Showing posts with label செப்-19 தியாகிகள் தினம். Show all posts
Showing posts with label செப்-19 தியாகிகள் தினம். Show all posts

Tuesday, 17 September 2013

செப்-19 தியாகிகள் தினம்





செப்-19 தியாகிகள் தினம்

தபால் தந்தி, ரயில்வே, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968, SEP 19 அன்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தம்தான் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க இவ் வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகள்: 
*தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.
* கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
*DA FORMULA மாற்றி அமைக்க ப்பட வேண்டும்.
இதை அறிவித்து வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துவக்கி விட்டது. டெல்லியில் உள்ள அனைத்து P & T நிர்வாக பகுதிகளில் 18 ம தேதி காலை 11 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது. டெல்லியில் மட்டும் 1650 P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள். P & T தோழர்கள் 4000 பேர் உள்ளிட்ட 10000 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
வேலை நிறுத்தத்தில் 280000 பேர் கலந்து கொண்டனர் . 140000 ஊழியர்கள். கைதாகினர். 
 
8700 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதில் P & T தோழர்கள் 3756 பேர். 44000 தற்காலிக ஊழியர்களை Termination செய்ய நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நடைபெற்றதில்லை.
 
பிகானிர், பதான்கோட், பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 9 ரயில்வே தொழிலாளிகள் பலியானார்கள். பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக் கைவிடக்கோரியும் அசையாததால் விதிப் படி வேலை போராட்டத்தை துவங்கியது. 
 
இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்த உதவியது. தொழிலாளர் சக்தியை அரசும் உணரத் துவங்கியது.எதிர்காலப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய செப் 19 போராட்ட தியாகிகளுக்கு நமது வீர வணக்கத்தை உரித்தாக்குவோம்.