Tuesday 30 September 2014

IDA உயர்வு



IDA உயர்வு

01-10-2014 முதல் IDA 6.9% உயர்ந்து மொத்த
 IDA 98.2% ஆக இருக்கும் .செய்தி படிக்க :-Click Here

Thursday 25 September 2014

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா



பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் தர்ணா

திருநெல்வேலி, செப் .24-ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றுவலியுறுத்தி திருநெல்வேலியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் சார்பில் கூட்டு தர்ணா போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் சி. சுவாமிகுருநாதன், ஆர். கணபதிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.மாநில அமைப்புச் செயலாளர்கள் டி.கோபாலன், பி. சண்முகம், மாவட்டச் செயலாளர்கள் என். சூசைமரிய அந்தோணி, கணேசன் ஆகியோர் பேசினர். தர்ணாவில் 250-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான தடைகளை நீக்க வேண்டும்.பண்டிகைக் கால போனஸ் வழங்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வுக்கால பலன்களை அமல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 30 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.



Sunday 21 September 2014

மக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...


மக்கள் சொத்தான BSNLஐ மூட மத்தியஅரசு முயற்சி ...

அருமைத்தோழர்களே!இந்தியமக்கள்
 சொத்தான பொதுத்துறை
  BSNL நிறுவனத்தை  மூட மத்திய
 BJP-மோடி அரசு எத்தனிக்கிறது.
 தபால்-தந்தி துறையாக இருந்து,
 அதன்பின் டெலிகாம் துறையாக
 பரிணமித்து நாள் ஒன்றுக்கு
 10 கோடி லாபம்
                                ஈட்டிக்கொண்டிருந்த நமது துறையை
                             திட்டமிட்டு BSNLநிறுமனமாக மாற்றிய
                                இதே BJP அரசு இன்று மூடு விழா
                             நடத்திட  துடிக்கிறது. மத்திய அரசின் தேசவிரத
                            முடிவிற்கு எதிராக உக்கரமான ஒன்றுபட்ட
                             போராட்டம் நடத்தி , மத்திய அரசின் இந்த மக்கள்
                                        விரோத முயற்சியை முறியடிப்போம்  ...
  மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும். 

Saturday 20 September 2014

மாநில சங்க சுற்றறிக்கை


மாநில சங்க சுற்றறிக்கை

Read | Download

பெருந்திரள் தர்ணா - 23/09/2014
தர்ணா போராட்டத்திற்கான 30 அம்ச கோரிக்கைகள் மற்றும் தமிழ் மாநில கூட்டுப் போராட்டக்குழு வேண்டுகோள்

Wednesday 17 September 2014

மாநில சங்க சுற்றறிக்கை


Read | Download

ஆர்ப்பரித்த அலைகடலால்…………. அமோக வெற்றி!!!!!!
காலவரையற்ற உண்ணா நோன்பும், ஒரு நாள் வேலை நிறுத்தமும், பெருந்திரள் உண்ணாநோன்பும் -மகத்தான வெற்றி




Read | Download

பொதுச் செயலர் CMDக்கு கடிதம்
140 வேலூர் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணிகோரி CMDக்கு கடிதம்



Tuesday 16 September 2014

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது




Monday, 15 September, 2014




Read | Download

காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது…
காலவரையற்ற உண்ணாவிரதம் 2வது நாள் தொடர்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து திரளாக தோழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


Friday 12 September 2014

மாநிலச் சங்க செய்திகள்


Read | Download

சுற்றறிக்கை எண்:169- பொறுப்பதிற்கில்லை தோழா! பொங்கி எழுவோம்!


Read | Download

தமிழ் மாநில மாநாடு
தமிழ் மாநில மாநாடுஅக்டோபர் 11 முதல் 13 வரை திருச்சியில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.



Read | Download

தமிழ் மாநில செயற்குழு கூட்டம்
தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 27.09.2014 அன்று நடைபெற இருக்கிறது - நோட்டீஸ்

Tuesday 9 September 2014

அநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...


