Showing posts with label பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா. Show all posts
Showing posts with label பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா. Show all posts

Thursday, 25 September 2014

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா



பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா

திருநெல்வேலி, செப் .24-ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றுவலியுறுத்தி திருநெல்வேலியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் சார்பில் கூட்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் சி. சுவாமிகுருநாதன், ஆர். கணபதிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநில அமைப்புச் செயலாளர்கள் டி.கோபாலன், பி. சண்முகம், மாவட்டச் செயலாளர்கள் என். சூசைமரிய அந்தோணி, கணேசன் ஆகியோர் பேசினர். தர்ணாவில் 250-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான தடைகளை நீக்க வேண்டும்.பண்டிகைக் கால போனஸ் வழங்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வுக்கால பலன்களை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.