Showing posts with label வார்த்தை தவறி விட்டாய். Show all posts
Showing posts with label வார்த்தை தவறி விட்டாய். Show all posts

Tuesday, 29 October 2013

வார்த்தை தவறி விட்டாய்







என்னங்க அண்ணாச்சி 
சொன்னது என்னாச்சி 
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு 
வார்த்தை தவறி விட்டாய் தோழா 
நெஞ்சு கொதிக்கிதப்பா !
பண்டிகை என்றாலும் சரிபார்ப்பு தேர்தல் என்றாலும்
 முதலில் ஞாபகம் வருவது "போனஸ்"
நமது சங்கத்தை" நையாண்டி " செய்வதற்கு அதிகம்
பயன்படுத்திய வார்த்தை "போனஸ் "
அடைந்தால் " மகாதேவி "
இல்லையேல் "மரணதேவி "
என்ற  பாணியில் நங்கள் வந்தால் "போனஸ்"
இல்லை என்றால் "நாசம்  "
என்றவர்களுக்கு வீசுவதற்கு "அங்கீகார வாளை " கொடுத்துவிட்டோம் .
நாங்கள் வந்தால் "  பாலைகள்  சோலைகளாகும் "
"வறட்சி நீங்கி வளம் பெருகும் "
முதல் தேதியில் "முத்தாக GPF பணம் உன் கையில் 
பாழாப்போன பாவிகள் "விட்டுகொடுத்த   போனஸ் "  வரும் 
தீப திருநாளில் உன் திருகரங்களில் தவழும் .
அலவன்சுகளை அள்ளித்தர  அஞ்சாமல் அலுக்காமல் போராடி 
"கோணிப்பை "நிரம்பும்வரை விட மாட்டேன் .
"அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா " போல் 
அன்று 5 பைசா வடை 
10 பைசா டீ 
விண்  வெளியில் LTC (அதாங்க விமானத்தில் )
கனவானது போல் இன்று போனசையும் அவ் வரிசையில் சேர்த்து விடாதே 
என் தோழா !
தேர்தலுக்காக நீங்கள் வீசிய "போனஸ் " "பூ மராங்  ஆயுதம் " இன்று உங்களை தாக்க வருகிறது 
காலம் நெருங்கி விட்டது 
களம் உங்கள் முன்னே !
எதார்த்தம் புரிகிறது !
தடுமாற்றம் வருகிறது !
நோ ! நோ !
தயக்கத்தை தூக்கி எறி !
1 நாள் வேலை நிறுத்தம் என்ற வாளை தனியாக சுழற்று !
தெரியும் சேதி ! யார் உங்கள் பக்கம் என்று !
உங்கள் வாள் "புதிய வார்ப்புக்கலா "
துரு பிடித்து இத்து போன வாளா  என்று !
எதுவும் கிடைத்தால் "நான் தான் என்று மார் தட்டுவது "
கிடைக்காவிட்டால் " ஒற்றுமை இல்லை என்று பீலா விடுவது "


      கருத்து :- புறம் சொல்வது எளிது  
                 BY          

bsnleuvr