Wednesday, 20 May 2015

Bsnleuchq news....




BSNLEU writes to the CVO, on the threatening and blackmails of shri Rohit Sabharwal, contractor, Ludhiana.<<view letter>

மாநில செயர்குழு 03-06-2015






Read | Download

மாநில செயர்குழு 03-06-2015
மாநில செயர்குழு 03-06-2015 அன்று சென்னையில் நடைபெறும். (அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது)

மே-21, தோழர்.R.உமாநாத் முதல் ஆண்டு நினைவு நாள்.



மே-21, தோழர்.R.உமாநாத் முதல் ஆண்டு நினைவு நாள்.

 தோழர்.ஆர்.உமாநாத் அவர்கள்  விட்டுச் சென்ற பனி முடிப்போம்,. தோழர்.ஆர். உமாநாத் நாமம் வாழ்க!  இந்நாளில் தோழர்.ஆர்.உமாநாத் அவர்கள் வழி நடக்க உறுதி கொள்வோம். . . .

10.06.15 பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .



10.06.15 பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .

அருமைத் தோழர்களே !  நமது BSNL கார்பரேட் அலுவலக உத்தரவின்படி ஒப்பந்த ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 10.06.15 அன்று இணைந்த  பெருந்திரள் தார்ணா BSNLEU + TNTCWU . . .மாநில சங்க சுற்றறிக்கை காண கிளிக்.

Friday, 15 May 2015

14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை.





14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை.

