Showing posts with label 15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .. Show all posts
Showing posts with label 15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .. Show all posts

Monday, 16 December 2013

15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .


15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .

அருமைத் தோழர்களே! 
மேடையில் தலைமைக்குழு தோழர்கள் 

தோழியர்.இந்திரா உரை நிகழ்த்தும் போது 

சிறப்பு அழைப்பாளர் தோழியர்.M.கிரிஜா உரை நிகழ்த்தும் போது 

நமது BSNLEU மாநில செயலர் தோழர்.S.செல்லப்பா உரை நிகழ்த்தும் போது 

பயிலரங்கத்தில் கலந்து கொண்ட பெண்களின் ஒரு பகுதி 
 நமது தமிழ் மாநில சங்க முடிவின்படி 15.12.2013 ஒருநாள் தமிழகம் தழுவிய  மகளீர் பயிலரங்கத்தை கோவையில் நமது BSNLEU மாவட்ட சங்கம் மிக சிறப்பாக நடத்தியது. காலையில் நடைபெற்ற முதல் அமர்விற்கு நமது BSNLEU சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தோழியர்.T. பிரேமா தலைமை தாங்கினார்.கோவை தோழியர்.பங்கச வள்ளி, வந்திருந்த தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.BSNLWWCCகன்வீனர்,தோழியர்.V.P.இந்திரா நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளர் தோழியர்.M.கிரிஜா -AIIEA,"சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள்"என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
பின்பு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நடைபெற்ற 2 வது அமர்விற்கு  தோழியர்.R.ராஜலெட்சுமி தலைமை தங்கினார்,நமது BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா "பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள் "என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
தமிழகம் முழுவதுக்குமான பெண்கள் பயிலரங்கத்தில் 60 பெண்களும்,25 ஆண்களும் பங்கெடுத்தனர்.நமது மாவட்டத்திற்கு மாநில சங்க ஒதுக்கீட்டின் அடிப்படையில். கோவை பெண்கள் பயிலரங்கத்திற்கு நமது நெல்லை  மாவட்டத் திலிருந்து,தோழியர்கள் சித்தாலஷ்மி. தங்கம் ஆகியோர் கலந்து கோண்டனர்   ,கோவை BSNLEU  மாவட்ட சங்கத்திற்கு,திருநெல்வேலி  BSNLEU மாவட்ட  சங்கத்தின் மணமார்ந்த  பாராட்டுக்கள்.