

டாக்டர் அம்பேத்கரும்சிந்தனைச் சிற்பி  சிங்காரவேலரும்  இந்தியாவின்  தலைசிறந்த சிந்தனையாளர்கள்விரிந்த  எல்லைகொண்டபடிப்பாளிகள்;   பல்துறை  ஞானம் கொண்ட  கல்விமான்கள்;  மிகப்பின்தங்கிய சமூகத்திலுருந்து மேதைகளாகமாறியவர்கள்;   சட்டத்திலும்,  பொருளாதாரத்திலும் ஆற்றல்  மிக்கவர்கள்தங்கள்இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான  நூல்களையுடைய  நூலகங்களை வைத்திருந்தவர்கள்;ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாளும்உழைத்தவர்கள்;   ஒருவர் தொடக்கக்காலத்தில்  பௌத்தராக  இருந்து   பின்னர்மார்க்சியராகமாறியவர்.  மற்றொருவர்   இந்து மதத்தில் இருப்பதை இழிவெனக் கருதிப் பௌத்தராக விளங்கியவர்.  ஒருவர்   சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டுக் காங்கிரஸ்காரராகஇருந்து பின்பு பொதுவுடைமை இயக்க   
முன்னோடியாக விளங்கியவர்.   மற்றொருவர் தலித்சமுதாயத்திற்காகவே  பாடுபட்டு,  தேசிய  இயக்கத்தையும்,பொதுவுடைமைஇயக்கத்தையும் வெளியே இருந்து நோக்கியவர்இருவரும் தொழிலாளர்
களுக்காகஉழைத்தவர்கள்போராட்டங்களில் பங்கேற்றவர்கள்இருவரும் அறிவைப் பரப்பஇதழ்களை
 நடத்தியவர்கள்ஒருவர் நாத்திகர்மற்றொருவர் ஆத்திகர்ஒருவர்சமயத்தை முற்றிலும் மறுத்தவர்
மற்றொருவர் சமயத்தைவிரும்பி மதித்தவர்.ஒருவர் உள்நாட்டிலேயே கற்று உலகத் தத்துவத்தை
(மார்க்சியம்ஏற்றவர்;  மற்றொருவர்   உள்நாட்டிலும்,  வெளிநாட்டிலும்   கற்று உள்நாட்டுத்(பௌத்தம்)தத்துவத்தை ஏற்றவர்சமுதாய மாற்றத்திற்கு ஒருவர் மார்க்சியத்தை வழிகாட்டியாக
ஏற்றவர்மற்றொருவர் சமுதாயமாற்றத்திற்குப் பௌத்தத்தை   வழிகாட்டியாகக் கொண்டவர்.ஒருவர் 86 ஆண்டுகள் வாழ்ந்தவர்;மற்றொருவர்   65 ஆண்டுகள்வாழ்ந்தவர்;  இருவரும்   பன்மொழிஅறிஞர்கள்சமுதாயப் போராளிகள்கொண்டகொள்கையில் உறுதி வாய்ந்தவர்கள்இருவரும் நேர்வழி கொண்டவர்கள்;
சலசலப்புக்கும் சமரசத்திற்கும் உட்படாதவர்கள்இருவரும் சாதியத்தையும்,வருண
பேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள்அவற்றை அறிவியல்அடிப்படையில் விளக்கியவர்கள்;
 இருவரும் பெண் முன்னேற்றத்தில் பேரீடுபாடுகொண்டவர்கள்பெண் சமத்துவத்திற்கு வழிகாட்டியவர்கள்.இருவருக்கும்
 பலஒற்றுமைகள் இருந்தாலும் மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வினையும்சாதி
வருணப் பேதங்களை ஒழிப்பதிலும் கொள்கை முறையில் வேறுபட்டவர்கள்;அதாவது அடிப்படையில்  வேறுபட்டவர்கள்;
 சமுதாய மாற்றத்திற்கும்வளர்ச்சிக்கும்மார்க்சியமே  ஏற்றதென்றவர் சிங்காரவேலர்டாக்டர் அம்பேத்கரோ பௌத்தமே
சரியானது என்றவர்இன்றைய நிலையில் இது மறுவாசிப்புக்கும் மறுசிந்தனைக்கும்உரியதுஇருவர் பார்வையிலும் எது 
சரி என்பதை சிலநிகழ்வுகளின் மூலம் ஒப்பிட்டுநோக்குவது பொருத்தமானது.

No comments:

Post a Comment