Sunday, 26 July 2015
25.07.15 எழுச்சி மிகு திருநெல்வேலி மாவட்ட செயற்குழு ..
25.07.15 எழுச்சி மிகு திருநெல்வேலி மாவட்ட செயற்குழு ..
தோழர். A. பாபு ராதா
கிருஷ்ணன் மாநிலச் செயலர்.
தோழர்.
Vp இந்திரா மாநிலச் உதவிச்
செயலர். ஆகியோர் கலந்து கொண்டார்கள்
.
Friday, 24 July 2015
Efforts are on to organise a joint campaign for the 2nd September General Strike.
Efforts are on to organise a joint campaign for the 2nd September General Strike.
Serious efforts are being taken to organise a joint campaign programme, at the National level, to make the 2nd September General Strike a success in BSNL. An all Union / Association meeting is being held at New Delhi on 27.07.2015. Convener, Forum of Unions and Associations has issued the notification for the meeting.<<view notice>>
மாநில சங்க சுற்றறிக்கை எண் 52
ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகங்கள்
மாநில சங்க சுற்றறிக்கை எண் 52 படிக்க :-Click Here
சுற்றறிக்கை
BSNL அறிவித்த விலையில்லா திட்டங்களை பயன்படுத்துவீர்... பயன்பெறுவீர்....
பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம் படிக்க :-Click Here
மாநில சங்க சுற்றறிக்கை
ஒப்பந்த ஊழியரு ரூ.15,000/- கோரி க்கு குறைந்த பட்ச கூலி29.07.2015ல் பேரணி
மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here
Sunday, 19 July 2015
‘0’வை அழுத்தினால் கேஸ் மானியம் குளோஸ் பாஜக அரசு நூதன மோசடி
‘0’வை அழுத்தினால் கேஸ் மானியம் குளோஸ்
பாஜக அரசு நூதன மோசடி
பாஜக அரசு நூதன மோசடி
-
செல்போன் மற்றும் தரைவழி போன்களில்
இருந்து தானியங்கி முறையில் கேஸ்சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது
அமலில் இருந்து வருகிறது.முன்பதிவு செய்வதற்கான எண்ணுக்கு பேசும்போது அதில் வரும்
தகவல்களுக்கு ஏற்ப பட்டனை அழுத்தி கேஸ் சிலிண்டரை பெறுகிறோம்.வழக்கமாக புக்கிங்
சேவை போன் இணைப்பு கிடைத்தவுடன் கியாஸ் முன்பதிவு செய்ய எண்.1–ஐ அழுத்தவும் என்ற தகவல் முதலில் வரும்.
நாம் எண்.1ஐ அழுத்தினால் கேஸ் பதிவு எண்
சொல்லப்பட்டு நமது மொபைலுக்கு அந்த எண் எஸ்.எம்.எஸ். மூலம் வரும். அதன் பிறகு சில
நாட்களில் நமது வீட்டுக்கு கியாஸ் சிலிண்டர் அனுப்பப்படும். கேஸ் சிலிண்டர் சப்ளை
ஆனதும் அதற்கான மானியத் தொகை நமது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த நிலையில், “ஏழைகளுக்காக கேஸ் மானியத்தை விட்டுக்
கொடுக்க வேண்டும்” என்று ஏழை மக்களின்
செல்போன்களுக்கே மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த
நிலையில் கேஸ் மானியத்தை ‘விட்டுக்கொடுப்பவர்களுக்கு’ வசதியாக முன் பதிவு செய்யும் போதே
மானியத்தை ரத்து செய்வதற்கான நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி யுள்ளன.
அதன்படி, கைபேசியிலோ அல்லது தரைவழி போனிலோ கேஸ்
சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும்போது ஜீரோ பட்டனை அழுத்தினாலே கேஸ் மானியம்
ரத்தாகி விடும்.முன்பெல்லாம் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய
எண்.1ஐ அழுத்துங்கள் என்றதகவல் முதலில்
வரும். அதன்படி வாடிக்கையாளர்களும் சவுகரியமாக எண்.1ஐ அழுத்தி சிலிண்டரை முன்பதிவு செய்தார்கள். ஆனால் தற்போது முன்பதிவு
செய்யும்போது முதலில், கேஸ் மானியத்தை
விட்டுக் கொடுக்க ஜீரோவை அழுத்தவும் என்று வருகிறது. அதன் பிறகுதான் சிலிண்டர்
முன்பதிவுக்கு எண்.1ஐ அழுத்தவும் என்று
வருகிறது.
இந்த நடைமுறையைப் பற்றி தெரியாதவர்கள்
மற்றும் போன் பயன்பாட்டை பற்றி முழுமையாக அறியாத பொதுமக்கள் தவறுதலாக ஜீரோவை
அழுத்தினாலும் மானியம் ரத்தாகும் அபாயம் உள்ளது.ஜீரோவை தவறுதலாக அழுத்திய பிறகு
அதை திருத்திக் கொள்ள போனில் வாய்ப்பு இல்லை. பின்னர்மீண்டும் மானியத்தை பெற
வேண்டும் என்றால் கேஸ் ஏஜென்சி யைத்தான் அணுக வேண்டும். இந்த நடைமுறையால் கேஸ்
பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நடைமுறை சிக்கல்களை சந்திக்கஅதிக வாய்ப்பு உள்ளது.
எனவேசிலிண்டர் முன்பதிவு செய்யும் போது மானியம் ரத்து குறித்த விவரத்தை உடனடியாக
நீக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கேஸ் மானியத்தை
ஒட்டுமொத்தமாக ஒழிப்பது என மோடி அரசு தீர்மானித்துவிட்டது. அதையே படிப்படியாக
அமலாக்கி வருகிறதுஎன்பதை இது உறுதிப்படுத்துகிறது.
Subscribe to:
Posts (Atom)

















