Friday, 5 July 2013
Thursday, 4 July 2013
வேலை நிறுத்தம் தொடங்கியது
வேலை நிறுத்தம் தொடங்கியது !
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்.
CPM கட்சியின் தலைவரான தோழர் ராமமூர்த்தியின் முன் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்
சோவியத் யூனியனின் உதவியால் தொடங்கப்பட்ட நிறுவனம்
2007-08 ஆம் ஆண்டு 821 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த நிறுவனம்
2011-12 ஆம் ஆண்டு 1411 கோடி ரூபாயும் 2012-13 ஆம் ஆண்டு 1459 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த நிறுவனம்
தற்போது 93.56 % பங்குகள் அரசின் கைவசம் உள்ளது
நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம்.
18 000 நிரந்தர ஊழியர்களும் 13 000 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளனர்.
தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கிய பங்கை செலுத்துகிறது.
இந்த நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு துடிக்கின்றது. இதன் மூலம் வெறும் 466 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு கிடைக்கும்.
மிகச் சொற்ப தொகை கிடைத்தாலும் மத்திய அரசு விற்பனையில் உறுதியாக இருப்பதன் காரணம் என்ன ?
மத்திய அரசுக்கு நிதி நெருக்கடியாம்…. 5 20 000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையாம்……
நிதிப் பற்றாக்குறை எப்படி ஏற்பட்டது ?
பண முதலைகளுக்கு வரி சலுகை
வட்டி சலுகை வராக் கடன் சலுகை
ஏற்றுமதி சலுகை இறக்குமதி சலுகை இப்படி ஏகப்பட்ட சலுகைகள்….
இதன் மூலம் மத்திய அரசுக்கு 5,73, 000 கோடி ரூபாய் செலவு. இதை மட்டும் அரசு ரத்து செய்தால் மத்திய பட்ஜெட்டில் 53,000 கோடி ரூபாய் மிச்சமாகும் .
466 கோடி ரூபாய்க்காக ஒரு கேந்திரமான நிறுவனத்தை விற்கலாமா? வோடாபோன் செய்த சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரியேப்பை தடுத்து அதை வசூல் செய்தாலே போதுமே? மத்திய அரசு நிதி பற்றாக்குறை என்பது ஒரு நாடகமே!
அதன் நோக்கமெல்லாம் இந்திய பெரு முதலாளிகளுக்கும், வெளி நாட்டு முதலாளிகளுக்கும் இந்திய நாட்டு வளங்களையெல்லாம் தாரை வார்ப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் முதலாளிகளுக்கு விற்பது தான் அரசின் கொள்கை முடிவு என்று எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் பிரகடனம் செய்துள்ளது
பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவது மூலம் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்
மேலும் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை மறுபடியும் சலுகை என்ற பெயரில் முதலாளிகளுக்கே திரும்ப போய் சேரும் .
கடந்த நிதி யாண்டில் 30 000 கோடி ரூபய் பெறுமான பொதுத்துறைபங்குகளை விற்பது என்று முடிவு செய்து சுமார் 23 956 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது. எனவே பங்கு விற்பனை என்பதை எந்த வடிவத்திலாவது ஏதாவது காரணத்தைக் காட்டி முதலாளிகளுக்கு சேவை செய்ய அரசு முயற்சி செய்யும். அடுத்த கட்டமாக நமது நிறுவனம் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். எனவே நாம் பிற பகுதி தொழிலாளர் வர்க்கத்துடன் ஒன்றிணைந்து பங்கு விற்பனை என்ற கொள்கையை எதிர்த்து போராடுவோம்.
Granting Hard Area Allowance
Corporate Office issues order, granting Hard Area Allowance to Lakshadweep.
