Showing posts with label துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.. Show all posts
Showing posts with label துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.. Show all posts

Friday, 4 December 2015

துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.







சென்னை மற்றும் கடலூர் மக்களின் துயர் துடைக்க கரம் கோர்ப்போம்.

            கடந்த பத்துக்கும் மேற்பட்ட தினங்களாக கனமழை பொழிந்து (நூறு ஆண்டுகளில் காணாத பெருமழை) சென்னை, காஞ்சி, கடலூர் பாண்டி என வட தமிழகத்தையே பெருவெள்ளம் மற்றும் மழையினால் புரட்டி போட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து வழித்தடங்களும் (தரைவழி, வான்வழி, இரயில் போக்குவரத்து) பாதிக்கப்பட்டன. சிறிய குடியிருப்பு முதல் மாடி வீடுகளில் வாழ்ந்தவர்களும் இன்று குடிநீர், பால், காய்கறி, உணவு மற்றும் உடைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை கழிக்கவே பெரும் சிரமத்தில் உள்ளனர்.

              அவர்களின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட BSNLEU , TNTCWU மாநிலச் சங்கங்கள் வேண்டுகோள் விட்டுள்ளன. வட தமிழகத்தின் துயர் துடைக்க நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திடுவோம்.