Thursday 11 July 2013

எல்.ஐ.சி காப்போம்! தேசம் காப்போம்! 1500 கி.மீ பிரச்சாரப் பயணம்


எல்.ஐ.சி காப்போம்! தேசம் காப்போம்! 1500 கி.மீ பிரச்சாரப் பயணம்
இன்று களியக்காவிளை வருகிறது


-தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 32 வது மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 3 முதல் 6 வரை நடைபெறுவதையொட்டி 1500 கி.மீ பிரச்சாரப் பய ணம் கேரளாவின் கய்யூரில் துவங்கி நடைபெற்று வரு கிறது. ஜூலை 12 காலை தமிழக எல்லையில் களியக்கா விளைக்கு வந்து சேருகிற அப்பயணம் ஜூலை 27 சென்னையில் நிறைவடைய உள்ளது.கேரளாவில் ஒரு வாரம்மத்திய அரசு இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, சிறு வணிகம் போன்ற துறைக ளில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பொதுத் துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கான சட்ட திருத்தங்களையும் இன் சூரன்ஸ் மசோதாவில் முன் மொழிந்துள்ளது. இந்நிலை யில் மக்கள் கருத்தை திரட் டுகிற முயற்சியாக இப்பிர சாரப் பயணம் நடத்தப் பட்டு வருகிறது. கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், திரு வனந்தபுரம் போன்ற முக் கிய நகரங்களிலும் பல்வேறு சிறு ஊர்களிலும் ஒருவார காலம் கலைநிகழ்ச்சிகளோடு பிரச்சாரம் நடந்தேறியுள் ளது. தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் தலைவர் எம். குன்னிக் கிருஷ்ணன், துணைத்தலை வர் கணபதி கிருஷ்ணன், இணைச் செயலாளர் பேபி ஜோசப் ஆகியோர் தலைமை ஏற்றுள்ளனர்.தமிழகத்தில்15 நாட்கள்இன்று (ஜூலை 12) களி யக்காவிளையில் பிரச்சாரப் பயணம் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் எம். கிரிஜா, என்.சுரேஷ்குமார் (மதுரை) வி.மதுபால், முத்து குமா ரசாமி (திருநெல்வேலி) ஆகி யோர் தலைமையில் தமிழ கப் பிரச்சாரத்தை துவங் கவுள்ளது. ஜூலை 15 அன்று அருப்புக்கோட்டையில் நடைபெறவுள்ள கலை மாலையில் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் பொது செய லாளர் கே.சுவாமிநாதன் பங்கேற்கவுள்ளார்.
இப்பிரச்சாரத்தில் ஆர். தர்மலிங்கம், எஸ்.சிவசுப்ர மணியம், எல்.பழனியப்பன் ஆகிய தென் மண்டல தலை வர்களும், எஸ்.செல்வராஜ் (தஞ்சாவூர்) வி.சுரேஷ் (கோவை) எஸ்.ரமேஷ் குமார் (சென்னை) ஆர்.நரசிம்மன் (சேலம்) எஸ்.ராமன் (வேலூர்) கே.மனோகரன் (சென்னை) ஆகிய எல்.ஐ.சி கோட்டச் சங்க பொதுச் செயலாளர் களும் பங்கேற்கவுள்ளனர்.நிறைவு நிகழ்ச்சி23 நாட்கள் நடைபெறு கிற இப்பிரச்சாரத்தின் நிறைவு நிகழ்ச்சி வட சென்னை திருவொற்றியூரில் ஜூலை 27 அன்று நடைபெற வுள்ளது. இதில் அரசியல் தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும் பங் கேற்று உரையாற்றவுள்ள னர்.

வடசென்னை பகுதிக ளில் ஜூலை 25 முதல் 27 வரை அகில இந்திய ஜன நாயக மாதர் சங்க அகில இந் தியச் செயலாளர் உ.வாசுகி, சி.ஐ.டி.யு மாநிலச் செயலா ளர் ஆர்.கருமலையான் ஆகி யோர் பங்கேற்கிற பிரச்சா ரக் கூட்டங்களும், பிரச்சா ரங்களும் நடைபெறுகின்றன.கலைக்குழுக்கள்இப்பிரச்சாரத்தில் மதுரை சுடர் கலைக்குழு, வேலூர் சாரல் கலைக்குழு, சென்னை பாரதி கலைக் குழுவின் பாடல்கள், கிராமிய நடனம் ஆகியவை நடை பெறவுள்ளன.      thanks to theekkathir

No comments:

Post a Comment