Corporate Office has issued order, granting Hard Area Allowance to Lakshadweep. This demand has long been pressed upon by BSNLEU.<<view order>>
Wednesday, 3 July 2013
பெருநகரங்களில் கொள்ளை லாபம் : 4 ஆயிரம் கோடி பேரம் பேசும் வோடபோன்
பெருநகரங்களில் கொள்ளை லாபம் : 4 ஆயிரம் கோடி பேரம் பேசும் வோடபோன்
புதுதில்லி, ஜூலை 2 -தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் மொபைல் உரிமங்கள் மற் றும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி அளிக்கத் தயாராக இருப்பதாக வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட உரிமங்கள் இயல்பாக நீட் டிக்கும் தன்மையை தொலைதொடர்புத்துறை மறுத்திருந்தது. மொபைல் சேவையை அளிக்கும் நிறு வனம் ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தின் மூலமே பெற வேண்டும் என அறிவுறுத்தி யிருந்தது.இதன் அடிப்படையில் வோடபோன் நிறுவனம் இந்திய அரசுடன் கொண் டிருந்த சர்ச்சையை முடி வுக்கு கொண்டு வர ரூ.4 ஆயிரம் கோடி அளிக்க தயாராக உள்ளது.இதுதொடர்பாக வோடபோன் நிறுவனம் தொலை தொடர்புத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரஸ்பரஆலோசனை அடிப்படையில் எங்களது உரிமங்களை நீட்டிக்க வேண்டும். கொல்கத்தாவில் ஸ்பெக்ட்ரத்தை பெற ரூ.600 கோடியும் தில்லி மற்றும் மும்பை பகுதிகளில் ஸ்பெக்ட்ரத்தை பெற தலா ரூ.1700 கோடியும் அளிக்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம்ஆண்டில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையான 3ஜி ஸ்பெக்ட்ரத்தை பெறுவதற் கான முன் நிர்ணய விலை யை காட்டிலும் தற்போது இரு மடங்கு கூடுதல் தொகையை தந்து அதன் உரிமங்களை பெறுவதற்கு வோடபோன் துடிக்கிறது.இதன் மூலம் தொலை தொடர்பு சேவையில், குறிப் பாக மொபைல் சேவையில் முதலீடு செய்த தொகைக்கு பல மடங்கு அதிக லாபம் ஈட்டலாம் என்று ருசி கண்ட வோடபோன் போன்ற தனியார் தொலை பேசி நிறு வனங்கள் மொபைல் சேவைக்கான மொபைல் உரிமம் மற்றும் ஸ்பெக்ட் ரத்தைப் பெற தீவிரம் காட்டுகின்றன. 1900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெறு வதற்கு தற்போது வோட போன் நிறுவனம் 3ஆண்டு முன்னர் செலுத்திய முன் நிர்ணய விலையைக்காட் டிலும் 1.3 மடங்கு அதிகம் விலை தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறது.இருப்பினும் இது தொலைதொடர்புத்துறை ஏற்கனவே நிர்ணயித்த அடிப் படை விலையைக்காட்டி லும் குறைவாகும். தில்லியில் ஒரு யூனிட் ஸ்பெக்ட்ரத் திற்கு ரூ.485கோடி செலுத்த வேண்டும். இதன் படி வோடபோன் நிறுவனம் 10 மெகாஹெர்ட்ஸ் அலைக் கற்றையைப்பெறுவதற்கு தில்லிக்கு மட்டும் ரூ.4ஆயி ரத்து 850 கோடி செலுத்த வேண்டும் என்பது கவனிக் கத்தக்கது.
என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு : தொழிலாளர் உண்ணாவிரதம்
என்எல்சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு : தொழிலாளர் உண்ணாவிரதம்

நெய்வேலியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார்.
நெய்வேலியில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உரையாற்றினார்.
கடலூர், ஜுலை 2-பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெய் வேலியில் சிஐடியு சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற் றது. இதில் ஆயிரக்கணக் கான ஊழியர்கள் பங்கேற் றனர்.என்எல்சி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள் ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங் களும் 3ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கு முன்ன தாக, தொடர் போராட்டங் களையும் நடத்தி வருகின் றனர்.என்.எல்.சி தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பொறியாளர்கள், அதிகாரி கள் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நெய் வேலி பணிமனை பேருந்து நிலையம் அருகே ஸ்கீயூ பாலம் அருகே உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி யது.தொமுச மாநில பொதுச் செயலாளர் ராசவன்னியன் தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்கத் தின் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் உண்ணாவிரதத் தைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், மாவட்டச் செய லாளர் பி.கருப்பையன், தொமுச பேரவைச் செய லாளர் சண்முகம், திராவிடர் கழக தமிழர் பேரவை தலை வர் சுப.வீரபாண்டியன், விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் மாநில ஒருங்கிணைப் பாளர் சிந்தனை செல்வன், திக மாநிலச் செயலாளர் துரை.