அநீதி களைய BSNLEU +TNTCWU மாநிலசங்கங்கள் போர்...

அருமைத் தோழர்களே! ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை தானே அதை ஓதிக்கித்தள்ளு  என துச்சமாக நினைக்கும்  மாநில நிர்வாகத்திற்கு நமது சக்தியை  உணர்த்திட, ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏற்பட்டுள்ள அநீதியை  களைந்திட, நமது  BSNLEU+TNTCWU தமிழ் மாநிலசங்கங்கள்  எதிர் வரும் 15.09.2014 முதல்  தொடுத்துள்ள போர்...வெற்றிபெற புறப்படட்டும்  நமது போர்ப்படை ... திரளுவோம் சென்னை முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில்....

Monday 8 September 2014

நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்



Read | Download

நெய்வேலி NLC ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்
நீதிமன்ற தடையையும் மீறி நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்

Saturday 6 September 2014

நமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள்


நமது உளப்பூர்வமான ஓணம் வாழ்த்துக்கள்







மாநிலச் சங்க செய்திகள்



Read | Download

சுற்றறிக்கை எண்:168 : BSNL சேமநலக் கூட்ட முடிவுகள்


Read | Download

சுற்றறிக்கை எண்:167 :- கோரிக்கைகள் வெற்றிபெற வேலை நிறுத்தம்-JAC முடிவு

Friday 5 September 2014

கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா?

  

