Saturday, 16 February 2019

மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்


மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்






4ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.        S. செல்லப்பா......
**(***(**

16 Feb 2019  

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில், 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்ககூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எஸ்.செல்லப்பா, தலைவர் கே.நடராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:இணையதளத்தின் இன்றைய நிலை 4ஜி அலைக்கற்றையை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தவகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை 3 முறை சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செல்போன் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு அவர்களுக்கு சலுகைகளையும் மத்தியஅரசு அறிவித்து வருகிறது. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தொழிலை விரிவுபடுத்த முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.


பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது. வங்கிகளில் கடன் வாங்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு, பிஎஸ்என்எல் கடன் வாங்க தடை விதிக்கிறது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். இந்த நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3-வது ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment