Thursday 11 July 2013

நோக்கியா தொழிலாளர் போராட்டம் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கைது


கூலி உயர்வு தராமல் பிடிவாதம்; தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பு நோக்கியா தொழிலாளர் போராட்டம் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கைது



கூலி உயர்வு வழங்காமல் பிடிவாதம் செய்து வரும் நோக்கியா சீமென்ஸ் ஆலை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை யில் ஊர்வலம் செல்ல முயன்ற தொழிலாளர்கள் 80 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிறப்பு பொருளா தார மண்டலத்திலுள்ள நோக்கியா சீமென்ஸ் நெட் வொர்க்ஸ் எலக்ட்ரானிக் தொழிற்சாலையில், கடந்த ஆண்டு 250 தொழிலாளர் கள் ஒன்று கூடி சிஐடியு தொழிற் சங்கத்தை துவக்கி னர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சிஐடியு தொழிற் சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதற் கிடையில், சங்கம் அமைத்த காரணத்திற்காக 72 தொழிலாளர்களை நிர்வாகம் தற் காலிகப் பணி நீக்கம் செய்தது. இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி கடந்த 18 மாதத் திற்கு மேலாக போராடி வரு கிறார்கள். இந்த பிரச்சனை குறித்து சென்னையில் தொழி லாளர் துறை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடத்தியதில், தொழிற் சங்கத் துடன் ஒப்பந்தம் ஏற்படுத் திக் கொள்ள மறுப்பதுடன் தொழிற்சங்கத்தை முற்றி லும் கைவிடவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இத னால் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் ஏற்பட வில்லை. ஆலை நிர்வாகத் தின் இந்த முடிவுக்கு தொழி லாளர்கள் எதிர்ப்புத் தெரி வித்து போராடி வருகிறார்கள்.தொழிற்சங்கத்தை கைவிட்டால் மட்டுமே ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என்பதில் ஆலை நிர்வாகம் பிடிவாதத் துடன் இருந்து வருகிறது. நிர்வாகத்தின் அடாவடித் தனத்தை கண்டித்தும் சிஐ டியு சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத் திக்கொள்ள வலியுறுத்தியும் வியாழக்கிழமை ஜூலை 11 அன்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் ஒரகடம் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து நோக்கியா தொழிற்சாலையை நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப் பட்டம் நடத்த காவல் துறை யிடம் அனுமதி பெற்றிருந் தனர்.திட்டமிட்டபடி தொழி லாளர்கள் ஒன்று திரண்ட னர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சி புரம் மாவட்ட துணை கண் காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் பட்டிருப்பதாக கூறி அனை வரையும் கைது செய்தனர்.
இதில், மாநிலத் துணைத் தலைவர் சிங்காரவேலு, சிஐ டியு மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார், தலைவர் எஸ். கண்ணன், எம். ஆறு முகம், ஜி.கண்ணன் நோக் கியா ஆலையின் சங்க செய லாளர் விஐயகுமார், பொரு ளாளர் குமார், துணைத் தலைவர் வாசுதேவன் உட் பட 80 தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் அந்த பகுதியில் பதற்றம் அதிகரித் துள்ளது.இந்த சம்பவம் குறித்து, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ கூறுகையில், ஸ்ரீபெரும்ப தூர் மற்றும் ஒரகடம் பகுதி யில் உள்ள சிறப்பு பொ ருளாதார மண்டலங்களில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங் கம் அமைக்கும் சட்ட ரீதி யான உரிமை கூட மறுக் கப்படுகின்றது என்றார்.
இப்பகுதிகளில், ஜன நாயக உரிமைகளான ஊர் வலம், ஆர்ப்பாட்டம் நடத் துவதற்கு கூட காவல்துறை அனுமதிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஜி.சுகுமாறன் கண்டனம்இந்தஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் முறை யாக அனுமதி விண்ணப்பம் அளிக்கப்பட்டும், கடைசி நேரத்தில் அனுமதி மறுப்ப தாக காவல்துறை கூறியிருப் பது ஜனநாயக விரோத நட வடிக்கையாகும் என்று சிஐ டியு மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் கண் டனம் தெரிவித்துள்ளார்.தமிழகஅரசு, தொழிலாளர் பிரச்சனைகளில் காவல் துறை தலையிடுவதையும், கைது, வழக்கு போன்ற நட வடிக்கைகளையும் கை விட்டு கைது செய் யப்பட்ட அனைவரும் விடுதலை செய்ய வேண்டுமெனவும், தொழிலமைதியை உறுதிப் படுத்திட உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டுமென  சிஐடியு தமிழ்மாநி லக்குழுவலியுறுத்திகேட்டுக் கொள்கிறது என்றும் ஜி.சுகு மாறன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment