Thursday, 5 December 2013

BSNL is awarded "Excellent" grade for Corporate Governance.




BSNL is awarded  "Excellent" grade for Corporate Governance. 
The DPE, vide it's letter dated 27-11-2013, has awarded Excellent grade for BSNL. The DPE is awarding grades to Central Public Sector Enterprises, on the basis of their compliances with guidelines on Corporate governance. For the year 2012-13 BSNL is awarded Excellent grade since it has scored 100%. <<view letter>>

மாநில செயலக முடிவுகள்- சுற்றறிக்கை




ஆயிரம் கோடிக்கான கேள்வி- மாநில செயலக முடிவுகள்- சுற்றறிக்கை எண்:96Read | Download
 எண்:95
Read | Download


மாநில செயலக முடிவுகள்- சுற்றறிக்கை எண்:96Read | Download

சுற்றறிக்கை எண்:94



மத்திய சங்க செய்திகள்- சுற்றறிக்கை எண்:94Read | Download

டிசம்பர் 6 - அம்பேத்கர் பிறந்த நாள்




டிசம்பர் 6 - அம்பேத்கர் பிறந்த நாள்


 வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல், பாராட்டை 

எதிர்பாராமல் கடமையைச் செய்யுங்கள்! உங்கள் திறமையை, 

நேர்மையைக் கண்டு எதிரியும் உங்களை மதிக்க முன்வருவான்!

- Dr.அம்பேத்கர்

Wednesday, 4 December 2013

எது எப்படிப் போனாலும்...





எது எப்படிப் போனாலும்...

ஏற்றதொரு கருத்தை என் மனம் ஏற்றால் எவர் வரினும் அஞ்சேன் நில்லேன்என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற கவிதை வரிகள். மக்களுக் கான லட்சிய வீரர் களின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வரிகள் இவை. ஆனால், மக்களைக் காட்டிக் கொடுப்பவர்களும் கைவிடு கிறவர்களும் இந்த வரிகளுக்கேற்ப நடந்து கொள்வது காலத்தின் கோலம். பிரதமர் மன் மோகன் சிங் உதிர்த்துள்ள இரண்டு கருத்துகள், மக்களின் அதிருப்தி யையோ, ஆவேசத்தையோ பொருட்படுத்தாத கோலமாகவே இருக்கின்றன.ஒரு கருத்து, பொதுத்துறை நிறுவனங் களுடைய பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பானது.
சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், இதற்காக நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக் கை அடைய பல்வேறு வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வற்புறுத்தியிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. குறிப்பாக பிஎச்இ எல், இந்திய நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ஈடுகட்ட இந்த நடவடிக்கை தேவைப்படுகின்றது என்று விளக்கம் தரப் பட்டுள்ளது.இரண்டாவது கருத்து, எரிபொருள் விலை நிர்ணயத்தை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து முற் றிலுமாக விலக்குவது தொடர்பானது. புதுதில்லி யில் ஆசிய எரிவாயுத் திட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் தேவையை ஈடுகட்ட வேண்டுமானால் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அவற்றுக்கு விலை நிர்ண யிப்பது தேவைப்படுகிறது என்று கூறியிருக் கிறார். எரிபொருள் நிறுவனங்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்கள் தங்களது சரக்குகளுக் கான விலையை அவ்வப்போது முடிவு செய்ய அனுமதிப்பது என்பதே இதன் பொருள்.இவ்விரு கருத்துகளிலுமே உள்ளார்ந்ததாக இருப்பது,
ஐமுகூ அரசு இதுவரை கடைப் பிடித்து வந்துள்ள பொருளாதாரக் கொள்கை களின் தோல்விதான். ஆனால் கொள்கைத் தோல்வியை ஒப்புக்கொள்கிற அரசியல் நேர்மை யைத்தான் மத்திய ஆட்சியாளர்களிடத்தில் காணோம். மாறாக எந்தக் கொள்கை தோல்வி யடைந்ததோ அதே கொள்கையை மேலும் தீவிர மாக மக்கள் தலையில் சுமத்துகிற பாதையில் தான் இந்த அரசு செல்கிறது. ஒரு பக்கம் பற் றாக்குறையைக் காரணம் காட்டி சமூக நலத் திட்டங்களில் கைவைப்பது, இன்னொரு பக்கம் சந்தை ஆதிக்க சக்திகளின் பிடியில் அத்தியாவசியப் பொருளைத் தள்ளிவிடுவது.தோல்வியைச் சமாளிப்பதற்காக என இவர் கள் செயல்படுத்திய, பொதுத்துறை பங்குகள் விற்பனை என்பதும் தோல்வியடைந்துவிட்டது என்பதே உண்மை. உதாரணமாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலமாக 2013-14ம் நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் நடப்பு நிதி யாண்டின் மூன்றாவது காலாண்டு முடியும் தரு வாயில் 1,325 கோடி ரூபாய் மட்டுமே கிடைத் திருக்கிறது.
இந்த நிலவரத்திலும் பொதுத்துறை பங்குகளை விற்பனைக்குப் புதிய வழிகளைக் கண்டறிய பிரதமர் வற்புறுத்துகிறார் என்றால், அவற்றைத் தனியார்மயமாக்குவதிலும், அதன் மூலம் உள்நாட்டு - வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் சேவை செய்வதில் எந்த அளவுக்கு இந்த அரசு விசுவாசமாக இருக்கிறது என்பதுதான் தெளிவாகிறது.

by Theekkathir

Billing disputes high against Voda, Idea, BSNL, Aircel



Billing disputes high against Voda, Idea, BSNL, Aircel: TRAI << click >>