நெத்தியடிக் கேள்விகள் கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா

                                                                     க.சுவாமிநாதன்

மோடி அவர்களே! நீங்கள் செப்டம்பர் மாதம் ஒபாமாவைச் சந்திக்கும்போது, உலகம் முழுவதும் எந்தத் தடைகளும் இல்லாமல் உங்கள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கடை விரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களே! ஆனால், 2008 பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் உங்கள் நாட்டில் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் திவாலாகி வீழ்ந்தது ஏன் என்ற கேள்வியைக் கேட் பீர்களா?எங்கள் நாட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி 57 ஆண்டுகளாகவும், பொதுக் காப்பீட்டுத் துறையைத் தேசிய மயமாக்கி 41 ஆண்டுகளாகவும் திவால் என்ற வார்த்தையே எங்கள் காதுகளில் விழவில்லையே!
ஆனால், நாங்கள் இந்தியாவில் டாட்டாவோடு கைகோத்துக் காப்பீட்டு இணைவினைச் செய்ய அனுமதித்த உங்களின் பிரம்மாண்ட நிறுவனம் ஏ.ஐ.ஜி., நிதி நெருக் கடிச் சூறைக்காற்றில் தடுமாறிப்போனதே! இங்கே, அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைபற்றி பேசுகிறோம். ஆனால், உங்கள் நாட்டிலோ ஏ.ஐ.ஜி-யின் 80 சதவீத பங்குகளை அரசாங்கம் வாங்கி அல்லவா நெருக்கடியிலிருந்து அதைக் காப்பாற் றினீர்கள் என்று கேட்பீர்களா?எல்.ஐ.சி. 57 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆனால், இந்திய காப்பீட்டுத் துறை அந்நிய முதலீட் டுக்கு 26 சதவீதம் என்ற வரையறையோடு திறந்துவிடப்பட்டு 13 ஆண்டுகளுக்குள்ளாக இங்கே வந்த அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி-யும், ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி-யும் வந்த வழியே திரும்பி ஓடி விட்டன. ஆயுள் காப்பீடு என்பது பாலிசிதாரரோடு உருவாகும் நீண்ட கால ஒப்பந்தம். 10 ஆண்டுகள்கூட நீடிக்காமல் நடையைக் கட்டும் இவர் களுக்கு எதற்காக, எந்த நம்பிக்கையில் இன்னும் இன்னும் கதவுகளைத் திறக்க வேண்டும்?யாருக்காகக் கூவுகிறீர்கள்?ஜெட்லி அவர்களே!
உங்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆண்டு ஆய்வறிக்கைகளைப் புரட்டிப் பாருங்கள். காப்பீட்டுத் துறையில் கடந்த 13 ஆண்டு களில் 26 சதவீத வரையறையோடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதே, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வந்தது? எல்.ஐ.சி. 11வது ஐந்தாண்டுத் திட்டத்துக்குத் திரட்டித் தந்துள்ள தொகை ரூ. 7,04,000 கோடி. காப்பீட்டுத் துறையில் 13 ஆண்டுகளில் வந்துள்ள மொத்த அந்நிய முதலீடே ரூ. 6,300 கோடிதான். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால், நீங்கள் மடுவின் மீது ஏறி நின்று அது தான் பெரிது என்று கூவுவீர்கள் என்றால், நீங்கள் யாருக்காகக் கூவுகிறீர்கள் என்று கேட்க மக்க ளுக்கு உரிமை இருக்கிறது.ஹீரோவுக்கே இதுதான் கதி!எல்.ஐ.சி.யின் உரிமப்பட்டு வாடா விகிதம் 99.5 சதவீதம் உலகத் தில் எந்தக் காப்பீட்டு நிறுவன மும் செய்யாத சாதனை!மும்பை தாஜ் ஓட்டல் மீதான தீவிரவாதத் தாக்குதல் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதில் தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப் படைத்தளபதி ஹேமந்த் கர்கரே.
அவருடைய பாலிசி உரிமத்தை அவர் இறந்த 48 மணி நேரத்துக்குள் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டித் தந்தது எல்.ஐ.சி. ஆனால், அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். அந்த நிறு வனமோ எங்கள் பாலிசி விதி முறைகளில்தீவிரவாதம் உள்ளடங்கவில்லை.அவர் உயிருக்குஆபத்துஎன்று தெரிந்தே அந்தச் செயலில் ஈடுபட்டார்என்று கூறி, உரிமத் தொகையை வழங்க மறுத்துவிட்டது. தேசம் போற்றிய ஹீரோவுக்கே இது தான் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன?இயர்போனைக் கழற்றுங்கள்!மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெரு நிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்க ளுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்! அதன் பேரிரைச்சலில், காப்பீட்டுப் பய னுக்காக ஏங்கும் ஒரு சாமானிய மனிதரின் குரல் கேட்காமல் போய்விடக் கூடாது.

நன்றி : புதிய ஆசிரியன்



காலவரையற்ற உண்ணாவிரதம்.TNTCWU&BSNLEU




Read | Download

பணி நீக்கம் செய்யப்பட்ட வேலூர் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதம்.

Thursday 4 September 2014

மறைமுக விற்பனைக்கு நமது BSNL



மறைமுக விற்பனைக்கு நமது BSNL

   பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNL நிறுவனத்தை
 BSNL நிறுவனத்தோடு இணைக்க DOT அமைப்பு
 தேதியை நிர்ணயம் செய்துவிட்டது . 
வரும் 31-07-2015 அன்று இரண்டு நிறுவனங்களும்
 இணைக்கபட்டுவிடுமாம். சங்கங்களிடம் (ஒப்புக்கு) 
ஆலோசனை கேட்டு அமைச்சரவை குறிப்பை
 வரும் 2015 ஏப்ரல் மாதம் அமைச்சரவை கூட்டத்தில்
 சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுமாம் 
.செய்தி படிக்க :-Click Here

Tuesday 2 September 2014

New Recruitment Rules for the cadre of TTA.




CHQ writes to the Corporate Office, regarding the non-consideration of the suggestions given by BSNLEU, in framing the new Recruitment Rules for the cadre of TTA.<<< view letter>>>

15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்





வேலூர் ஒப்பந்த ஊழியர் பிரச்சனை - 15.09.2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ்


Read | Download