Wednesday, 16 April 2014

70% of the minimum of the pay scale plus the admissible IDA.........




stipend

70% of the minimum of the pay scale plus the admissible IDA shall be the stipend payable to the DR TTAs / Sr.TOAs / TMs. trainees: உத்தரவு படிக்க :-CLICK hERE

Sunday, 13 April 2014

Dr.அம்பேத்கார் ஏற்றிய தீபத்தை - எரியச் செய்வோம்!


Dr.அம்பேத்கார் ஏற்றிய தீபத்தை - எரியச் செய்வோம்!

தீண்டாமைக்கு எதிராக

தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும் செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்றஇரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார் 
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது .
அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,
பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!

 ஏப்ரல் 14, அன்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவருடைய லட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் உறுதி ஏற்போம்.

Friday, 11 April 2014

தொடரும் வெற்றி



தொடரும் வெற்றி

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

Thursday, 10 April 2014

கூட்டு போராட்ட குழு

கூட்டு போராட்ட குழு


   இன்று கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் நமது CMD அவர்களை சந்தித்து நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி ஒரு குறிப்பாணையை  சமர்ப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்கள்  P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர், JAC, தோழர் V.A.N. நம்பூதிரி, President, BSNLEU, தோழர் சந்தேச்வர் சிங், GS, NFTE & தலைவர், JAC, தோழர் ஜெயப்ரகாஷ், GS, FNTO & இணை  கன்வீனர், JAC, தோழர் R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர், JAC, தோழர் பவன் மீனா, GS, SNATTA & இணை கன்வீனர், JAC, தோழர்  சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத், Dy.GS, TEPU, தோழர் R.K. கோஹ்லி, GS, NFTBE & com. R.S. யாதவ், இணை செயலர், BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர். 
<குறிப்பாணை படிக்க >Click Here

Wednesday, 9 April 2014