Wednesday, 30 September 2015

IDA உயர்வு



IDA உயர்வு

   01-10-2015 முதல் IDA  5.3% உயர்ந்துள்ளது ஆக மொத்தம்  IDA 107.9%. ஆக இருக்கும்.

Tuesday, 29 September 2015

நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...


நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 06.10.15 போனஸ் ஆர்பாட்ட  அறைகூவல் குறித்து அகில இந்திய FORUM அறிவித்துள்ளது பற்றி நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது 



Read | Download

சுற்றறிக்கை எண்:68
தற்காலிக PLI வழங்கக் கோரி-அக்டோபர் 6ல் ஆர்ப்பாட்டம்- FORUM முடிவு

Tuesday, 22 September 2015

பக்ரித்பண்டிகை விடுமுறை





பக்ரித்பண்டிகை விடுமுறை 25-09-2015 க்கு பதிலாக 24.09.2015 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாநில நிர்வாகம் அதற்கான உத்தரவை பிறப்பித்து விட்டது .


கண்ணீர் அஞ்சலி . . .





கண்ணீர் அஞ்சலி . . .

 
கண்ணீர் அஞ்சலி . . .

  அருமைத் தோழர்களே ! அனைவராலும் அன்பாக "பெத்தேல் " என அழைக்கப்படும் அருமைத் தோழர் " D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக, மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். K.G.போஸ் அணியை கட்டுவதில் முன்னின்ற தலைவர்களில் இவரும் ஒருவராக இருந்து தமிழகம் முழுவதும் சென்று பணியாற்றியவர்.தொழிற்சங்க செயல்பாட்டிற்காக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு, பாண்டிச் சேரியில் இருந்து பழனிக்கு மாற்றப்பட்டார். மதுரை மாவட்டத்தில் K.G.போஸ் அணி முன்னணி படையாக வளர்வதற்கு அரும்பாடு பட்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருதய சிகிச்சை செய்து நலமுடன் இருந்து வந்தார். தற்போது, மீண்டும் இருதய சிகிச்சை கடந்த வாரம் சென்னையில் செய்யப்பட்டது. அதற்குப் பின் அவருக்கு இருதயம் சரியாக இயங்குவதாகவும். கிட்னி செயல்இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி தோழர். D.J.J.பெத்தேல் ராஜ்" இன்று 21.09.15 மதியம் 3 மணிக்கு இயற்கை எய்திவிட்டார். அன்னாருக்கு நமது BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

Sunday, 20 September 2015

தர்ணா போராட்டம்


தர்ணா போராட்டம்





      நமது நிறுவனத்தின் செல் கோபுரங்களை தனியாகப் பிரித்து அதை ஒரு கம்பெனியாக அமைத்து தனியாருக்கு தாரை வார்க்க தணியாத தாகத்தோடு இருக்கிற மத்திய அரசைக்  கண்டித்து திருநெல்வேலில் GMO அலுவலகத்தில்
 தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது .

   
  
காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணிவரை நடைபெற்றது 


     சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் 19..09.2015 அன்று நடத்தப்பட்டது 

      அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது 

       அதிகாரிகளும் ஊழியர்களுமாக  சுமர் 80 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

        விண்ணை முட்டும் கோஷங்கள் வீராவேஷமாக முழங்கப்பட்டது 

        கலந்துகொண்டு சிறப்பித்த அதிகாரி களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி 







நமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -67.

22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துக...






22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துக...

அருமைத் தோழர்களே ! 22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்திட நமது மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது....