Showing posts with label அகில இந்திய மாநாடு - முதல்நாள். Show all posts
Showing posts with label அகில இந்திய மாநாடு - முதல்நாள். Show all posts

Saturday, 8 November 2014

அகில இந்திய மாநாடு - முதல்நாள்







          BSNLEUவின் 7 ஆவது அகில இந்திய மாநாடு
 அகில இந்தியத் தலைவர் தோழர் வி.ஏ.என்.நம்பூதிரி 
அவர்கள் தலைமையில் கொடியேற்றம் மற்றும்
அஞ்சலியுடன் தொடங்கியது. வரவேற்புக்
 குழு தலைவர் தோழர் சிசில் பட்டாச்சார்யாவின்
 வரவேற்புரையைத் தொடர்ந்து சிஐடியுவின்
அகில இந்திய பொதுச்செயலர்
தோழர் ஏ.கே.பத்மநாபன் தொடக்க
உரையாற்றினார்.
               
பொதுச் செயலாளர் தோழர் அபிமன்யுவின்
 எழுச்சியான தொடக்க உரையுடன் மாநாட்டின்
முதல்நாள் தொடங்கியது. தபால்
தந்தித் துறையின் தொழிற்சங்கத்திலிருந்து
 அதன் பொதுச் செயலாளர் தோழர் கிருஷ்ணன் மற்றும்
அனைத்திந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
 பொதுச் செயலர் தோழர் ரமேஷ் ஆகியோரின்
 வாழ்த்துரையைத் தொடர்ந்து தோழர் மோனி போஸ்
 குறித்த நூல் ஒன்று வெளியிடப்பட்டது.
அதனை திருமதி மோனிபோஸ்அவர்கள் பெற்றுக்கொண்டார்.
 நமது துணைப் பொதுச் செயலர் தோழர் அனிமேஷ் மிஷ்ரா
அவர்கள் காலை நிகழ்வுக்கு நன்றி
கூறி முடித்து வைத்தார்.
             
பிற்பகல் நடைபெறுவதாக இருந்த
 பேரணிக்கு வழக்கமான காரணங்களைக்கூறி
அரசாங்கம் அனுமதி தர மறுத்ததால், பொது
அரங்காக கல்கத்தா அலியூர் டெலிகம் பேக்டரிக்கு
 முன்னால் பொதுஅரங்கம் நடைபெற்றது. பொது
 அரங்கில் தோழர் சக்ரவர்த்தி மற்றும்பாராளுமன்ற
உறுப்பினர் தபன் சென் ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.