Showing posts with label வருமான வரி திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு. Show all posts
Showing posts with label வருமான வரி திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு. Show all posts

Thursday, 30 April 2020

வருமான வரி திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு





BSNL ஊழியர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, வருமான வரி 

திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க கடைசி தேதி நீட்டிப்பு


வருமான வரி திட்டத்தில் சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, வருமான வரித்திட்டத்தில் ஊழியர்கள் புதிய திட்டத்திலோ அல்லது பழைய திட்டத்திலோ வருமான வரி தாக்கல் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. எந்த திட்டத்தில் தொடர்கிறார்கள் என ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்க 28.04.2020 தான் கடைசி தேதி என கார்ப்பரேட் அலுவலகம் 20.04.2020 அன்று கடிதம் வெளியிட்டிருந்தது. நேரப்பற்றாக்குறையையும், கொரோனாவினால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையும் சுட்டிக்காட்டி, இதற்கான கடைசி தேதியை, குறைந்த பட்சம் ஒரு மாத காலமாவது நீட்டித்து அறிவிக்க வேண்டும் என BSNLஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள Sr.GM(Taxational) அவர்களுக்கு கடிதம் எழுதியது.

இதனை ஏற்றுக் கொண்ட கார்ப்பரேட் அலுவலகம், அந்த தேதியினை 3105.2020 வரை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளது.