Showing posts with label மே 5 - மார்க்ஸ் பிறந்த தினம். Show all posts
Showing posts with label மே 5 - மார்க்ஸ் பிறந்த தினம். Show all posts

Monday, 5 May 2014

மே 5 - மார்க்ஸ் பிறந்த தினம்



மே 5 - மார்க்ஸ் பிறந்த தினம்

மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த
கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று.
உலகின் தலைசிறந்த காதல்நட்புசித்தாந்தம் எல்லாம்
ஒரே ஒரு மனிதன் வசம் என்றால்
மார்க்ஸுக்கு தான் அப்பெருமை.
போராட்டம்வறுமைவலிகள்பசி
இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும்
நிறைந்திருந்த பொழுது
எளியவர்களும்பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என
ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.
அவரின் எழுத்துக்கள்,
பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின.
எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார்.
எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய
ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துக்களின் மூலம் உத்வேகப்படுத்தினார்