Wednesday, 8 January 2014

மத்திய சங்க செய்திகள்




  மத்திய சங்க செய்திகள் << click >>

தோழர் P.அபிமன்யு இலாகா பணிஓய்வு பாராட்டுவிழா


தோழர் P.அபிமன்யு இலாகா பணிஓய்வு பாராட்டுவிழா



தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்

 உழைப்பை உன்மையாக உழைக்கும் தோழர் ப.அபிமன்யு அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பி.எஸ்.என்.எல் கருத்தரங்கம்


07-01-2014 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் பொதுச் செயலர் பாசமிகு அன்புதோழர் ,ப.அபிமன்யு அவர்களின் பணி நிறைவுப் பாராட்டு விழாவும் மிக சிறப்பாக நடைப் பெற்றது நமது திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து சுமார்15  தோழர்களும் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட  அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி
 BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்தரங்கத்தின் பேசிய திரு.A.N.ராய் இயக்குனர்(மனிதவளம்)

கருத்தரங்கத்தின் உருக்கமாக பேசிய BSNLEU அகில இந்திய பொதுச் செயலாளர் ப.அபி அவர்கள்
 
கருத்தரங்கத்தின் உள்ளே அமர்ந்திருந்த தோழர்கள்

  நடைபெற்ற கருத்தரங்கத்தில் நமது பி. எஸ். என். எல்  நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் திரு A N .ராய் , இயக்குனர் (மனித வளம் ), திரு அஸ்ரப்கான், தலைமை பொது மேலாளர் , தமிழகம் , பாலசுப்ரமணியம் , பொது மேலாளர் ,சென்னை வட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர் திரு A .N . ராய், இயக்குனர்( மனிதவள மேம்பாடு), அவர்கள் பேசிய போது பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வாடிக்கையாளர் அனைவர்க்கும் திருப்தியான சேவை செய்ய வேண்டியதின் அவசியத்தையும் நிறுவனத்தை மீட்டு எடுக்க வேலையின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் கூறினார் .

 நமது பொது செயலர் பேசும் போது வேலை கலாச்சாரம் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியத்தை பல்வேறு உதாரணங்களுடன் சுட்டி காட்டினார் .பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் நமது பொது செயலரின் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற தொழிற் சங்க பணிகள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் V .A .N .நம்பூதிரி ,CITU அகில இந்திய தலைவர் A .K .பத்மநாபன் , தமிழ் மாநில  செயலர் செல்லப்பா ,சென்னை தொலைபேசி மாநில செயலர் கோவிந்தராஜன் ,P .சம்பத் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தோழர் M .முருகையா , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில தலைவர்   SNEA கோபிநாதன் , வள்ளிநாயகம் (FNTO ),சேவா BSNL ரவீந்திரன் NFTE சங்க R .கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் நினைவு கூர்ந்தனர் .நமது பொது செயலர் தோழர் ப.அபி அவர்கள்  பயணித்த தடங்களில் நாம் அனைவரும் எலுச்சியுடன் பயணம் செய்வதே நாம் தோழர்அவர்களுக்கு  அளிக்கும் வாழ்த்து செய்தியாகும்  .

வாழ்த்துகளுடன்.....
திருநெல்வேலி BSNLEU மாவட்டசங்கம்











Saturday, 4 January 2014

07.01.2014 சென்னையை நோக்கி. . .


07.01.2014 சென்னையை நோக்கி. . .

அருமைத் தோழர்களே! எதிர்வரும் 07.01.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளநமது BSNL நிறுவனத்தின்  சேவை கருத்தரங்கத்திற்க்கும் ,அதற்க்கு அடுத்தற்ப்போலநடைபெற விருக்கும் நமது பொதுச்செயலரின் பணி நிறைவு நிகழ்ச்சிக்கும் நமது படைசென்னையை நோக்கி. . . திரளட்டும்.இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விடுப்பு (SPECIAL CASUVAL LEAVE) உண்டு என்பதால் அதை நமது தோழர்கள் பயன்படுத்தவும்.
 


என்றும் தோழமையுடன் -----C.சுவாமிகுருநாதன்....திருநெல்வேலி.
                                                                                                        மாவட்டசெயலர் 

Friday, 3 January 2014

மத்திய சங்க செய்திகள்




மத்திய சங்க செய்திகள்

        டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமது பொது செயலர் இன்று பேசிய போது  18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகத்துடன்  உடன்பாடு ஏற்பட்ட பிரச்சனைகளில்  தீர்வில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .
  01-01-2007 க்கு பிறகு பணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதை கடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இது விசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் படிக்க :Click Here
   மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்பட்ட  Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது .
              TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார்.அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .

20ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்


20ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்





20ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் படிக்க:-Click Here

Wednesday, 1 January 2014

Cash payment through salary in lieu of soap, towel,tumbler, pen, diary



01.01.2014: Cash payment through salary in lieu of soap, towel,tumbler, pen, diary & water bottle for the year 2ol4 to group-C and group-D staff << click >>  

IDA increase is 5% from 01-01-2014.




IDA increase is 5% from 01-01-2014.
It is learnt that the IDA increase, that has become due w.e.f. 01.01.2014 is 5%. With this IDA increase, the total IDA that has become payable from 01.01.2014 will be 90.5% (85.5% + 5 %).