Sunday, 16 October 2016

FORUM முடிவுகள்




FORUM முடிவுகள்
FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONSன் CORE COMMITTEE கூட்டம் கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள அறை எண் 706ல் தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA தலைமையில் 14.10.2016 அன்று நடைபெற்றது. அதில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன:- 1) BSNLன் எதிர்காலத்தை சீரழிக்கக்கூடிய துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் வேகமாக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. எனவே துணை டவர் நிறுவனம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து 26.10.2016 அன்று மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய மட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 17.11.2016 அன்று நடைபெற உள்ள FORUMத்தின் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். 2) BSNLன் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பாக, தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான எண்ணிக்கையில் மொபைல் இணைப்புகளை BSNL தந்து வருவதற்காக அனைத்து ஊழியர்களையும் நிர்வாகத்தையும் கூட்டம் பாராட்டியது. செப்டம்பர், 2016ல் BSNL 23 லட்சம் இணைப்புகளை வழங்கியதை இந்தக் கூட்டம் மனநிறைவுடன் பாராட்டியது. இந்த ஆண்டின் BSNL நிறுவனத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது எதிர்வரும் ஊதிய மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், நிறுவனத்தின் வருவாய் மற்றும் விற்பனைகளை மேலும் அதிகரிக்கச் செய்ய ஊழியர்களும், அதிகாரிகளும் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. மேலும் பழுதில்லா சேவைகளை பராமரிப்பதன் மூலம் சந்தாதாரர்களுக்கு நல்ல தரமான சேவைகளை தருவதற்கு சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஊழியர்களை கேட்டுக் கொள்கிறது. புதியதாக நுழைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை எதிர்கொள்வதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக 17.11.2016 அன்று FORUMத்தின் முழு அளவிலான கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. 3) ஒரு சிலரின் நலன்களை பாதுகாப்பதற்காக, தொலை தொடர்பு துறை தொடர்பான மாதாந்திர இதழான ‘TELECOM LIVE’ என்ற பத்திரிக்கை BSNLன் மதிப்பை குலைக்கும் வகையில், BSNL தொடர்பான தவறான பல கட்டுரைகளையும் செய்திகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ‘TELECOM LIVE’ பத்திரிக்கையினை கண்டித்து 17.11.2016 அன்று கார்ப்பரேட் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட இந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது. மேலும் TELECOM LIVE பத்திரிக்கையின் மீது PRESS COUNCIL OF INDIAவில் ஒரு புகார் கொடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 4) BSNLன் புத்தாக்கத்திற்காக நிர்வாகமும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த முயற்சிகள் பலன் தர துவங்கியுள்ளன. எனினும் BSNLஐ ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தொலை தொடர்பு துறை, உண்மையில் BSNLக்கு எதிரான முடிவுகளையே எடுத்து வருவதை இந்தக் கூட்டம் வருத்தத்துடன் கவனிக்கின்றது. எனவே BSNLன் புத்தாக்கத்திற்காக நிர்வாகமும் ஊழியர்களும் எடுத்து வரும் முயற்சிகளை பற்றியும், BSNLக்கு எதிராக தொலை தொடர்பு துறை எடுத்து வரும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒரு விரிவான கடிதத்தை மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களுக்கு எழுதுவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment