Monday, 9 September 2013

19 மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு



19 மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

ஆண்டுதோறும் மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப் புக்கள் குறித்த விவரங்களை பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 2012-13ம் நிதி ஆண்டுக்கான சொத்துக் கணக்கை மொத்தம் உள்ள 76 மத்திய அமைச்சர்களில் இதுவரை 19 அமைச்சர்கள் மட்டுமே தாக்கல் செய்துள் ளனர். மீதமுள்ள 56 மத்திய அமைச்சர்கள் நடப்பு ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வில்லை.
அதேசமயம் பிரத மர் மன்மோகன்சிங்கும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் விபரம் பின் வரு மாறு,மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவி நளினி சிதம்பரத் தின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ. 19.48 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்துள்ளது. இவரது மனைவி பிரதீபா வின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெட்ரோலியஅமைச்சர் வீரப்ப மொய்லி மனைவி யின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள் ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. ராணுவ அமைச்சர்ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்துள்ளது.
கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோ டியில் இருந்து ரூ.4.78 கோ டியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவியின் சொ த்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்துள் ளது. உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்துள் ளது. இவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்துள்ளது.


Sunday, 8 September 2013

செப்டம்பர் 27-ல் ஒருநாள் வேலைநிறுத்தம் வெற்றி பெறச்செய்வோம்




       Our demands  are  genuine. 

            Our struggle   is justified. 


Our victory is sure.

              BSNLEU TVL

செப்டம்பர் 27-ல் ஒருநாள் வேலைநிறுத்தம் வெற்றி பெறச்செய்வோம்


செப்டம்பர் 27 வேலை நிறுத்தத்திற்கான சுவரொட்


செப்டம்பர் 27 வேலை நிறுத்தத்திற்கான சுவரொட்டி- அறிவிப்பு பலகைக்காக
Read | Download

Poster for the One Day Strike on 27.09.2013.




]Poster for the One Day Strike on 27.09.2013. <<View poster>>

Thursday, 5 September 2013

விலை உயர்ந்தாலும் கவலை இல்லை :




விலை உயர்ந்தாலும் கவலை இல்லை :
 பெரும் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதே முதல் வேலை
           ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் ரகுராம் ராஜன் அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட் கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் என்ற அபாயம் ஏற்பட்டாலும், வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு பெருமுதலாளிகள் முத லாளிகளது முதலீடுகளுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகை யில் பார்த்துக் கொள்வோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றுள்ள ரகுராம் ராஜன் கூறினார்.
லாபம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று அதி காரப்பூர்வமாக உத்தரவாதம் கிடைத்தநிலையில், இந்தியா வில் முதலீடுகள் செய்யத்திட்ட மிட்டுள்ள வெளிநாட்டு மற் றும் உள்நாட்டு முதலாளிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள் ளனர். இந்த மகிழ்ச்சியின் விளைவாக, ரூபாய் மதிப்பு சில புள்ளிகள் உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி மேலும் மேலும் தீவிரமடைந்தாலும், இந்தியா வில் மன்மோகன் அரசு ஏற் கனவே பின்பற்றி வரும் நாசக ரப் பொருளாதார தாராளமயக் கொள்கைகளால் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ள போதிலும், அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமலாக்கு வது என காங்கிரஸ் கூட்டணி அரசு காரியங்களை ஆற்றி வரு கிறது.
அதன் ஒரு பகுதியாகவே ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை யில் வைத்து சூறையாடுவதற்கு அனுமதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது உள்பட பல நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தங்களது திட்டங்களையெல் லாம் மறுப்பேதும் கூறாமல் அமல்படுத்துகிற விதத்தில் தங்களுக்கு நம்பகமான நப ரான ரகுராம் ராஜனை மத்திய அரசு நியமித்தது. பன்னாட்டு நிதி நிறுவனத் தால் பயிற்றுவிக்கப்பட்ட ரகு ராம் ராஜன், புதனன்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்றார்.
பேட்டிபதவியேற்றவுடன் ரகு ராம் ராஜன் கூறியதாவது-பணவீக்கத்தை கட்டுப் படுத்துவது முக்கியம் தான். அதற்காக நாட்டின் வளர்ச் சியையே அது முடக்கிவிடக் கூடாது. இதனால் இதில் மாறு பட்ட அணுகுமுறை தேவை. என்னைப் பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி, பணவீக் கத்தை கட்டுக்குள் வைப்பது, ரூபாய் மதிப்பை உயர்த்துதல் ஆகியவையே உடனடியான பணிகள். இதற்காக நான் எடுக்கும் சில நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்காலம். நமது உடனடித் தேவை அதிகமான வெளிநாட்டு முத லீடுகள். முதலீட்டாளர்கள் விரும்பும் வகையில் நடவடிக் கைகள் எடுக்கப்படும். பணவீக் கம் ஏற்பட்டாலும் முதலீட் டுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப் படும். வங்கிகள் வெளிநாடு களில் இருந்து நிதி ஆதாரத் தைத் திரட்டுவதில் உள்ள தடைகள் நீக்கப்படும்.
சந்தை யில் பணப் புழக்கத்தை அதி கரிக்கும் வகையில் வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிக்கான வட்டி குறைக்கப் படும். புதிய வங்கிகளுக்கு லை சென்ஸ் வழங்கும் நடைமுறை கள் எளிதாக்கப்படும். கிராமப் பகுதிகளிலும் அதிக வங்கிக் கிளைகள் தொடங்க இது வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கவும், வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் உள்ள கட்டுப்பாடு கள் தளர்த்தப்படும். வங்கி களின் வராக் கடன்களை வசூ லிக்க நடவடிக்கை எடுக்க புதிய குழு அமைத்து அவர் களது பரிந்துரைகள் அமலாக்கப் படும். வெளிநாட்டு இந்தியர் களின் முதலீடுகளை இந்தியா வுக்குக் கொண்டு வர நடவடிக் கைகள் எடுக்கப்படும். அவர் களது முதலீடுகளுக்கு உரிய பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் அமலாக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் எல் லாமே மிக விரைவிலேயே அம லுக்கு வரும். அடுத்தடுத்த வாரங்களில் எல்லாமே நடந் தாக வேண்டும். மேலும் டால ரை மட்டுமே சார்ந்து இருக் காமல் ரூபாயை
 அடிப்படை யாக வைத்து சர்வதேச வர்த் தகத்தை கையாளவும் சில நட வடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.ராஜனின் இந்தப் பேச்சு, உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் முதலாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளில் உற்சாகம்பரவி சென்செக்ஸ் 550 புள்ளிகள் அளவுக்குப் பரவியது. ரூபா யின் மதிப்பும் சற்று உயர்ந்து 65.54 என்ற நிலையை அடைந்தது