·         ·          ஊழியர் தரப்பு பல்வேறு பிரச்சனைகளில் நிர்வாகத்தின் தாமதத்தை NJCM செயலர் என்ற முறையில் நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யு 6 பிரச்சனைகள் மீது சுட்டிக்காட்டினார் குறிப்பாக கவுன்சில்மீட்டிங் காலதாமதமாக நடத்துவது மாநில மற்றும்மாவட்டமட்டங்களில் ஒரு தவறான் முன் உதாரணமாக ஆகிவிடும் ஆதலால் இது தவிர்க்கப்பட வேண்டும் என கூறியதுகுறிப்பாகடிராப்மேன்களுக்கு ஒரு இளநிலை பொறியாளருக்கான தேர்வு நடத்தவேண்டும் என்ற முடிவு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. JTO RR and E-1 pay scale தாமதம்இரவு இலவசமாக பேசும் வசதி ஊழியர் அனைவருக்கும் விரிவுபடுத்துதல்,அலுவலகங்களில்  கூட்டம் போட அனுமதி மறுப்பு போன்ற பிரச்சனைகளையும் நினைவுபடுத்தினர்.பிறகு மற்ற பிரச்சனைகள்விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
·          22.07.1997 and 08.09.2000, இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற தேர்வுகளில் இடஒதுக்கீடு அமுலபடுத்தப்படவேண்டும்:
          இது பற்றி DoP&T –க்கு குறிப்பு அனுப்பபட்டுள்ளதுஅதுவந்த பிறகேமுடிவு எடுக்கமுடியும். 
·          பென்ஷன் 60 சதவீதம் நாம் தருவது நிறுத்தப்பட வேண்டும்:
        இதுபற்றி  DoT.-க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதுஅதுவரும்வரை காத்திருக்கவேண்டும். 
·          BSNL MRS  மறுபரிசலனை செய்யப்படவேண்டும்:
         இதுகுறித்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். 
·          30-9-2000 முன்னாள் TSM ஆக இருந்தவர்கள் நேரடியாக டெலிகாம் மெகானிக்களாக நியமிக்கப்பட வேண்டும்:             இதுகுறித்தவிபரங்களை மாநில நிர்வாகத்திடம் பெற்று DOT –க்கு அளித்து அதன்  பிறகு ஒப்புதல் பெற்ற பிறகு அமுல்படுத்தப்படும். 
·          ஒர்க்ஸ் கமிட்டி மீட்டிங் மாநில மற்றும் அகில இந்திய மட்டத்தில் நடத்தப்பட வேண்டும்மாவட்ட அளவில் சரியாகநடத்தப்படவில்லை:
         இதுகுறித்து ஆலோசித்து முடிந்தால் மாநில அளவில் நடத்த முயற்சி செய்யப்படும். 
·          NEPP  பிரச்சனையில் உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்படவேண்டும்:
      இதுவரை மொத்தமாக 16000 பேர் பாதிக்கபட்டுள்ளனர்அதுவும்  குறிப்பாகs 8501 ஊழியர்கள்  NE-3 pay scale-ல் பதவிஉயர்வுஇல்லாமல்  பாதிக்கப்பட்டுள்ளனர்.:
இது குறித்து ஒரு சரியான முடிவு எடுக்கப்பட்டு கூடியவிரைவில்  பிரச்சனை தீர்க்கப்படும் 
·          பெண்களூக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் தொந்திரவு குறித்து விசாரிக்க ஏற்படுத்த்ப்பட்ட கமிட்டியில் சங்கத்தின் சார்பாகஒரு பெண் ஊழியர் நியமிக்கப்பட வேண்டும்:
        இது குறித்து அரசு வழிகாட்டுதல்படியே கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 
·          MTNL பகுதியில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் ரூ.200/- சிம் தரப்படவேண்டும்மற்ற கம்பெனி நம்பர்களுக்கும் பேச இந்தசிம்மில் அனைவருக்கும் வசதி தரப்பட வேண்டும்:
       இது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும். 
·          அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளுக்கு மெயின் தீவிலிருந்து கடலுக்கடியில் கேபிள் அமைக்க உத்தரவு இடவேண்டும்.
       இது மத்திய அரசின் முடிவு ஆகும்சேட்டிலைட் மூலமாக அந்தமான் பகுதிகளுக்கு பிராட்பேண்டி வசதிவிரிவுசெய்யப்படும். 
·          அந்தமான் பகுதியில் மூன்றாம் (TTA and Sr.ToA) பிரிவு ஊழியர்கள் பணிசெய்ய ஆள் எடுக்கப்படவேண்டும்அங்கு பற்றாகுறைஅதிகமாக உள்ளது.
         நேரடி நியமனமாக TTA –க்கள் நியமிக்கபட உள்ளனர்.
·          வீட்டு வாடகைப்படி நகரத்திலிருக்கு எட்டு கிலோமீட்டரில் இருப்பவருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்:
          இதுமத்திய அரசின் முடிவுநாம் எதுவும் செய்ய இயலாது. 
·          தொழிலாளர் குடியிருப்பில் உள்ள காலி குடியிருப்பை கணவனை இழந்த தொழிலாளியின் மனைவிற்கு தரப்படவேண்டும்:
        இதற்கு ஒப்புகொள்கிறோம்விரைவில் உத்தரவு அனுப்பப்படும். 
·          நக்ஸல் பகுதிகளில் வேலைபார்க்கும் ஊழியருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்:
          இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும்

Thursday, 14 May 2015

BSNL நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்.





BSNL நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்...

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNLநிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 மேலாண்மை பயிற்சிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Sanchar Nigam Ltd (BSNL)
காலியிடங்கள்: 400
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
வெளிப்பிரிவு:
1. Telecom Operations - 150
2. Telecom Finance - 50
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
உள் பிரிவு:
3. Telecom Operations - 150
4. Telecom Finance - 50
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்:
ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் தொலைத்தொடர்புஎலக்ட்ரானிக்ஸ்,கணினியில்ஐடிஎலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி. அல்லதுபி.டெக் முடித்திருக்க வேண்டும்.
நிதியியல் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஐசிடபுள்ஏசிஎஸ் போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்கவேண்டும்.
சம்பளம்மாதம் ரூ.24,900 - 50,500
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.750.
விண்ணப்பிக்கும் முறைwww.externalexam.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி14.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.in/opencms/ export/sites/default/ BSNL/ about _us/ hrd/ pdf/ MTExternal.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.