சந்திரசேகரன், பிடி எஸ் தலைவர் திலகர், ஏஐயு டிசிசி அனவரதன், ஐஎன்டி யுசி சுந்தர மூர்த்தி, சிபிஎம் நகரச் செயலாளர் எஸ். திரு அரசு, சிஐடியு சங்க தலை வர் ஜி.குப்புசாமி, பொதுச் செயலாளர் ஏ.வேல்முருகன் மற்றும் பல்வேறு சங்கங் களின் தலைவர்கள் உரை யாற்றினர். இந்த உண்ணா விரதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பங்கேற்றனர்.இந்த உண்ணாவிர தத்தையொட்டி நெய்வேலி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது.தொழிற்சங்கம் 16, பொறியாளர் சங்கம் 3, நலச் சங்கங்கள் 2, 1 அதிகாரி சங் கம் உட்பட 22 தொழிற் சங் கங்கள் உள்ளன. இந்த அனைத்து தொழிற்சங் கங் களும் புதன்கிழமை இரவு முதல் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. என்எல்சி பங்கு விற்ப னையை எதிர்த்து நடை பெறும் இந்தப் போராட்டத் தில் அனைவரும் கலந்து கொள்வதால் மூன்று அனல் மின் நிலையங்கள், 3 நிலக்கரி சுரங்கங்களின் உற் பத்தி முழுமையாக பாதிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் முற்றிலும் பாதிக்கப்படும். நெய்வேலியில் உற்பத்தி யாகும் மின்சாரத்தில் 60 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், மீதி மின்சாரங்கள் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநி லங்களுக்கும் அனுப்பப் பட்டு வந்தன. நெய்வேலி மின்சாரம் தடைபடுவதால் அந்த மாநிலங்களில் கடு மையாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.என்எல்சி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 4-ந்தேதி நெய் வேலியில் கடையடைப்புப் போராட்டம் நடத்த வியா பாரிகள் முடிவு செய்துள் ளனர். எனவே நெய்வேலி முழுவதும் கடைகள் அடைக்கப்படும்.
நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் : என்எல்சி அனைத்து தொழிற்சங்கங்களும் நள் ளிரவு முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்குகின் றனர். இதனால் கடுமை யான மின் தட்டுப்பாடு ஏற் படும் நிலை எழுந்துள்ளது. 4ம் தேதி நெய்வேலியில் முழு கடையடைப்பு போராட் டமும் நடைபெறுகிறது.
இந்திய தூதரகத்தை வேவு பார்த்த அமெரிக்காவுக்கு சல்மான் குர்ஷித் வக்காலத்து
இந்திய தூதரகத்தை வேவு பார்த்த அமெரிக்காவுக்கு சல்மான் குர்ஷித் வக்காலத்து
எட்வர்டு ஸ்னோடென்
அமெரிக்காவின் உளவு நிறு வனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் (என்ஐஏ) பணியாற் றிய எட்வர்டு ஸ்னோடென், உளவு நிறுவனத்தின் நாசகரப் பணிகளை அம்பலப்படுத்தியதால் அவரைக் கைது செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஹாங்காங்கில் இருந்த ஸ்னோடென் அங்கிருந்து வெளியேறி, ரஷ்யாவிற்கு தஞ்சம் அடையச்சென்றுள்ளார். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லாத தால் அவர் மாஸ்கோ விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனக்கு அடைக் கலம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா, சீனா, பிரேசில், இந்தியா மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஸ்னோ டென் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை இந்தியா நிரா கரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எர் வர்டு ஸ்னோடென் விடுத்த கோரிக்கை பற்றி மாஸ்கோவில் உள்ள தூதரகம் மூலம் உறுதி செய் யப்பட்டது. அவரது கோரிக் கையை நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்தோம். அதன்பின்னர், அவரது கோரிக்கையை ஏற்பதில் லை என்ற முடிவுக்கு வந்திருக் கிறோம்” என்றார்.
இந்தியத் தூதரகத்தை வேவு பார்த்த : அமெரிக்காஇந்தியத்தூதரகம் உள்பட மொத் தம் 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்த விவரத்தை வெளி யிட்டுள்ளார், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றியவரான எட்வர்ட் ஸ்னோடென். ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தைத் தொடர்ந்து தற்போது ஸ்னோடென் மூலம் பெரும் தலைவலியில் சிக்கியுள் ளது அமெரிக்கா. ஸ்னோடென், தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் முன்பு கம்ப்யூட்டர் பொறியாள ராக வேலை பார்த்தவர். இவர் தற் போது அமெரிக்காவின் உளவுப் பணிகள் குறித்த பல பயங்கர ரகசி யங்களை உலகிற்கு அம்பலப் படுத்தி வைத்து வருகிறார். இதனால் அமெரிக்கா ஆத்திரம் அடைந் துள்ளது. இதையடுத்து நாட்டை விட்டே வெளியேறியுள்ள ஸ்னோ டென், தற்போது ரஷ்யாவில் உள்ளார்.