Wednesday, 4 September 2013

Our demands are genuine. Our struggle is justified. Our victory is sure.





       Our demands  are  genuine. 

            Our struggle   is justified. 


Our victory is sure.

              BSNLEU TVL

ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் (06-09-2013 )




06/09/2013. அன்று ஒப்பந்த ஊழியர்களின் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 



பெரும்பாலான மாநிலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு,குறைந்தபட்ச ஊதியம் கார்ப்பரேட் அலுவலகஉத்தரவுப்படி வழங்கப்படுவது இல்லை மேலும் அவர்களது ஊதியங்கள்,பணியாளர் வருங்கால வைப்புநிதி & ஈஎஸ்ஐ பங்களிப்புகளின் ஒரு கணிசமான பகுதி ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நேர்மையற்றஅதிகாரிகள்  மூலம் சூறையாடப்படுகின்றன. . தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள், பணியாளர் வருங்காலவைப்பு நிதி & ஈஎஸ்ஐ சலுகைகள் கோரி, போராட்டத்தில் செல்லும் போது, அவர்கள் இரக்கமற்று வேலைநீக்கம் செய்யபடுவது பல மாநிலங்களில் நடக்கிறது. கார்ப்பரேட் அலுவலகத்தின் கவனத்திற்கு இதைகொண்டு சென்ற BSNLEU எடுத்த அனைத்து முயற்சிகளும், செவிடன் காதில் ஊதிய சங்காய் உள்ளதால் , 26.08.2013 அன்று நடைபெற்ற BSNLEU, மத்திய செயலக கூட்டம் பல்வேறு மாநிலங்களில் வேலை நீக்கம்செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும் எடுக்க கோரி, 06.09.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடிவு செய்துள்ளது , BSNLEU மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் குறைந்தபட்ச ஊதிய மீது கார்ப்பரேட்அலுவலகம் உத்தரவுகளை செயல்படுத்த வேலை நீக்கம் செய்யபட்ட தொழிலாளர்களை மீண்டும்எடுக்க   சக்தி மிகுந்த ஆர்ப்பாட்டம் 06-09-2013 அன்று  நடத்த வேண்டும்.