Monday, 31 August 2015
Saturday, 29 August 2015
மாநில சங்க சுற்றறிக்கை
Read | Download
நமது கோரிக்கையை மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது
தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து கடந்த 25.08.2015 அன்று 7 மையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.15,000 என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் நல ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தோம். சென்னையில் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் கொடுத்திருந்த மனுவை அவர் மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்.
Sunday, 23 August 2015
செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம்
செப்டம்பர் 2
அகில இந்திய வேலை நிறுத்தம்
AITUC
CITU - INTUC
BMS - HMS - SEWA -LPF
AIUTUC -TUCC - AICCTU - UTUC
===============================
11 மத்திய சங்கங்களின்
12 அம்சக் கோரிக்கைகள்
=================================
மத்திய அரசே...
- குறைந்தபட்சக்கூலி மாதம் ரூ.15000/= வழங்கு..
- குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.3000/= வழங்கு..
- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து...
- வேலையில்லாக் கொடுமையை மட்டுப்படுத்து...
- பொதுத்துறை பங்கு விற்பனையைக் கைவிடு..
- நிரந்தரப்பணிகளில் குத்தகை ஊழியர் முறையை ரத்து செய்..
- போனஸ், பணிக்கொடை மற்றும் வைப்பு நிதி உச்சவரம்பை உயர்த்து...
- அனைத்து தொழிலாளருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்..
- நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை உறுதியாக அமுல்படுத்து... எவருக்கும் சட்ட விலக்கு அளிக்காதே..
- தொழிற்சங்கப் பதிவு உரிமைகளை நடைமுறைப்படுத்து..
- தொழிலாளர் நலச்சட்டங்களில் தொழிலாளருக்கு எதிரான மாற்றங்களைச் செய்யாதே..
- இரயில்வே... ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே..
=============================================
NFTE
BSNLEU - BTEU - FNTO
BSNLMS - SEWA BSNL -TEPU
NFTBE - BTUBSNL - SNATTA -BSNLOA
=================================
BSNL நிறுவன
11 ஊழியர் சங்கங்களின்
10 அம்சக்கோரிக்கைகள்...
=================================
மத்திய அரசே... BSNL நிர்வாகமே...
- BSNLலில் தனியார் நுழைவு மற்றும் பங்கு விற்பனையைக் கைவிடு...
- செல் கோபுரங்களைத் தனியாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடு...
- BSNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்க உரிய நிதி உதவி செய்..
- BSNL உடன் BBNL நிறுவனத்தை இணைத்திடு... MTNLநிறுவனத்தை இணைக்காதே..
- ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தாதே...
- BSNLலில் விருப்ப ஓய்வை அமுல்படுத்தாதே...
- அலைக்கற்றைக்கட்டணம் ரூ.4700/= கோடியை உடனடியாகத் திருப்பி வழங்கு..
- அனைத்து சொத்துக்களையும் BSNL பெயரில் மாற்றல் செய்..
- இலாபம் இல்லாவிடினும் குறைந்தபட்ச போனஸ் வழங்கு...
- BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்கள் வழங்கு...
மத்திய அரசிற்கு 11 மத்திய சங்கங்களும்
இணைந்து போராட்ட அறிவிப்புக் கொடுத்துள்ளன..
நமது நிறுவனத்தில் 10 சங்கங்கள் இணைந்தும்
FNTO சங்கம் 14/08/2015 அன்று தனியாகவும்
போராட்ட அறிவிப்பு செய்துள்ளன...
31.08.15 போனஸ் குறித்து கமிட்டி கூட்டம் ..
31.08.15 போனஸ் குறித்து கமிட்டி கூட்டம் ....
அருமைத் தோழர்களே நமது BSNLலில் புதிய போனஸ் உருவாக்குவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போனஸ் கமிட்டியின் கூட்டம் எதிர் வரும் 31.08.15 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.... அதன் விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)