Showing posts with label BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை. Show all posts
Showing posts with label BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை. Show all posts

Friday, 26 June 2015

BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை

 BSNLEU மாநிலசங்கம் சுற்றறிக்கை



ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.