Showing posts with label புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம். Show all posts
Showing posts with label புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம். Show all posts

Thursday, 21 January 2016

புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்







புன்னகையுடன் கூடிய சேவைக்கான கருத்தரங்கம்

தமிழ்நாடு FORUM சார்பாக புன்னகையுடன் சேவை திட்டத்தை திறம்பட செயல்படுத்த, 19/01/2016 அன்று புதுவையில் ஒரு எழுச்சியூட்டும் கருத்தரங்கம் நடைபெற்றது . தோழர் பட்டாபிராமன் ,மாநில செயலர் NFTE அவர்கள் கருத்தரங்கத்தை தலைமை தாங்கி நடத்தினார் . நமது மாநில தலைவரும் FORUM ஒருங்கிணைப்பாளருமான தோழர் S .செல்லப்பா அவர்கள் கருத்தரங்கம் நடத்துவதற்கான நோக்கம் பற்றி சுருக்கமாக விளக்கினார். தோழர் P அபிமன்யு ,பொது செயலர், BSNLEU ,தோழர் சந்தேஸ்வர் சிங், பொது செயலர் , NFTE, திரு .செபஸ்டியன் , பொது செயலர் SNEA, தோழர் வேணுகோபால் , AIBSNLEA மற்றும் அனைத்து சங்க மாநில செயலாளர்கள் உரையாற்றினார். நிர்வாக தரப்பில் தலைமைப் பொது மேலாளர் உயர்திரு பூங்குழலி , திரு . ரவி, PGM (F) ,திரு . சந்தோசம் ,GM (NWP-CM), திரு P.V கருணாநிதி , GM மற்றும் Ms.லீலா சங்கரி , GM , பாண்டிச்சேரி ஆகியோர் உரையாற்றினார். 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தமிழ் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். தலைவர்களின் உரைகள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை ஈர்த்தது