அனைவருக்கும் CUG இலவச SIM
அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும்என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கை. இதனைஅமுல்படுத்தும் முகத்தான் தற்போது வழங்கப்பட்டுள்ளஇலவச SIM விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் BSNLநிர்வாகம் கேட்டுள்ளது. CUG இலவச SIMல் மாதந்தோறும்ரூ.200/=க்குப்பேசலாம்.
குழந்தை பராமரிப்பு விடுப்பு
CHILD CARE LEAVE - மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம்தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்கஇயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
TTA பயிற்சிக்கால உதவித்தொகை
TTA பயிற்சி செல்லும் தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை STIPEND புதிய சம்பளவிகிதத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை எழுப்பிவந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கேற்ப STIPEND தொகைவழங்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதன்படி புதிய சம்பளவிகிதத்தில் 70 சதமும் அதற்கான IDA வும் பயிற்சிக்கால உதவித்தொகையாக வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் JAC சார்பாக கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள். . .
ஊழியர்சங்கங்களின் JAC கூட்டு நடவடிக்கை குழு 09/04/2014 அன்று ஆர்பாட்டம் டெல்லியில் நடத்திகோரிக்கை மனு அளித்துள்ளது. தேர்தலுக்கு பின் அடுத்த கட்ட போராட்டம் முடிவுசெய்யப்படும்.
30 அம்ச கோரிக்கைகள்
1) குரூப் “டி” ஊழியர்களின் ஊதிய தேக்க நிலை!
2) 01/01/2007 க்கு பின் பணிஅமர்ந்த ஊழியர்களின் ஊதிய பாரபடசம் நீக்கம்1
3) PLI போனஸ் PMS உடன் இணைக்காதே! நட்டம் என்றாலும் போனஸ் வழங்கு!
4) NEPP பதவிஊயர்வில் உள்ளப் பாதகங்களை நீக்கு!
5) LTC,மருத்துவபடி,விடுப்பை காசாக்குதல் திரும்ப வழங்கு!
6) E1 ஊதிய நிலையை உடனே வழங்கு!
7) பரிவு அடிப்படை பணி நிபந்தனைகளை நீக்கு!
8) பதவி பெயர் மாற்றம்விரைந்து செய்!
9) தற்காலிக JTO க்களை நிரந்தரபடுத்து!
10) இலாக்கா தேர்வில் SC/ST ஊழியருக்கு உள்துறைஆணைப்படிசலுகை மதிப்பெண் வழங்கு!
11) நேரிடை ஊழியர்களின் ஊதிய நிர்ணயம்30% வழங்கு!
12) JTO/JAO தேர்வுகளில் சலுகை மதிப்பெண் வழங்கி காலியான பதவிகளை நிரப்பு!
13) புதிய ஆளெடுப்பு நடத்தி ஊழியர்களை நியமிக்க வேண்டும்!
14) விடுபட்ட TSM/கேஸுவல் ஊழியர்களை நிரந்தரபடுத்து!
15) காண்டிராக்ட் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்,நல சட்டங்கள் உத்திரவாதபடுத்து!
16) நிர்வாக அதிகாரி தேர்வுக்கு ஊழியர்களை அனுமதி!
17) பயிற்சி முடித்த RM களை TM ஆக பதவிஉயர்வு வழங்கு!
18) TSM /கேஸுவல் ஊழியர்களுக்கு ஈட ஊதியம் வழங்கு!
19) SC/ST காலிடங்களை நிரப்பு!
20) Sr.TOA/TM/டிரைவர் ஊதிய நிலையை மாற்றி அமை!
21) DOT காலத்தில் பயிற்சி துவங்கிய ஊழியர்களுக்கு PO வழங்கு!
22) 01/10/2000க்குமுன் பதவிஉயர்வு பெற்று ஆண்டு உயர்வு தேதியில் ஊதிய நிர்ணயம் அனுமதி!
23) 78.2% ஊதிய நிர்ணயம் நிலுவை வழங்கு!
24) முதல் ஊதியமாற்ற ஆனாமலியை தீர்த்துவை!
25) டெலிகாம் பேக்டரி பபுனரமைப்பு செய்!
26) இலாக்கா தேர்வில் உள்ள நிபந்தனைகளை தளர்த்து!
27) அனைவர்க்கும் இலவச சிம் வழங்கு!
28) 78.2% ஊதிய நிர்ணயம் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கு!
29) அலவன்சுகளை உயர்த்து!
30) கால் செண்டர் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்காதே!
அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம்!!
No comments:
Post a Comment