Monday, 3 March 2014

சென்னை சொசைட்டி -RGB தேர்தல் நமது கூட்டணி வேட்பாளர்க



அன்பார்ந்த தோழர்களே !
  மார்ச் மாதம் நடைபெறவுள்ள சென்னை சொசைட்டி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்திற்கான 5 RGB இடங்களுக்கு  BSNLEU, & SEWA BSNL ஆகிய சங்கங்கள் இணைந்து போட்டியிட உள்ளன. வேட்பாளர்கள் விபரம் 

வரிசை எண்      வேட்பாளர் பெயர்  

                   1     ANDAPERUMAL  V 199500218

          5     PERUMAL  R I 199200771


            6      RAJAGOPAL  P 199300466

            8      SELVARAJ  P 198400403

            11     SOOSAI MARIA ANTONY   N 199300479
       

நபர் SURETY இல்லாமல் கடன் பெற்றிடவும், ஊழலற்ற நிர்வாகத்தை நடத்திடவும் நமது வேட்பாளர்களை ஆதரித்து மேற்கண்ட வரிசை எண்களில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.




பரிவு அடிப்படையிலான பணி நியமன சம்பந்தமாக......



Thursday, 27 February 2014

ஆர்ப்பாட்டம்



            புவனேஷ்வரில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மத்தியசெயற்குழுவின் முடிவின் படியும் , நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் அறைகூவலின்படியும்   கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

*விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
*அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
*சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
*சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 

*EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.

*வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
*பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
*பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.




       இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ தலைமையில் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முருகன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் .மாவட்ட செயலர் தோழர்C.சுவாமிகுருநாதன் மற்றும் மாநில அமைப்பு செயலர்  தோழர் D.கோபாலன் அவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்  .தோழர் P.இராஜகோபால் நன்றி கூறினார்.