ஸ்னோடென் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், இந்தியத் தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரங் களை அமெரிக்க அரசு உளவு பார்த்ததாக கூறியுள்ளார். இந்தத் தூத ரகங்கள் அனைத்தும் அமெரிக் காவில் உள்ளவையாகும்.இந்தத் தூதரகங்களின் இன்டர் நெட் கேபிள்களில் ரகசியமான முறையில் நவீன ஆண்டெனாக் களைச் சொருகி அதன் மூலம் முக் கியத் தகவல்களை அமெரிக்க உளவாளிகள் கள்ளத்தனமாகப் பெற்றுள்ளனர்.இந்தியா தவிர தனது நட்பு நாடு களின் தூதரகங்களையும் அமெ ரிக்கா இவ்வாறு உளவு பார்த்துள் ளது. இதுகுறித்த தகவல்களை ‘தி கார்டியன்’ பத்திரிகை விரிவாக வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தூதரகங்களையும் அமெரிக்கா உளவு பார்த்துள்ள தாக தகவல்கள் கூறுவதால், அந்த நாடுகள் கொதிப்படைந்துள்ளன. அமெரிக்க அரசிடம் விளக்கம் கோரியுள்ளன.அமெரிக்காவின் மிக நெருக்க மான கூட்டாளியாக உள்ளது ஜப் பான். அதேபோல தென் கொரியா, மெக்ஸிகோவும் கூட்டாளிகள் தான். இவற்றின் தூதரகங்களையும் கூட அமெரிக்கா விடவில்லை.ஒவ்வொரு நாட்டுத் தூதரகத் தையும் உளவு பார்க்க சங்கேத வார்த்தைகளை அமெரிக்கா பயன் படுத்தியுள்ளது. ஆனால் இந்தியா வுக்கு என்ன பெயர் வைத்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தஞ்சம் அளிக்க மறுப்பு : இதனிடையே ஸ்னோடென் இந்தியா, ஈக்வடார் உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கலம் கோரி கடிதம் எழுதியிருப்பதாக விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டது. இது பற்றி, புருனேவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டுக்குச் சென் றுள்ள சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சல் மான் குர்ஷித், கடந்த காலங்களில் இந்தியா அடைக்கலம் கொடுத் திருக்கிறது. ஆனால் அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல.. எங்களுக்கும் சில கொள் கைகள் இருக்கின்றன என்றார்.
-------------------------------------------
சிபிஎம் கண்டனம்
-------------------------------------------
புதுதில்லி, ஜூலை 2-
அமெரிக்காவின் உளவு வேலைகுறித்து சற்றும் கவலைப்படாதது மட்டுமல்ல, அதற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத் துக்கள் கூறியிருப்பது வெட்கக்கேடானது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியுள்ளது. இது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி எனும் உளவு நிறுவனம், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மட் டுமல்லாமல் அதேபோன்று 37 இதர நாடுகளின் தூதரகங்க ளின் கணினிகளில் உள்ள இணைய தளப் பதிவுகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் மிகப் பெரிய அளவில் களவாடி இருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக் கிறது. இவற்றை அங்கே பணியாற்றி, இப்போது வெளியேறி யிருக்கிற எட்வர்ட் ஸ்னோடென் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் அமெரிக்க அரசின் கய மைத்தனமான இத்தகைய உளவு வேலைக்கு எதிராக கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்திட வேண்டும்.
மாறாக, அதன் வெளியுறவு அமைச்சரான சல்மான் குர்ஷித் அவ்வாறு அமெ ரிக்க அரசு கள்ளத்தனமாகத் தலையிட்டுக் கொண்டிருப் பதை, ‘‘இது மற்றவர் விஷயங்களில் உரிமையின்றித் தலையிடும் பிரச்சனை அல்ல. இது கணினி ஆய்வு மற்றும் அழைப்புகளை கணினி மூலம் ஆய்வு செய்யும் விதம்’’ என்று கூறி நியாயப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் உளவு ஸ்தாபனம், வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பது குறித்துக் சற்றும் கவலைப்படாத ஓர் அயல்துறை அமைச்சரை இந்தியா பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளே கூட அமெரிக்க அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்திருக்கக்கூடிய நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சரின் வெட்கக்கேடான கூற்று வெளி வந்திருக்கிறது.மன்மோகன் சிங் அரசாங்கம், அமெரிக்க அரசின் கள்ளத் தனமான உளவு நடவடிக்கைகளுக்காக கடும் எதிர்ப்பி னைத் தெரிவித்திட வேண்டும். இதனை அமெரிக்கா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தீக்கதிர்
Subscribe to:
Posts (Atom)




