Sunday 21 July 2013

இது தேசத்தின் இழிவு


இது தேசத்தின் இழிவு

உலகில் பல நாடுகளில் பெண்களின் நிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அவல மானதாகவே இருக்கிறது. சென்ற ஆண்டு ஜி-20 அமைப்பைச் சேர்ந்த 20 நாடுகளில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வு, அவற்றில் பெண்கள் வாழ் வதற்கு மிக மோசமான இடம் இந்தியாதான் என்று அறிவித்தது.
அந்த நிலைமையை மாற்று வதற்கு திட்டவட்டமான எந்த நடவடிக்கையை யும் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் தெளி வான அறிகுறிதான் பெண்களுக்கு எதிரான குற் றங்கள் அதிகரித்துக் கொண்டே போவது.தேசிய குற்றப் பதிவுத் துறை ஆவணங்களின் படி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு பெண் இங்கே ஏதேனும் குற்றத்திற்கு இலக்காகிறார். ஒவ்வொரு 29 நிமிடத்திற்கும் ஒரு பெண் வன் புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 77 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணைக் கொ டுமையால் மரணத்தைச் சந்திக்கிறார். இக் குற்றங்களில் பெரும்பாலானவை கணவன்மார் களாலோ நெருங்கிய உறவினர்களாலோ செய்யப் படுபவைதான்.
ஒவ்வொரு 9 நிமிடத்திற்கும் ஒரு பெண் கணவன் அல்லது உறவினரின் குற்றச் செயலால் பாதிக்கப்படுகிறார்.குற்றங்கள் நிகழும் சூழல்கள், பின்னணி போன்றவை மாறுபட்டாலும் இந்திய சமுதாயத் தின் ஆணாதிக்கக் கட்டமைப்புதான் அடிப் படை குற்றவாளி. பெண்களை ஆண்களின் தேவைகளுக்கு சேவை செய்தாக வேண்டியவர் களாக மட்டுமே நடத்துகிற சமூகக் கோட்பாடு கள்தான் இக்குற்றங்களைத் தொடர்கதையாக்கு கின்றன. ஐ.நா. குழந்தைகள் நிதியமைப்பு சார் பில் இந்தியாவில் இளைஞர்களிடையே நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வு, ஆண்களில் 57 விழுக் காட்டினர் மனைவிமார்களை அடித்துத் தாக்கு வதில் தவறில்லை என்று கருதுகிறார்கள் என தெரிவிக்கிறது. கொடுமை என்னவென்றால் பெண்களில் 53 விழுக்காட்டினர் மனைவி யரைக் கணவர்கள் அடிப்பது நியாயம்தான் என்று கருதுகிறார்களாம். ஆணாதிக்கம் ஆழ மாக ஊன்றியிருக்கிறது என்பதற்கு இது திட்ட வட்டமான சாட்சி.
பல நூற்றாண்டுப் பிரச்சனை என்றாலும், அதைச் சொல்லி, இன்றும் தொடர்கிற கொடு மைகளை நியாயப்படுத்த முடியாது. நிலைமை யை மாற்றுவதற்கான திசையில் செல்ல ஆட்சி யாளர்களும் அரசு எந்திரமும் அமைப்புகளும் என்ன செய்தன? மிகப்பரபரப்பான செய்திகள் வருகிறபோது மட்டும் சில தற்காலிக நடவ டிக்கைகளில் ஈடுபடுவதன்றி, சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இறுகிப் போயிருக் கிற ஆணாதிக்கக் கருத்தாக்கத்தைத் தகர்க்க செய்தது என்ன?நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங் களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை உறு திப்படுத்துகிற அரசியல் உறுதி மத்திய அரசுக்கு இல்லை. அதை எதிர்க்கிற கட்சிகளுக்கும் இல்லை. பெண்களின் உரிமைகள் குறித்து சடங்குபோல ஆண்டுக்கொருமுறை சில விளம்பரங்களை வெளியிடுவதால் மட்டும் விழிப்புணர்வு ஏற்பட்டு விடாது. பாலின சமத்துவத்தைக் கொள்கை யாகவே ஏற்றுக்கொண்டு மக்களின் அன்றாட கவனிப்புக்கு உள்ளாகிற வகையில் பரப்புவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனுக்குடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதும் முக்கி யத் தேவை. இதை ஒரு முன்னுரிமைப் பணியாக மேற்கொள்கிற கடமை அரசியல் இயக்கங்களுக் கும் பொது அமைப்புகளுக்கும் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது ஒட்டுமொத்த தேசத்தின் இழிவு என்ற உறுத்தல் உணர்வுடன் இந்த அணுகுமுறை இனியேனும் தாமதமின்றித் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment