Showing posts with label பி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர். Show all posts
Showing posts with label பி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர். Show all posts

Wednesday, 22 January 2014

பி எஸ் என் எல் காசுவல் . காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு





         புவனேஷ்வரில்   பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர்  சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம்18-01-2014மற்றும்19-01-2014 தேதிகளில்  நடைபெற்றது .
அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது.

·                     26-02-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் 
·                     26-03-2014 அன்று தர்ணா போராட்டம் 
·                     23-04-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
·                     CMD அலுவலகம் நோக்கி பேரணி (தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
·                     ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

கோரிக்கைகள் :-
1.           விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
2.           அரசாங்கத்தின்  உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
3.           சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி  ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
4.           பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
5.           சமவேலைக்கு சமஊதியத்தை  ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 
6.           EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
7.           வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும்  வழங்கிட வேண்டும்.
8.           பழி   வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
9.           பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்  சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.