Monday, 5 August 2013

டெல்லி கருத்தரங்கின் பிரகடனம்



டெல்லி கருத்தரங்கின் பிரகடனம்- DECLARATION OF DELHI CONVENTION
Read | Download

காத்திடுவோம் BSNLஐ- டெல்லி கருத்தரங்கம் அறைகூவல்-

காத்திடுவோம் BSNLஐ- டெல்லி கருத்தரங்கம் அறைகூவல்- சுற்றறிக்கை எண்:75 SAVE BSNL-DELHI CONVENTION
Read | Download

சிறப்பு மாநாடு

பிஎஸ்என்எல்-க்கு புத்துயிர் அளிக்க ஊழியர் சிறப்பு மாநாடு

‘‘பிஎஸ்என்எல்-க்குப் புத்துயிர் அளித்திட’’ பிஎஸ் என்எல் ஊழியர்களின் சிறப்பு மாநாடு புதுதில்லியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வந்து பங்கேற்றனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கியுள்ள பிஎஸ்என்எல் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சிறப்பு மாநாட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் சி.சிங் தலைமை வகித்தார்.கூட்டமைப்பின் கன்வீனர் விஏஎன் நம்பூதிரி சிறப்பு மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பேசினார்.

                பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்தவிதத்தில் புத்துயிர் அளித்திடலாம் என்ப தையும் அதன்மூலம் நுகர்வோருக்கு சிறந்த முறையில் சேவை செய்திடலாம் என் பதையும் விளக்கினார். சிறப்பு மாநாட்டை வாழ்த்தி குருதாஸ் தாஸ் குப்தா, எம்.பி,(பொதுச் செய லாளர், ஏஐடியுசி), ஸ்வ தேஷ் தேவ்ராய், (செயலா ளர், சிஐடியு), பி.என்.ராய், (பொதுச் செயலாளர்),பிஎம்எஸ், டாக்டர் உதித் ராஜ், (தலைவர், அகில இந்திய தலித்/பழங்குடியினர் ஊழியர்கள் மகாசம்மேளனம்) மற்றும் இதர சங்கங்களின் தலைவர்கள் உரை யாற்றினர்.கன்வீனர் முன்மொழிந்த பிரகடனத்தின்மீது பிரதிநிதிகளின் விவாதங்களுக்குப் பின், பிரகடனம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட் டது. பிரகடனத்தில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறை வேற்ற வேண்டும் என்றும், நிறுவனத்தைத் திறனுடன் நடத்திட திறமையான நிர்வாகம் தேவை என்றும் கோரப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு மாநாடுகளை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் அளவிலும் நடத்தி, கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரி வான அளவில் பிரச்சாரம் செய்திடவும் இச்சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டது. நன்றி :-தீக்கதிர்) புகைப்பட தொகுப்பு பார்க்க:-CLICK HERE 

Friday, 2 August 2013

கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்



கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்

மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ரூ.1.76 லட்சம் கோடி சூறையாடப் பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு, உச்சநீதிமன்றம் பல சந்தர்பங்களில் கண்டித்தும் கூட, எந்த அசைவுமின்றி ஆமை வேகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. இது வழக்கின் மீதான நம்பகத்தன்மையையே கேள் விக்குறியாக்கியிருக்கிறது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத் தில் மத்திய அரசுக்கும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் அரசியல் தரகராக செயல்பட்டு வந்த நீராராடியாவின் உரையாடல்கள் பதிவு செய்யப் பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் இதுநாள் வரை வருமான வரித்துறை யும், மத்திய குற்றப்புலனாய்வுக் கழகமும் (சிபிஐ) அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நீராராடியா உரையாடல் தொடர்பான ஆவணங் களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உடனடியாக, விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் குட்டுவைத்துள்ளது. அதே போல் 2004ம் ஆண்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவனத்தின் பங்கு களை தனக்கு வேண்டிய மலேசியாவின் மேக் சிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்க செய்தார்.
அதன் பிரதிபலனாக, மேக்சிஸ் நிறு வனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்ற நிறுவனம், தயாநிதிமாறன் குடும்பத்திற்கு சொந்தமான சன்குழுமத்தின் டிடிஎச் மற்றும் எப்எம் தொழிலில் ரூ.600 கோடி முதலீடு செய்தது என ஏர்செல்லின் முதன்மை உரிமையாளர் சிவசங் கரமேனன் குற்றம் சாட்டியிருந்தார். அலைக் கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் இடம் பெற்றுள்ள பல்வேறு தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்று.
இந்த விவகாரம் குறித்து ஏன் இன்னும் வழக் குப் பதிவு செய்யவில்லை? என உச்சநீதிமன்றம் சிபிஐயைக் குட்டியது. அதன் பின்னர் பெயரள விற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலை யில் இதுவரை இறுதியான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் தலை யிட்டு இரண்டு மாதங்களுக்குள் விசாரணை யை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை யை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் மத்திய அரசு தற்போதுதான் நூறு சதவீத நேரடி அந்நிய முத லீட்டை அனுமதித்திருக்கிறது. அதற்கு முன்பு 74 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டி ருந்தது.
ஆனால் மேக்சிஸ் நிறுவனத்திற்காக 2006ம் ஆண்டே இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை மீறி 99.30 சதவீதம் வரை முத லீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியிருக் கிறது. உலகமயம் உள்ளூர் மயமாகி, ஊழல்மயமாக பரிணாம வளர்ச்சியடைந்ததன் பிரதிபலனாக அரசு நிர்வாகமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து கூட்டுக்கொள்ளையில் கொடிநாட்டி வருகின்றன. 2ஜி ஊழல் வழக்கு முழுவதும் நவீன தாராளமயத்தின் வலைப்பின்னல் சேர்ந்தே வருகிறது. அதனால்தான் இன்று உச்சநீதிமன் றம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண் டிய நிலை உள்ளது. நவீன தாராளமயம் எந்த நேரத்திலும் இந்தியாவின் இறையாண்மையை யும் காவு வாங்கும் என்பதையே இந்த வழக்கின் போக்கு உணர்த்துகிறது.