Showing posts with label என்ன செய்வதாய் உத்தேசம் ?. Show all posts
Showing posts with label என்ன செய்வதாய் உத்தேசம் ?. Show all posts

Wednesday, 14 August 2013

என்ன செய்வதாய் உத்தேசம் ?







என்ன செய்வதாய் உத்தேசம் ?


சிக்கலில் இருக்குது இத்தேசம்
என்ன செய்வதாய் உத்தேசம்
இந்தியனே நீ பதில் சொல்லு
தீர்வின் திசையில் போய் நில்லு

விடுதலை நாளில் ஒன்றானோம்
சேர்ந்து உழைக்க வென்றோம் நாம்
கெடுதலை மாற்றி நன்மை பெற
கிளர்ந்தோம் புதியதாய் நாம் மலர்ந்தோம்

தேசப்புகழை திசை எட்டும்
பேசக்கிடைக்கும் பொன் வேளை
நாசம் செய்ய நாட்டுக்குள்
நாளும் விரியும் சதிவலைகள்

உலகம் புகழும் தேசத்தில்
உயிர் பலி கேட்க்கும் கலவரங்கள்
கலகம் பலவும் தோன்றுதற்கு
சாதி மத வெறியே காரணங்கள்

வாழ்க்கை கிடக்குது ஓரத்தில்
நாட்கள் நகருது சோகத்தில்
ஆட்கள் சேர்ந்து மாற்றாமல்
அழுவதில் என்ன லாபங்கள் ?
_
ஜீவி